சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களின் நலத்திட்ட உதவிகளுக்காக 2 லட்சத்து 41 ஆயிரத்து 350 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 40ஆவது செயற்குழுக் கூட்டம், 28.03.2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், எமது மன்றத்தின் துணைத்தலைவர் A.H. முஹம்மது நூஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
செயற்குழு உறுப்பினர் ஹாபிழ்.S.A.C. அஹ்மது ஸாலிஹ் அவர்கள் இறைமறை ஓதி இக்கூட்டத்தை துவக்கி வைக்கமன்ற ஆலோசனைக்குழு உறுப்பினர் S.M.A. சதக்கத்துல்லாஹ் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு:
ஷிஃபா மூலமாக நமதூர் வறிய மக்களிடம் இருந்து வந்த கடிதங்களை உறுப்பினர்கள் முன்னிலையில் வாசித்தப்பின் 17 நபர்களின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2,05,050-யும், ஒரு நபரின் சிறு தொழிலுக்காக ரூ.11,300-யும், மற்றொருவரின் கல்விக்காக ரூ.15,000-மும், ஷிஃபாவின் அவசர மருத்துவ தேவைக்கான இருப்புதொகையாக ரூ.10,000-மும் (2 காலாண்டு ) ஒதுக்கீடு செய்யப்பட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே.
தனிக் குழு:
எம் மன்றத்தில் இது வரை இணையாத காயல் சகோதரர்களையும், நீண்ட நாள் தொடர்பில் இல்லாத உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டதை செற்குழு உறுப்பினர்களுடன் இக்குழு பகிர்ந்துக்கொண்டது. மேலும் ரியாத் மாநகர்க்கு புதிதாக வந்து இருக்க கூடிய காயலர்கள் நம் நல மன்றத்தில் தங்களை இணைத்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டார்கள்.
ஹெபடைடிஸ் பி (Hepatitis B) தடுப்பூசி:
செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம் பைஸல் ஹெபடைடிஸ் பி நோய் பற்றிய விளக்கத்தையும் அதன் கொடுமைகளையும் விளக்கி, இது சம்பந்தமாக மருத்துவரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளையும் எடுத்து சொல்லி அதில் இருந்து நமதூர் மக்களை காக்கும் பொருட்டு RKWA அமைப்பின் மூலமாக மற்றும் ஷிஃபா வின் ஆலோசனையை பெற்று விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஷிஃபாவிடம் இது பற்றி முழு விவரமும் பெறப்பட்ட பின்பு முடிவு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
தகுதி மதிப்பெண்: (கட்-ஆஃப்):
நம்முடைய அமைப்பின் மூலமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுத்தி வரும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான தகுதி மதிப்பெண் (கட்-ஆஃப்) கூடுதலாகப் பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசு வழங்கியதையும், அதே போல் இந்த வருடமும் சிறப்பாக செய்ய இருப்பதையும் அது சம்பதமாக நமதூர் பள்ளி கூடங்களில் நோட்டீஸ் பிரசுரம் வினியோகம் செய்ததையும் மற்றும் அனைத்து பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டதையும் நினைவு கூர்ந்து, இதனால் நம் மக்களின் பணம் வீண் விரயமாவதை தடுத்து இருக்கிறோம் என்றும் துணைப் பொருளாலர்.வெள்ளி.S.A.சித்தீக் அவர்கள் விளக்கினார்.
ரமழான் உணவுத் திட்டம்:
வழமைப்போல் கடந்த வருடங்களில் செயல் படுத்தி வருகின்ற ரமழான் உணவுப்பொருள் வழங்கும் திட்டம் இந்த வருடமும் செயல் படுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எம்மன்ற துணை செயலாளர் சகோதரர் முஹ்சின் அவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, ரமழான் உணவு திட்டத்திற்கான உணவுப் பொருட்களை குறித்த நேரத்தில் ஏற்பாடு செய்யமன்ற செயற்குழு உறுப்பினர்கள் தங்களின் பங்களிப்பை குறைந்த பட்சம் (சவுதி ரியால் 150/) துரிதமாக தந்துதவி முன்பதிவு செய்யும்படியும் கேட்டு கொண்டார்கள். அதிக நன்மை தரக்கூடிய காரியத்தில் நம்மன்ற பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களின் பங்களிப்பை தங்களால் இயன்ற அளவு முன் வந்து தரும்படியும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலதிக தொடர்புக்கு தன்னை (சகோ முஹ்சின் அவர்களை) 056 4035113 என்ற கைப்பேசியில் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
பார்வையாளர்கள் கருத்து:
இரண்டு பார்வையாளர்களாக எம் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் சகோ. தைக்கா சாஹிப் மற்றும் சகோ பைஸல் அஹ்மத் அவர்களும், சிறப்பு அழைப்பாளர்களாக மற்றும் தாயகத்திலிருந்து வருகைத் தந்திருந்த சென்னை K.A.S.எண்டர்ப்ரைசெஸ் உரிமையாளர் A.கலீல் அவர்களும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.
A.கலீல் அவர்கள் இந்த செயற்குழு கூட்டத்தில் தாம் பங்கேற்க அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்து , தங்களுடைய வேலை பளுவுக்கிடையிலும் நமதூர் மக்களின் நன்மைக்காக கூடி அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்களை பரிசீலித்து உதவி வழங்கி வருவது மிகுந்த மகிழ்ச்சி தருவதாககும் அல்லாஹ் இதற்கு சிறப்பான கூலியை தருவான் என்றும், இன்னும் ரமழான் உணவு வழங்குவது சிறந்த செயல் என்றும் , இதில் மற்ற காயல் நலமன்றத்துடன் இணைத்து பயனாளிகளை ஒப்பிட்டு ஒரே நபர்க்கு மீண்டும் போகாத வண்ணம் பார்த்து கொள்ளும் படியும் கேட்டு கொண்டு மற்றும் பல நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.
சகோ. தைக்கா சாஹிப் அவர்கள் நம்முடைய மிகுதியான பணம் மருத்துவத்திற்கு செலவிடுவதை பார்த்து அல்லாஹ் இந்த மாதிரியான கொடிய நோயில் இருந்து நம் மக்களை பாதுகாப்பானாக என்று பிரார்த்தித்து நம்முடைய பொருளாதரத்தை மற்ற நல்ல செயல்களுக்கும் செலவிட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
சகோ பைஸல் அஹ்மத் அவர்களும் தன்னுடைய சகோதரரை வழிமொழிந்து இந்த செயற்குழுவில் பங்கேற்பது தனக்கு மிகுந்த சந்தோசத்தை தருவதாகும்,புதிய உத்வேகத்தை தருவதாகவும் தன்னை பார்வையாளராக அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
41ஆவது செயற்குழு:
எம் மன்றத்தின் அடுத்த செயற்குழு வருகிற மே 23 ம் தேதி நடத்துவது என்றும், அதற்காக சகோ.தாவூத் இத்ரீஸ்,சகோ.ஹசன்,சகோ.வாவு கிதர் முஹம்மத், சகோ.உமர் அப்துல் லதீப்,ஹாஜியார் சாலிஹ் மற்றும் சகோ,.இஸ்மத் நவ்பல் அவர்கள்ஒருங்கினைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நன்றி உரை:
இச்செயற்குழு கூட்ட ஒருங்கினைப்பாளர்கலான சகோதரர்கள் A.H.முஹம்மது நூஹ்,ஹாஜி செய்யத்,S.M.A.சதக்கத்துல்லாஹ்,K.M.N.சம்சுத்தீன்,S.A.C.சாலிஹ் மற்றும் K.S.சபியுல்லாஹ் அவர்களின் அனுசரணையோடு நடத்தப்பட்டது.
இக்கூட்டம் நடைபெற இட வசதி செய்து தந்த சகோதரர் A.H.முஹம்மது நூஹ் மற்றும் அருமையான காயல் களரி சாப்பாடு தயார் படுத்தி தந்த சகோதரர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஆலோசனைக் குழு உறுப்பினர் M.E.L.நுஸ்கி அவர்களால் நன்றி உரை நிகழ்த்தப்பட்டு, இறுதியாக செயற்குழு உறுப்பினர் ஹாஜியார் சாலிஹ் அவர்கள் துஆ ஓதி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓத கூட்டம் நிறைவுபெற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.M.செய்யது இஸ்மாயில்
ஊடகக் குழு
ரியாத் காயல் நல மன்றம்
ரியாத் - சஊதி அரபிய்யா
ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் முந்தைய கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |