தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நட்டர்ஜிக்கு ஆதரவு கோரி, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உள்ளிட்ட அதிமுகவினர் பரப்புரை செய்துள்ளனர். விபரம் வருமாறு:-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியியில், வழக்குரைஞர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு கோரி, அதிமுகவில் அங்கம் வகிக்கும் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அதிமுக காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதர், கிளை நிர்வாகிகளான காயல் மவ்லானா, ‘மீசை’ முகைதீன், இல்யாஸ், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், செந்தமிழ்ச்செல்வன் மற்றும் அதிமுகவினர் வாகன பரப்புரை செய்து வருகின்றனர்.
படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
அதிமுக தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |