எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்குமானால், தேசிய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும் என - திமுக தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் என்.பி.ஜெகனுக்கு ஆதரவு கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், அதன் மாநில நிர்வாகிகள் பேசியுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கீழ், திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு கோரும் வகையில், அக்கட்சியினர் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து பரப்புரையில் ஈடுபட்டனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |