ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட “காயலர் தினம் - 2014” ஒன்றுகூடல் நிகழ்ச்சியில், அமீரகத்தில் புகழ்பெற்ற அல்குரைர் முதலீட்டு நிறுவனத்தின் துணை அதிபர் ஈஸா அல்குரைர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். அமீரகம் வாழ் காயலர்கள் திரளாகப் பங்கேற்ற இந்நிகழ்ச்சி குறித்து, துபை காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
துபாய் காயல் நல மன்றத்தின் “காயலர் தினம் 2014” வெகு விமரிசையாய் களை கட்டியது – அல் குரைர் முதலீட்டு நிறுவனத்தின் துணை அதிபர் ஈசா அல் குரைர் கலந்து கொண்டார்.
காயலர் தினம் 2014:
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் துபாய் காயல் நல மன்றத்தின் சிறப்பு பொதுக்குழுவான காயலர் தினம் 2014 துபாய் சத்வா வில் அமைந்துல்லா அல்-சஃபா பூங்காவில் வைத்து மிகச்சிறப்பாக மார்ச்28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னேற்பாடுகள்:
கடந்த சில சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள் மழை காரணமாக திட்டமிட்ட படி சிறப்பாய் நடத்த முடியாமல் போனதால், இந்த தடவை மிக முன் ஜாக்கிரதையாக தட்பவெப்ப நிலை அறிக்கை கூட்ட நிகழ்விற்கு கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு முன்னரே பெறப்பட்டு வைபவக்கமிட்டியினர் ஊர்ஜிதம் செய்து கொண்டனர்.
காயலர்கள் வருகை:
வழமை போல் கூட்ட இடத்திற்கு “அல் சஃபா” பூங்காவிற்கு மக்கள் காலை முதலே வரத்தொடங்கி விட்டனர். வந்திருந்ததோர் அனைவரும் ஒருவருக்கொருவர் முகமன்கள் கூறி செய்திகள் கருத்துகள் பரிமாறிக்கொண்டிருந்த வேளையில் சகோதரர் அஹமத் சுலைமான் அவர்களால் அழைத்து வரப்பட்ட திரு விருத்தாசலம் பிரகாஷ் அவர்கள் பல குரலில் பேசி வந்திருந்தோரை வியப்புக்குள்ளாக்கி பொழுது போக்கினார். சிறார்கள் அங்கே நிலவிய மிதமான சூழலில் தங்களை மறந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தனர். பெண்கள் தங்களுக்குண்டான பொது மற்றும் மார்க்க அறிவு போட்டிகளுக்குண்டான ஏற்பாட்டு வேளைகளில் மும்முரமாக காணப்பட்டனர்.
அறிமுகக் கூட்டம்:
ஜும்ஆ தொழுகைக்குப்பின்னர் சிறப்பு பொதுக்குழுவின் அறிமுகக்கூட்டம் ஆரம்பமானது. கூட்டத்தை மன்றத்தின் தலைவர் JSA புஹாரி அவர்கள் தலைமை ஏற்று சிறப்பித்தார். ராவன்னா அபுல் ஹசன், கத்தீப், துணி உமர், நூஹு சாஹிப், ME ஷேக், ஸ்ரீலங்கா வில் இருந்து வருகை புரிந்த பல்லாக்கு லெப்பை மற்றும் ஓமானில் இருந்து வந்திருந்த அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்றச் சேவைகள் குறித்து விளக்கவுரை:
மன்றத்தின் துணை தலைவர் சாளை ஷேக் சலீம் (GAME UNCLE) வரவேற்புரை ஆற்றினார். மன்ற தலைவர் தனது உரையில் இந்த காயலர் தினம் இவ்வளவு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைத்து நல்லுள்ளங்களையும் நன்றியோடு நினைவு கூர்ந்தார். மன்றம் ஆற்றி வரும் பல நல்ல சேவைகளை பட்டியல் இட்டு காட்டியதோடு மென்மேலும் தொண்டுகள் ஆற்றுவதற்கு மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பின் அவசியத்தை கோடிட்டு காட்டினார். சிறப்பு விருந்தினர்கள் பல்லாக் லெப்பை மற்றும் அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மதிய உணவு:
இதற்கிடையில் பெண்கள சிறுவர் சிறுமியர்களுக்குண்டான சாப்பாடு பரிமாறப்பட்டு முடிந்த நிலையில் ஆண்களுக்குண்டான பந்தி தயார் ஆனது. காயல் களரி, கத்திரிக்காய் மாங்காய் மற்றும் ருசிமிக்க ரசம் உட்பட தர்பூசனிக்காய் ஹல்வா போன்றவை பரிமாறப்பட்டன. இத்தகைய மன மணக்கும் சாப்பாட்டை தயார் செய்வதற்கு மிகவும் சிரத்தை எடுத்து ஒவ்வொரு பொருளாக தேடி தேர்ந்தெடுத்து வாங்கிய உணவுக்கமிட்டீ உறுப்பினர்கள் துணி உமர் அவர்கள் தலைமையில் அஹ்மத் முஹியதீன், சேட், ஜாஃபர், யஹ்யா முஹியத்தீன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.
இப்பாரம்பரிய உணவை சமைப்பதில் கைதேர்ந்த சகோதரர் மஸ்தான் அவர்களை அபுதாபியிலிருந்து அனுப்பித்தந்த, அபுதாபி காயல் நல மன்றத்தின் தலைவர் ஹபீப்ரஹ்மான் ஆலிம் அவர்களுக்கு எம் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேபோல் இந்த ஒன்றுகூடல் மிகவும் சிறப்பாக நடந்தேற காலை சிற்றுண்டி ஏற்பாடுகள் செய்த ஈசா, பிரபு சுல்தான், போலீஸ் இப்ராஹீம், தளவாட சாமான்கள் ஏற்பாடு செய்த சுகரவர்த்தி, ஜாபர் சாதிக், பைசல் மற்றும் வாகனங்கள், தொழிலாளர்கள் ஏற்பாடு செய்த ராவன்னா அபுல்ஹசன், தேநீர் மற்றும் குடிநீர் ஏற்பாடுகளை கவனத்துடன் செய்த ஹுசைன் பாரூக் மற்றும் நிகழ்ச்சி திடலில் உறுப்பினர்கள் தொடர்பு தகவல்கள் சேகரிப்பு, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை உட்பட உறுப்பினர்கள் சம்பந்தமான தகவல்கள் பரிமாற்றங்கள் செய்வதற்கு உதவிய உமர் காலித், தஸ்தகீர், நூஹு லெப்பை, சுல்தான், முத்து ஃபரீத், முனவ்வர் அஹ்மத், அலாவுதீன், அப்துல் ஹமீத், மற்றும் ஒலி அமைப்பு செய்து உதவிய சாஜித் உட்பட சிறுவர் சிறுமியர் பெரியவர்கள் வேடிக்கை விளையாட்டுக்கள் நடத்தி மக்களை மகிழ்வித்த GAME UNCLE என்ற சாளை சலீம் அனைவரையும் இம்மன்றம் மனதார நன்றியுடன் பாராட்டுகிறது.
மேலும், இம்மன்றம் உருவாக காரணமானவர்களில் ஒருவரும், நிர்வாகிகளில் ஒருவருமான ஹாஜி விளக்கு தாவூத் அவர்கள் தனது சொந்த நிறுவனமான முத்து தங்க மாளிகை துவக்க விழா நிமித்தமாக தாயகம் சென்றதால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், இக்கூட்டத்தின் முன்னேற்பாடு, ஆலோசனை கூட்டங்களில் கலந்துகொண்டும், சமையலுக்கு தேவையான அனைத்து பெரிய பாத்திரங்களையும் ஏற்பாடு செய்துவிட்டு, தாயகத்திலிருந்து அவ்வப்போது தொலைபேசியில் காயலர் தின கூட்டம் பற்றிய செய்திகளை தெரிந்து கொண்டிருந்தார். அவர்களுக்கு எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்.
இப்பாரம்பரிய உணவை சமைப்பதற்கு தேவையான இட வசதியை வழமைபோல் தனது வில்லாவில் ஏற்பாடு செய்த மன்றத் தலைவர் ஹாஜி JSA புஹாரி அவர்களுக்கும் எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்.
தொழிலதிபர் அல்குரைர் வருகையையொட்டி சிறப்புக் கூட்டம்:
சாப்பாட்டிற்கு பிறகு இந்த பெரும் ஒன்றுகூடலின் முக்கியமாக எதிர்பார்த்த விருந்தினர் அல் குரைர் முதலீட்டு ஸ்தாபனத்தின் துணை அதிபர் பெருமைக்குரிய ஈசா அல் குரைர் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து நம்மவர்கள் ஓன்று கூடலை ரசித்தார். இவர் நமது மன்றத்திற்கு பெரும் அளவில் உதவிகள் செய்து வரக்கூடிய ஒரு கணவான் எனபது பலருக்கும் தெரியாது. இவரது வருகையை கௌரவிக்கும் வகையில் மீண்டும் கூட்டம் கூட்டப்பட்டு ராவன்னா அபுல் ஹசன் அவர்கள் அரபி மொழியில் அவரை வாழ்த்தி வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் உரை:
அல் குரைர் அவர்கள் உரையில் தம்மை கௌரவப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தவராக, நமதூருக்கு மென்மேலும் உதவிகள் செய்வதாக சொல்லி கூட்டத்திலிருந்தவர்கள் காயல்பட்டினத்திற்கு கண்டிப்பாக வருகை தாருங்கள் என்று சொன்னதை ஒரு அழைப்பாக எடுத்துகொண்டு கண்டிப்பாக நமதூருக்கு வருகை தரவும் இசைந்துள்ளார்கள்.
விளையாட்டுப் போட்டிகள்:
அதற்கு பின்பு GAME UNCLE நடத்திய வினாடி வினா நிகழ்ச்சி மிக சிறப்பாக நடை பெற்று வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் அங்கேயே வழங்கப்பட்டன பின்பு “கேம் அங்கிள்” தலைமையில் பெரியோர்கள் எலுமிச்சை கரண்டி ஓட்டம், ஓட்டப்பந்தயம், கிளிப் மாட்டும் விளையாட்டு, சிறார்களுக்கு வயதிற்கு ஏற்றால் போல் ஓட்ட பந்தயம், இசை நாற்காலி, போன்ற விளையாட்டுகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
குலுக்கல் பரிசு:
மாலை நேர தேநீர் சமூசாவுடன் வழங்கப்பட்டது. பின்னர், ஏற்கனவே அறிவித்த படி முற்கூட்டியே இந்த நிகழ்விற்கு வந்தவர்கள் மற்றும் வருகை தந்தவர்கள் என்று சிறப்பு குழுக்கள் பரிசு அரிஸ்டோ ஸ்டார் நிறுவனத்தார்கள் அனுசரணை செய்திருந்த இரண்டு Computer Tablets பரிசாக அளிக்கப்பட்டது.
சிறாருக்கு அன்பளிப்பு:
வருகை புரிந்த அனைத்து சிறுவர் சிறுமிகளுக்கும் கண்கவர் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன, அதை தொடர்ந்து போட்டியில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் சிறப்பாக பணியாற்றிய அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த நிகழ்வில் பங்குகொண்டு சிறப்பித்த அபு தாபி காயல் நல மன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் அவர்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் நன்றி கூறி விழா இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
தொகுப்புப் படங்கள்:
காயலர் தினம் 2014 நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட அனைத்து படங்களையும், https://picasaweb.google.com/106080912367452201392/KAAYALERTHINAM28032014DUBAI?feat=email#slideshow/5996085669140623330 என்ற இணையதள பக்கத்தில் தொகுப்பாகக் காணலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை ஷேக் சலீம்
துணை தலைவர்
துபாய் காயல் நல மன்றம்
புகைப்படங்கள்:
பையாஸ் ஹுமாயூன்
சுப்ஹான் முஹம்மத்
துபை காயல் நல மன்றத்தின் சார்பில் கடந்தாண்டு நடத்தப்பட்ட “காயலர் தினம் - 2013” ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |