Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:07:14 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13536
#KOTW13536
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 19, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: DCW ஆலைக்கெதிரான நடவடிக்கைகள் குறித்து KEPA அமைப்புக்கு ஆம் ஆத்மி வேட்பாளர் கையெழுத்திட்டு வாக்குறுதிக் கடிதம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3754 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.



இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.

காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் DCW ஆலை செய்து வரும் அமிலக் கழிவு மாசுகளுக்கு எதிராக, தான் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ம.புஷ்பராயன் கைச்சான்றிட்டு, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPAவிடம் பின்வருமாறு கடிதம் அளித்துள்ளார்:-



இத்தகவலை, அக்கட்சியின் காயல்பட்டினம் தேர்தல் பணிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. திராவிட கட்சிகளை புறக்களியுங்கள்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [19 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34448

கடந்த காலங்களை நினைவு படுத்தி பாருங்கள்..! நல்லவரை தேர்ந்துடுங்கள்..!

நாம் ஒரு மாற்றத்திற்காக 5 ஆண்டுக்கு பிறகு இம்முறை வாக்களிக்க விரும்பி நமது ஓட்டுக்கள் சிதறி விடுமோ என்ற தவறான பிரசாரத்தை நம்பி உங்கள் மனசாட்சிக்கு எதிராக கொள்ளையர்களை பதவியில் ஏற நாம் காரணமாகி விட வேண்டாம்.. நம்மை பாதுகாப்பவன் இறைவன் மட்டும் தான்... எந்த கட்சியோ / எந்த கட்சியின் தலைவனோ அல்ல..

ஆம் ஆத்மி கட்சி அது எளியவர்களின் கட்சி இங்கு பேரத்திற்கு இடமில்லை.. மற்ற கட்சிகளை போல் தலைமை அறிவிக்கும் வேட்பாளர் இவர் அல்ல - மக்கள் பரிந்துரைத்த வேட்பாளரே நிறுத்தப்பட்டுள்ளார்..

இறை நம்பிக்கையை மனதில் நினையுங்கள்.. எப்போதுமே மக்களுக்காக போராடும் ஒரு தூய்மையான போராளிக்கு வாய்ப்பு அளியுங்கள் கடந்த காலங்களில் மாற்றி மாற்றி திராவிட கட்சிகளுக்கு ஓட்டளித்து ஏமாந்தது போதும்..! நகர் மக்களுக்காக குரல் கொடுப்பேன் என்று சொல்லி விட்டு D C W ஆலையில் தான் தங்கி உணவு அருந்தி அந்த நிர்வாகம் சார்பாக திருப்தியா கவனிக்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்படுகிறார்கள்.. இதுவே உண்மை..!

அதற்க்கு மாற்றமாக ஒரு கறைபடியாத நல்லவனுக்கு நாம் வாக்களிப்போமாக.. நமது சின்னம் துடைப்பம்.

நல்லவர்களை நாம் / நமது (ஓட்டு) பரிந்துரைக்காத வரை எந்த மாற்றமும் நாட்டில் நடைபெறுவதில்லை..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பாராட்டுக்கள்.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [19 April 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34450

ஆம் ஆத்மி வேட்பாளர், இந்த நச்சு ஆலைக்கு எதிராக குரல் கொடுப்பவர். வாக்குறுதியும் தந்துள்ளார். வரவேற்போம். இந்த நச்சு ஆலைக்கு எதிராக, வழக்கு தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் மதிமுக வேட்பாளர், ஜோயல்.

மற்ற கட்சியின் வேட்பாளர்கள், இந்த மாதிரி, வாக்குறுதிகள் தருவார்களா? அந்தந்த கட்சியினர், தங்கள் கட்சி வேட்பாளரிடம், அப்படி உறுதிமொழி வாங்கி தர முடியுமா?

இந்த நச்சு ஆலை பிரச்சனை, நமது உயிரோடு விளையாடும் பிரச்சனை.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மாற்றை நோக்கி பயணிப்போம் !!
posted by Salai Mohamed Mohideen (Philadelphia) [19 April 2014]
IP: 207.*.*.* United States | Comment Reference Number: 34451

சபாஷ் !! வரவேற்க படவேண்டிய விசயமற்றுமன்றி பாராட்ட படவேண்டியதும் கூட !! எந்த கட்சியால் இது போன்று உறுதி மொழி தரமுடியும்? DCW விடயத்தில் அதீத கவலையையும் கடுமையான கருத்துக்களையும் பகிர்ந்த திராவிட கட்சிகளின் அனுதாபிகள் என்ன கூறப்போகின்றார்கள்… பொறுத்திருந்து பார்ப்போம்.

முந்தைய செய்திகளில், 'ஆம் ஆத்மி' மற்ற கட்சியை விட மிகச்சிறந்ததாக பலர் மனதார ஏற்று கொண்டாலும், திமுக ஆதிமுகவை சந்தர்பவாத, ஊழல்மிக்க , முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்த கட்சி என்று ஒப்புக்கொண்டாலும்…. மதவாத பிஜேபி - யை எதிர்ப்பதற்காக வேண்டி திமுக கூட்டனிக்கு வாக்களிக்க கூறுகின்றார்கள். ஏனென்றால் 'ஆம் ஆத்மி' மூன்றாவது / நான்காவது நிலையில் உள்ள கூட்டணி. நாம் ஒட்டு போட்டால்தான் அது முதல் அல்லது இரண்டாம் நிலைக்கே வரும்.

என்றைக்குமே மதவாத பிஜேபி கோ அல்லது அவர்களை ஆதரிக்கும் கூட்டதிற்கு நாம் ஒட்டு போட மாட்டோம் என்பதனை காங்கிரஸ் + திராவிட கட்சிகள் மிக நன்றாக அறியும். இதை மூலாதராமாக வைத்து தான் மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணியை நகர்த்தி வருகின்றார்கள். நமக்கும் வேறு போக்கிடம் இல்லை. மதவாத பிஜேபி யை எதிர்ப்பதற்காக இந்த சந்தர்ப்ப வாத திராவிட கட்சிகளை மாறி மாறி ஆதரிக்கொன்றோம்.

இது இந்த தேர்தலில் மட்டும் அல்ல…. மதவாத பிஜேபி என்ற காட்டு மிராண்டி இருக்கும் வரை இதே நிலைதான். அடுத்த தேர்தலிலும் இதையே தான் சொல்லப்போகின்றொம். ஒரு சிறு வித்தியாசம்… திமுக வுக்கு பதிலாக ஆதிமுக கூட்டணி என்போம். அப்படிதானே?

நம்மை நாம் மாற்றி கொள்ளாதவரை மாற்றம் எதுவும் நிகழப்போவதில்லை. உங்கள் மனதுக்கு எப்பொழுது 'ஆம் ஆத்மி' ஒரு மாற்றத்திற்கான தீர்வு என்று தோன்றி விட்டதோ , வெற்றி தோல்வி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். அதனை தீர்மானிக்க போகின்றவன் ரப்புல் ஆலமீன். கடந்த காலத்தில் மதவாத பிஜேபி ஆட்சிக்கு வந்துள்ளது. ஒரு வேளை இம்முறையும் கொடியவன் மோடி மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஒரு வேளை இறை நாட்டம் இருந்தால்… அதிலும் இறைவன் நமக்கு நன்மையையே வைத்திருப்பான்.

நம்மை படைத்த இறைவனை விட நம்மை பாதுகாக்க போவது யார்???. இந்த திராவிட கட்சிகளின் மூலச்ச்சளைவைக்கு பலியாகி சுய சிந்தனையை அடகு வைத்து விடாதீர்கள்

உங்களின் பாதை மாற்றி நோக்கி பயணிக்கட்டும் !!

மற்றும் அவர்களின் வருங்கால கூட்டணி ஆதிமுக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [19 April 2014]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 34454

D C W ஆலை விஷயம் என்று பார்த்தால் நாம் நியாயமாக மதிமுக வேட்பாளரைத்தான் ஆதரிக்க வேண்டும். அவர்தான் D C W ஆலைக்கு எதிரா வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதற்காக நாம் அவருக்கு வாக்களிக்க முடியுமா ? முடியாதல்லவா !!

சரி. தனிப்பட்டமுறையில் சிறந்த வேட்பாளர் என்று பார்த்தால் காங்கிரஸ் வேட்பாளர்தான் சிறந்தவர்.அதற்காக நாம் அவருக்கு வாக்களிக்க முடியுமா ? முடியாதல்லவா !!

அதிமுக மற்றும் திமுக இடையேதான் உண்மையான போட்டி. திமுகவை ஆதரிப்பதா? அல்லது அதிமுகவை ஆதரிப்பதா? இரண்டில் எது சிறந்தது என முடிவெடுக்கவேண்டிய தருணம் இது. மற்றவர்களுக்கு இங்கு வேலையில்லை.

முஸ்லிம்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்தினால்தான் நம் பலம் தெரியவரும். அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஆதரிக்கும் திமுக அணிக்கே நமது வோட்டு.

முஸ்லிம்களின் ஓட்டு வீண்டிக்கப்படக்கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வெற்றிக்கனி கனிந்து கரங்களில் தவழ துடித்துக் கொண்டிருக்கிறது,..
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [19 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34455

இந்த நச்சு ஆலைக்கெதிராக ஆர்ப்பரித்தபோதும் சரி,முழு கதவடைப்பு போராட்டத்திலும் சரி எல்லா அரசியல் கட்சிகளும் அந்த ஆலைக்கெதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். அவ்வாலை எதிர்ப்பறிவிப்பு பிரசுரத்தில்கூட எல்லா அரசியல்கட்சி களின் பெயர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது!

தற்போதுபோல் அப்போதும் இதே "KEPA" அமைப்பு அத்துனை அரசியல் கட்சிகளிடமும் எதிர்ப்பு நிலை கடிதம் கேட்டிருந்தால் தந்துதான் இருப்பார்கள்.

ஆகவே,ஆம் ஆத்மி கட்சியின் எதிர்ப்பு நிலை கடிதம் வரவேற்க்கதக்கதுதான் அதே நேரத்தில் வானலாவிய முக்கியத்துவம் அடைந்துவிட்ட தகுதிக்கு சென்றுவிட்டதாக நினைத்து விடவும் கூடாது!

தற்போது நம் முன்னே இருப்பது நம் சமுதாயத்தின் வாழ்வாதாரத்திற்குறிய உத்தரவாதம் தரும் அணிக்கு, சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு கல்வி,தொழில் வாய்ப்புக்கு வழிகோலும் இடஒதிக்கீட்டைத்தர உத்தரவாதமளிக்கும் அணிக்கு,மதவாதத்தை தூக்கியெறிந்து,நம் இனம் சுதந்திரமாக வாழ நம் மார்க்க கடமையை நிறைவேற்ற,நம் புனித பள்ளி வாசல்கள் பாதுகாக்கப்பட,அயோத்தியில் அயோக்கியர்களால் கட்ட நினைக்கும் கட்டடத்தை கட்ட தடைவிதிக்கும் சட்டத்தை இயற்றுவோம் என்று உறுதிமொழி அளிக்கும் அணிக்கு,பொது சிவில் சட்டம் கிஞ்சித்தும் தலைதூக்கவிடமட்டோம் என்று உறுதிபூணும் அணிக்கு, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள சிறுபான்மை முஸ்லிகளின் பாதுகாப்பு அரணாகவும் ,அவர்களின் கலாச்சாரம், வாழ்க்கைமுறை, இறையாண்மை அனைத்திற்கும் அணுவளவும் பங்கம் வராமல் பாதுகாப்போம் என்று அறைகூவலிடும் அணிக்குத்தான் ஒவ்வொரு உண்மையான முஸ்லிமும் வாக்களிக்க வேண்டும்!

மேலே சொன்ன அத்துனை உறுதிமொழியையும் ஜனநாயக முற்போக்கு கூட்டணித்தலைவர்கள் திரும்பத் திரும்ப நாம் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு தந்து கொண்டிடுக்கிரார்கள்!

வேறு எந்த அணித்தலைவர்களும் இவ்வளவு வெளிப்படையாக நாங்கள் சிறுபான்மைச்சமுதாய மக்களாகிய முஸ்லிம்களின் பக்கம்தான் என்று பட்டவர்த்தனமாக பறைசாற்ற முன்வரவில்லை!

ஆகவே நம் புனித மார்க்க பற்றுள்ள அனைத்து இஸ்லாமியர்களும் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கே வாக்களிக்க முடிவெடுத்து விட்டார்கள்.வல்லோன் உதவியால் வெற்றிக்கனி கனிந்து கரங்களில் தவழ துடித்துக் கொண்டிருக்கிறது,சுவைசுகம் காண கனபொழுது காத்திருங்கள் காயல் கண்மணிகளே!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [19 April 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 34456

இந்த திராவிட கட்சிகளின் அபிமானிகள் கூறும் சப்பை கட்டு காரணங்களை கேட்டு காதில் இரத்தம் வருகிறது.

அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் மானத்தோடு இருந்தால் மட்டும் காணாது. உள்ளூரில் நாம் உயிரோடும், சுகத்தோடும் இருக்க வேண்டும்.

உங்கள் வேட்பாளர்கள் அல்லது கட்சிகாரர்கள் எவரிடமாவது இது போன்ற கடிதத்தை வாங்கி தர முடிந்தால் மேற்கொண்டு எழுதுங்கள். இல்லாவிடில் வெத்து சப்பைகட்டுகளை நிறுத்துங்களேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பூச்சாண்டி காட்டாதீர்கள்
posted by S.A.Muhammad Ali Velli (Dubai) [19 April 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34457

மதவெறி, மதச்சார்பின்மை பற்றி தற்போது எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆரம்பத்தில் மோடி எனது நண்பர், சிறந்த நிர்வாகி என்று கூறிய கருணாநிதி சுதாரித்து கொண்டு பிஜேபி க்கு எதிரான நிலை எடுத்ததால் அனைத்து இஸ்லாமிய கட்சிகளும் அவருக்கு ஆதரவு நிலை எடுத்து உள்ளது.

மோடி ஆட்சிக்கு வந்தால் அதிக இடம் பெரும் அதிமுகவின் ஆதரவை தான் கோருவார் என்பதால் தான் இந்த சிறுபான்மை மக்களின் காவலன் இந்த வேஷம் போடுகிறார். தவ்ஹீத் ஜமாஅத் விலகிய பின்பு அம்மாவும் பிஜேபி க்கு எதிராக பேச தொடங்கி இருக்கிறார்.

பிஜேபி மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே . பிஜேபி என்னும் மதவெறியர்களை காட்டி சிறுபான்மையினரை தங்களின் ஓட்டு வங்கியாக மட்டுமே மதசார்பின்மை பேசும் கட்சிகள் பயன்படுத்துகிறது. மதசார்பின்மை கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை என்றால் அவர்கள் அனுமதியுடன் தான் ஹிந்துத்வா தீவிரவாதிகள் தங்களது மதவெறியாட்டாங்களை நிகழ்த்துகிறார்கள்.

நாட்டு மக்களை எப்போதுமே முட்டாள்களாகவே வைத்திருக்க முடியாது... உங்கள் இற்றுப்போன மதவாத மாய்மாலமெல்லாம் இனி இங்கே செல்லுபடியாகாது. பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை எதிர்க்க கூடிய ஒரே கட்சி ஆம் ஆத்மி. நமது தொகுதியில் நமக்காக போராட கூடிய ஆம் ஆத்மி வேட்பாளர் போராளி ம.புஷ்பராயன் அவர்களை வெற்றி பெற செய்து நமது கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்வது நம்முடைய கடமை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Rilwan (TX) [19 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34458

நீங்கள் கூறும் கல்வி தொழில் வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடுக்காக போராடி கொண்டு வந்தால் நான் அரசியல் பேசுவதையே நிறுத்திக்கொள்கிறேன் .. அப்படி கருணாநிதி செய்ய வில்லை என்றால் காயல்பட்டினம் திமுக வை கலைக்க தயாரா ?

கருணாநிதி தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதி கொடுப்பார் .. மூணு மணி நேர உண்ணா விரதம் என ஸ்டாண்டு அடிப்பார் ... கருணாநிதி போராடி பெற்றுதந்த தென்று எதுவும் இல்லை ...

கருணாநிதி மாயையை விற்பதில் வல்லவர் ..ஜெயலலிதா இந்த விசயத்தில் கருணாநிதியிடம் பிச்சை எடுக்க வேண்டும் .

திமுகாவில் கொள்கைக்காக போராடிய எவ்வளவோ பேர் இருக்க கனிமொழி , ஸ்டாலின் , மாறன் , அழகிரி (இப்போது ஒரு நாடகம் நடக்கிறது ... அது வேறு விஷயம் ). வரும் காலத்தில் உதயநிதி , அருள்நிதி , மற்றும் கனிமொழி மகன் ஆதித்ய என்ற திமுக தலைவர்கள் வருவார்கள் ... உங்களை காப்பாற்ற ...

கருணாநிதி பொய் சொல்லுகிறார் என்பது என் வாதம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. அறிவுக்கூர்மை முனை மிகவும் பளிச்சென்று பிரகாசிக்கிறது!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [20 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34462

உங்கள் வேட்பாளர்கள் அல்லது கட்சிகாரர்கள் எவரிடமாவது இது போன்ற கடிதத்தை வாங்கி தர முடிந்தால் மேற்கொண்டு எழுதுங்கள். இல்லாவிடில் வெத்து சப்பைகட்டுகளை நிறுத்துங்களேன்(C &P .)

வெத்து சப்பைகட்டுபவரகளை வேறு இடத்தில் போய் தேடி பாருங்கள்.என்னிடம் வரவேண்டாம்!

நீங்கள் சொல்வதுபோல் KEPA அமைப்பு நான் குறிப்பிடும் கட்சிகளிடம் ஆதரவு கடிதம் கேட்டு அவர்கள் தர மறுத்ததாக தகவல் அதிகாரப்பூர்வமாக கிடைத்தால்,உங்கள் பாஷையில் உங்கள் தரத்திற்கேற்ப வெத்துவேட்டு, வெறும் வேட்டு என்று சொன்னால் பொருந்தும்! நான் என்ன எழுதி இருக்கிறேன் என்பதைக்கூட புரிய சக்தி இல்லையே என்பதை எண்ணி உங்கள் அறிவுக்கூர்மை முனை மிகவும் பளிச்சென்று பிரகாசிப்பதற்காக பரிதாப்படுகிறேன்!.... அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

==முஹம்மது ஆதம் சுல்தான்===


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Rilwan (TX) [20 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34464

திரும்ப திரும்ப வாக்குறுதி கொடுத்த பின்பும் கருணாநிதியை நம்ப மறுக்கிறார்களே ..ஒரு சகோதரரின் அங்கலாய்ப்பு ,,

வாக்குறுதி கொடுக்கிரதிலே கருணாநிதியை விட வேறு யார் இருக்க முடியும் ?

இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் வாழ்க்கை நடத்தியவர் கருணாநிதி ...இவர் அரசில் அங்கம் வகிக்கும் போது இவர் நடத்திய நாடகங்கள் கண் முன்னர் நிற்கிறது ..

தேர்தலுக்காக குரங்கை விட கூடு விட்டு கூடு தாவுவதில் கருணாநிதி எவ்வளவு கை தேர்ந்தவர் என்பதை நாம் நன்கு அறிவோம் ,..

எதை செய்தாரோ செய்ய வில்லையோ ... கட்சியை குடும்ப சொத்து ஆக்கி விட்டார் .. பல்லாயிர கோடி சொத்துக்களை நம் முதுகில் ஏறி சம்பாதித்து விட்டார் ..

எவ்வளவு கேடு கேட்டவர் என்றால் .. அண்ணா அறிவாலயம் திமுக தொண்டர்களின் நிதியில் கட்டப்பட்டது .., இன்று இதை அனுபவிப்பவர் யார் ? முதலில் சண் டிவி துவங்கி கலைஞ்சர் டிவி வரை இங்கு நடக்கிறது ... இது இவர் தந்தை முத்துவேலர் சம்பாதித்ததா ?

அசிங்கம் ... திமுகா காரர்கள் சொல்லும் ... இவர்களிடம் தங்கள் தேவைகள் பூர்த்தி செய்ய ஆதரவு தெரிவிக்கும் சமுதாய தலைவர்களும் தடம் மாறி விட்டார்கள் ...

முஸ்லிம்கள் ஐ பயமுறுத்தினால் சந்தன வீரப்பனுக்கு கூட ஒட்டு போடுவார்கள் என்ற நிலையை கொடு வராதீர்கள்

சகோதரர் முஹய்யதீன் சொன்ன மாதிரி - நீங்கலாக மாறாதவரை உங்கள் நிலை மாறாது .. நீங்கள் உங்கள் தலையை கொடுக்கும் வரை masala அரைப்பார்கள் ,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [20 April 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34466

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புள்ள மோடி கூட்டணி வேட்பாளருக்கு ஒரு அன்பு வேண்டு தாங்கள் உண்மையாக ஒரு சிறந்த சமுக அக்கரையுள்ள மனிதர்தான் ஆனால் உங்கள் கட்சி மதவாத மோடியுடன் கூட்டணி வைத்துள்ளதால் கண்டிப்பாக உங்களுக்கு போடும் ஓட்டு கூட நம் நடுநிலை ஹிந்து மக்கள் ,கிறிஸ்துவ மக்கள் , தாழ்த்தப்பட்ட மக்கள் , முஸ்லிம் மக்கள் போன்ற நம் நாட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களை பிரித்து அவர்களுக்கு பெரும் பாதிப்புகளை கண்டிப்பாக கொடுக்கும் .

இந்த DCW வை நாம் முயன்றால் நமால் விரட்டி அடிக்க முடியும் ஆனால் இந்த மோடி பிஜேபி யை நாம் ஆட்சிக்கு வரவிட்டால் கண்டிப்பாக இந்த நாடு தன் மக்களை இழந்து கொண்டுதான் இருக்கும் நாம் இந்த விசியத்தில் நன்கு கவனமாக இருப்பது நல்லது சச்சா புஸ்பராயண் நல்ல மனிதர் ஆனால் ஒரு மோசமான நரன் தின்னீ மோடி வருவதற்கு காரணமாக இருபதால் நம் நாட்டின் இறையாண்மையை காக்க இந்த புஸ்பராயன் தோல்வி அடைவதில் தப்பு ஒன்றும் எல்லை பொது நாசகாரியான பிஜேபி யை வீழ்த்த நமக்கு வலுவான கூட்டணியான தி , மு . க கூட்டனிக்கு நம் வாக்கினை அளிப்பதுதான் நல்ல பலன் அளிக்கும் மாறாக மற்ற எந்த அணிக்கு போட்டாலும் அது நமக்கு பாதகம்தான் என்பதை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும் ,

மோடி பிஜேபி ஒரு வேலை நிறைய இடங்களில் வெற்றி பெற்றால் அதற்கு முக்கிய காரணமாக பிரிந்து சிதைந்து போன நம் ஓட்டாக தான் இருக்கும் எனவே கண்டிப்பாக கவனம் தேவை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. KEPA யாரிடமும் கடிதம் கேட்கவில்லை!
posted by S.K.Salih (Kayalpatnam) [20 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34468

இச்செய்தியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துக்களில் ஒன்று:-

தற்போதுபோல் அப்போதும் இதே "KEPA" அமைப்பு அத்துனை அரசியல் கட்சிகளிடமும் எதிர்ப்பு நிலை கடிதம் கேட்டிருந்தால் தந்துதான் இருப்பார்கள். (c & p)

(1) KEPAவைப் பொருத்த வரை, நடப்பு தேர்தலில் அது எந்த விதமான அரசியல் நிலைபாட்டையும் எடுக்கவில்லை.

(2) ஒரு கட்சியிடமிருந்து பெறப்பட்டுள்ள DCW ஆலை தொடர்பான வாக்குறுதிக் கடிதம், அவர்களாகவே அளித்ததே தவிர KEPA யாரிடமும் கடிதம் கோரவில்லை.

(3) KEPA கூட்டிய அனைத்து ஜமாஅத் - பொதுநல அமைப்புகள் கூட்டத்தில், வேட்பாளர் தந்த அக்கடிதத்தை வாசிக்கக் கோரியபோது கூட, “கடிதத்தை வாங்கி வைத்துக்கொள்வோம்... வாசிக்கத் தேவையில்லை... இதுபோல, மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் கடிதம் தந்தாலும் வாங்கி வைத்துக்கொள்வோம்... KEPA யாரிடமும் கடிதம் பெற்ற செய்தியை வெளியிடாது... கடிதத்தை அளித்தவர்கள் - தாங்கள் இவ்வாறு கடிதம் அளித்துள்ளோம்” என்று தமது பரப்புரையில் கூறுவதில் KEPA குறுக்கே வராது...” என்று கூட்டத்திலிருந்த அனைவரும் ஒரே குரலில் கூற, அதன்படி முடிவானது.

(4) “DCW ஆலையின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் அடுத்தகட்டமாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறது. எனவே, ஆளுங்கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவுமுள்ள திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கலாம்” என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டபோது கூட, “அவசியம் செய்ய வேண்டிய வேலைதான் இது என்றாலும், இப்போதைக்கு மாவட்ட ஆட்சியரிடம் தேர்தலுக்கு முன்பாகவும், அமைச்சரிடம் தேர்தலுக்குப் பிறகும் கோரிக்கை வைக்கலாம்” என்றே அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எனவே, தயவுகூர்ந்து உண்மை நிலையறியாமல் இங்கே கருத்துப்பதிவு செய்வதன் மூலம், எல்லோரையும் அரவணைத்து உளத்தூய்மையுடன் இயங்கி வரும் ஓரமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட - யாரும் விரும்பியோ, விரும்பாமலோ காரணமாகிவிட வேண்டாம் என பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இது சண்டைக்களம் அல்ல
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [20 April 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 34476

முஹம்மது ஆதம் சுல்தான் காக்கா அவர்களுக்கு,

சகோ. S.K.Salih அளித்த, "(2) ஒரு கட்சியிடமிருந்து பெறப்பட்டுள்ள DCW ஆலை தொடர்பான வாக்குறுதிக் கடிதம், அவர்களாகவே அளித்ததே தவிர KEPA யாரிடமும் கடிதம் கோரவில்லை" தங்களுக்கு போதும் என நினைக்கிறேன்

சகோதரர்களே,

இது கருத்துக்களம், சண்டை களம் அல்ல. ஒருவர் அடிதொன்டையில் கத்துவதால் அல்லது காரசாரமாக எழுதுவதால், அவரது கருத்து சரியாகிவிடாது.

இது சின்ன ஊர். என்னதான் கருத்து மோதல்கள் இருந்தாலும் சலாம் சொல்லும் அளவுக்கு, உங்கள் வார்த்தைகளை வைத்துக்கொள்ளுங்கள்.

தயவு கூர்ந்து, அசிங்கமான வார்த்தைகளை எழுதாதீர்கள். ஒருவர் உடல் கழிவுகளின் பெயரையும், அவைகள் வெளியாகும் இடங்களின் பெயரையும் சில கம்மேன்டுகளில் எழுதிஉள்ளார். இணைய தளங்களை பெண்களும், குழந்தைகளும், நாகரிகம் பேணும் ஆண்களும் படிக்கின்றனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. தேர்தல் இன்றுவரும் நாளை போகும்!
posted by முஹம்மது ஆஅதம் சுல்தான் (yanbu) [20 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34482

சகோதரர் செய்து இப்ராஹிம் அவர்களே, அருமையாக தங்கள் கருத்தை சொல்லி இருக்கிறீர்கள்.மிக்க நன்றி சின்ன ஊரிலுள்ள நாம் எப்படியாவது எந்த ஒரு வழியிலாவது நிச்சியம் சொந்தமாகத்தான் இருப்போம்!ஆகவே சொந்தம் எப்பொழுதும் துண்டிப்பில்லா தொடர்கதையாய் ஆரோக்கியத்துடன் தொடர வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக ஆமீன்!

என்னுடைய கருத்துக்கு "வெத்து சப்பைக்கட்டு" என்ற வார்த்தை உங்களிடமிருந்து விழுந்ததால் பதில் சொல்லவேண்டிய நிர்பந்ததிற்கு ஆளானேன்.பெரும்பாலும் நான் நெருக்கமாக பழகும் நண்பர்களைத்தவிர மற்றவர்களின் கருத்துக்கு தனிப்பட்ட முறையில் பதில் அளிப்பதை தவிர்த்துக்கொண்டு வருகிறேன்! எப்போடியோ என்னையும்மீறி என் கருத்து விழுந்துவிட்டது!.

என் கருத்து தங்கள் மனதை தர்மசங்கடபடுத்தி இருந்தால் அதற்காக மனம் வருந்துகிறேன். வல்லஅல்லாஹ் வருங்காலத்தில் நம் அனைவர்களையும் ஒருதாய் பிள்ளைகள் போன்று ஒற்றுமை உணர்வுடன் வாழ உதவி உதவிபுரிவானாக ஆமீன்! தேர்தல் இன்றுவரும் நாளை போகும் ஆனால் நாம் என்றும் நிலையாக வாழ்வது புண்ணியமிகு காயல்பதியாகும் என்பதை நாம் மறந்துவிட முடியாது! வல்ல அல்லாஹ் உண்மையின் பக்கமும்,முஸ்லிம்களின் அச்சத்தை போக்கும் வண்ணமும் வெற்றியைதந்தருள்வானாக ஆமீன்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆஅதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இப்போது கையில் எடுத்து பிரசாரம் செய்வதும் பழைய கதை தான்...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [20 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34487

காயல்பட்டினத்தில் எந்த தேர்தல் வந்தாலும் இந்த 'ஒற்றுமை' ஓலங்கள் வந்துவிடுகிறது - அது நாடாளுமன்ற தேர்தலா இருந்தாலும் சரி -நகர் மன்ற தேர்தலா இருந்தாலும் சரி.

அதாவது ஓட்டு பிரிஞ்சு போகும் - எதிரி வந்துருவான் என்ற விஞ்சான காரணங்களும் சேர்ந்து வந்துவிடுகிறது.

இதுல விசேசம் என்னன்னா, காயல்பட்டினத்தில் நகராட்சி தேர்தல்ல புத்தகத்திற்கு வாக்களிக்காதீர்கள் மாற்று மத சகோதரி 'ரூத்தம்மாள்" அவர்கள் வந்து விடுவார்' ஆகையால் பேருந்துக்கு வாக்களியுங்கள்.. என்ற கதை சொன்னவங்களுக்கு இப்போது கையில் எடுத்திருப்பது மோடி (பி ஜ பி) யை முன்னிறுத்தி கதை சொல்லி வாக்குகள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்..காயல்பட்டினத்தில் இப்போ மோடி மஸ்தான் வித்தை காட்டுறாங்க.

நாம் நமது மனசாட்சி படி நல்லவர்களுக்கு வாக்கு அளிப்போமாக..

வெற்றி தோல்வியை ஏற்படுத்துபவன் இறைவன் மட்டுமே.

இறைவன் ஒருவனை தவிர - நம்மை பாதுகாக்க நேர்வழி படுத்த எந்த திராவிட கட்சியும் மற்றும் அதன் தலைவரும் முஸ்லீம்களின் பாதுகாவலன் அல்ல..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. சிந்தித்து வாக்களிப்போம் !!
posted by salai.Mohamed Mohideen (Philly) [22 April 2014]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 34525

" புனித மார்க்க பற்றுள்ள அனைத்து இஸ்லாமியர்களும் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கே வாக்களிக்க முடிவெடுத்து விட்டார்கள்" - இது நமக்கு புதிதல்ல. ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு (அதான் திமுகவுக்கு) ஒட்டு போடுவதை இஸ்லாத்தின் 'ஆறாவது' கடமையாக நம்மை காலம் காலமாக நம்ப வைத்து விட்ட முரட்டு (பகுத்தறிவு???) பக்தர்களின் வெளிப்பாடு… அது இன்று வரை தொடர்கின்றது என்று நினைக்கின்றேன்.

நாம் இப்படியே 'ஞான சூனியமாகி' போனதன் விளைவு… காயல்பட்டினத்தை கலைஞர் பட்டணம் என்று கூறி வருபவர்கள் பலர். மாற்றத்தை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டார்கள் நம் இளைய தலைமுறையினர். மார்க்கத்தையும் ஓட்டு போடுவதையும் தொடர்பு படுத்துவதில் எவ்வித பலனும் இல்லை. மாற்றம் ஒன்று தான் மாறாதது!!

செம்மறி ஆட்டு கூட்டமாக திராவிட கட்சிகளுக்கு வாக்களித்தே பழகிப்போன நாம்… வாழ்வில் ஒருமுறையாவது சுய அறிவுடன் சிந்தித்து வாக்களிப்போம் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by seyed mohamed (chennai) [22 April 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34531

நீங்கள் கூறும் கல்வி தொழில் வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடுக்காக போராடி கொண்டு வந்தால் நான் அரசியல் பேசுவதையே நிறுத்திக்கொள்கிறேன் .. அப்படி கருணாநிதி செய்ய வில்லை என்றால் காயல்பட்டினம் திமுக வை கலைக்க தயாரா ? (சப்)

3.5% இட ஒதுக்கீடு தந்தது யார் என்று வசதியா மறந்துடீங்க? இனி நீங்க பேசுவதை நிறுத்தவும் . உங்க ஆம் ஆத்மி முஸ்லிம் களுக்கு இடவொதுக்கீடு கூடாது என்க்றதே ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved