Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:13:56 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13544
#KOTW13544
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 20, 2014
காயல்பட்டினம் தி.மு.க.வின் கோட்டை அல்ல: தி ஹிந்து நாளிதழ் செய்தி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5487 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 7 அன்று துவங்கிய இத்தேர்தல் - 9 கட்டமாக மே 12 வரை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 24 அன்று நடைபெறும்.

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. சுமார் 12 லட்சம் வாக்காளர்கள் கொண்டுள்ள இத்தொகுதியில் காயல்பட்டினம் பகுதியில் மட்டும் சுமார் 30,000 வாக்காளர்கள் உள்ளனர்.

காயல்பட்டினம் தேர்தல் களம் குறித்து - தி ஹிந்து நாளிதழின் மதுரை பதிப்பு இன்று - காயல்பட்டினம் தி.மு.க.வின் கோட்டை அல்ல என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணங்களாக தி.மு.க. நிர்வாகிகளின் உட்கட்சி மோதல், அழகிரி விஷயம், சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாதது, தி.மு.க. - முன்னர் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டது போன்றவை தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்தியினை முழுமையாக காண இங்கு அழுத்தவும்

தகவல்:
எஸ்.அப்துல் வாஹித்,
கொச்சியார் தெரு.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. உள்குத்து வேறயா?
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [20 April 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 34471

தகவலுக்கு நன்றி. அழகிரி பாதிப்பு பற்றி இப்போதான் தெரிகிறது.

என்னதான் காட்சிகள் மாறினாலும், காலங்கள் மாறினாலும், திராவிட அபிமானிகள் எப்போதும் TELEGRAM காலக்கொள்கையில் தான் இருப்பார்கள்.

ஸ்டாலினின் பேரனே தலைவரானாலும், அவர்கள் நமக்காக ஒன்னுமே செய்யவிட்டாலும், பக்கத்துக்கு தொழிற்சாலைக்கு மறைமுக ஆதரவு கொடுத்தாலும், இவர்களின் கூப்பாடு "இது அகில இந்திய தேர்தல். நாம் மற்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்தால் மதவாத கட்சி வென்று விடும்" என்று "கப கபா, கள்ளன் வர்றான்" கதை விடுவார்கள்.

இவர்கள் பேச்சை கேட்டால், இப்போது தெருவுக்கு 10 கேன்சர் நோயாளிகள் இருப்பது போல், சில வருடங்களில் ஒரு முடுக்குக்கு (சந்து) 10 கேன்சர் நோயாளிகள் இருப்பார்கள் - குடும்பத்தை விட கட்சி முக்கியம் அல்லவா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நகரில் வாழும் அனைவருக்கும் உரிமையுள்ள கோட்டை...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [20 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34473

காயல்பட்டினம் தி.மு.க.வின் கோட்டை அல்ல - தி ஹிந்து நாளிதழ் செய்தி! CP

சிரிப்பு தான்யா வருது... சிரிப்பு தான்யா வருது...

யாருப்பா சொன்னது காயல்பட்டினம் தி மு க வின் கோட்டை என்று...!

காயல்பட்டினம் அணைத்து சமய சகோதரர்களின் ஒற்றுமை நிறைந்த அண்ணன் தம்பிகளின் கோட்டையே தவிர அது எந்த அரசியல் தலைவர்களின் பெயர் கொண்ட கோட்டையோ...! அது எந்த அரசியல் கட்சியின் பெயர் கொண்ட கோட்டையோ...! அல்ல..

காயல்பட்டினம் அது என்றுமே காயல்பட்டினம் தான்..! அங்கு வாழ்த்த பல கண்ணியவாங்களின் தியாகங்களை நினைவு படுத்தும் ஊர் தான் காயல்பட்டினம்..

-------------------------------

தேர்தல் பிரசாரத்திலும் சரி, பொது கூட்ட அரங்கிலும் சரி தி மு க வினர் தெரு தெருவாக வாகனத்திலும் ஒலிபெருக்கி வைத்து காயல்மாநகரம் தி.மு.க.வின் கோட்டை என்றும் கலைஞர் பட்டணம் என்றும் மமதையில் பரப்புரை செய்வதை பார்க்கிறோம் அதே நேரத்தில் நகரில் பலர் முகம் சுளிப்போரையும் காண்கிறோம்..

குறிப்பு:- இந்நகரம் எந்த சாக்கடைகளின் கோட்டையும் அல்ல. அணைத்து சமய மக்களின் உரிமைக்குரிய கோட்டை..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தி.மு.க.வின் கோட்டை அல்ல...
posted by kavimagan kader (doha qatar) [20 April 2014]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 34475

காயல்பட்டினம் தி.மு.க.வின் கோட்டை என்று சொல்வதில் உடன்பாடு இல்லாதவர்களுள் நானும் ஒருவன்.....அதே நேரத்தில் ஹிந்து பத்திரிகைக்கு இது போன்ற ஒரு செய்தியைத் தந்தவர்களுக்கு நான் கூறிக் கொள்ள விரும்புவது....

அழகிரி,அனிதா ராதா கிருஷ்ணன் போன்றவர்களது உழைப்பின் இழப்போ, வேறு வேறு புதிய பெயர்களில் முளைக்கின்ற இந்துத்துவ பாசிச கட்சிகளின் வரவோ,தி.மு.க.வின் அடிவேரை அசைக்கும் வல்லமை கொண்டது அல்ல....நீண்ட,நெடிய அரை நூற்றாண்டு வரலாறும் அதைத்தான் சொல்கிறது.....

இது தேசத்தின் பிரதமரை நிர்ணயிக்கக் கூடிய தேர்தல்....யார் வர வேண்டும் என்பதை விட,யார் வரக் கூடாது என்பதை இந்த சமுதாயம் சப்தமாகத் தீர்மானிக்க வேண்டிய சமயம் இது...

இந்தத் தேர்தலில் வாக்களிக்க DCW பிரச்சனைதான் முக்கிய காரணி என்றால், நாம் வாக்களிக்க வேண்டியது ம.தி.மு.க.வின் திரு.ஜோயல் அவர்களுக்குத்தான்.....கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிரச்சனைக்காக போராடுபவர் அவர்.....

அல்லது மோடி வரக் கூடாது.....மத வாத சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும் என்று கருதினால்,அதே காரணத்திற்காக,அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஆதரிக்கும் தி.மு.க.வின் வேட்பாளர் திரு.ஜகன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்....

காயல் நகர மக்கள் அண்ணா.தி.மு.க. வை ஒரு பொருட்டாகவே கருதாததால் அதைப் பற்றிய கேள்வி எழ வில்லை....

மோடி வந்தாலும் பரவாயில்லை....தோற்றாலும் பரவாயில்லை... புதியவருக்கு வாய்ப்பு தரலாம் என்ற எண்ணத்தில் உள்ளவர்கள் ஐந்தாம்,ஆறாவது இடத்திற்கு தள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படும் திரு.புஷ்பராயனுக்கு வாக்களிக்கலாம்.....

ஒன்று மாத்திரம் உறுதி....காயல் பட்டணம் கலைஞர் பட்டணமும் அல்ல....தி.மு.க.வின் கோட்டையும் அல்ல......அதே நேரம் தி.மு.க.வைத் தவிர்த்து,வேறு எந்தக் கொம்பனுக்கும் இங்கு ஓட்டும் இல்லை....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [20 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34477

அஸ்ஸலாமு அலைக்கும்,

காயல்பட்டினம் யாருடைய கோட்டையும் கிடையாது அது காயலர்களின் கோட்டைதான் .

ஆனால் அழகிரி என்பது மாயை அது ஆளும் கட்சியாக இருந்து இடை தேர்தல் நடந்தால் மட்டும்தான் எடுபடும் மற்றபடி மதுரை தன்னுடைய வார்டில் கூட அவர் ஆதரவில் நின்ற தி . மு . க . கவுன்சிலர் உள்ளாட்சி தேர்தலில் நான்காவது இடம்தான் பிடிக்க முடிந்தது.

தி . மு .க விற்கு பாதிப்புகள் இவரை வைத்து ஒன்றும் வந்து விடாது என்பது உண்மை .

பிஜேபி யும் அம்மாவும் தனித்து நிற்பதுதான் தி . மு .க வின் பக்கம் வெற்றி பயணிக்க முதல் காரணம் மேலும் ,காங்கிரசின் மூலம் குறையும் ஓட்டினை அது தானாக சமாளித்து விட்டது அதுபோக தாழ்த்தப்பட்ட சமுகமான புதிய தமிழகம் , விடுதலை சிறுதைகள் , நடுநிலை இந்துகளின் ஆதரவு கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமியர்களின் வாகுகள் இந்த முறை பெரும்பாலும் தி . மு .க . கூட்டணிக்குதான் கிடைக்க வாய்பாகயுள்ளது இது யதார்தமான உண்மை .

தேர்தல் கணிப்புகள் என்பது இன்றைய கால நிலைகளில் சுத்த வியாபாரம் என்பது நமக்கு நன்றாக விளங்கும் . மோடி மோடி என்று சொல்லப்படும் செயற்கை அலைகளின் தன்மை மட்டும் உண்மையான நிலையாக இருக்குமானால் பிஜேபி 275 அல்ல 350 ம் பிடிக்கும் ஆனால் மக்களை பாசிச ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் இருக்கும் பாசிச சக்திகள் ஊதி ஊதி மோடி ஊடியை பெரிதாகி காட்ட நினைகிறார்கள் அதனை வெடிக்க வைக்க நம் ஓட்டுகளை நல்ல முறையாக நமக்கு சாதகமான சூழல் அமைய பயன்படுத்த வேண்டும் .

ஊடக பூதாகரம் எல்லாம் இரண்டு ( 2 ) சதவிகிதம் பாசிச சக்திகளின் கைங்கரியம்தான் இதைதான் அணைத்து மக்களும் நன்கு புரிந்து கொள்ளனும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. என் எண்ணத்தை எழுத்தாக்கியுள்ளீர்கள்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான். (yanbu) [20 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34479

என் எண்ணத்தை எழுத்தாக்கிய கவிமகனாருக்கு நன்றி! என் கருத்தை எப்படி திருடினீர்கள் என்று துருவி,துருவி ஆராய்ந்து மீட்டெடுக்க என் மூளைக்காவல் நிலையத்தில் பிராதளித்துள்ளேன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. அன்றும் - இன்றும் - இனி நாளையும்.. இப்படி தான்.. மக்கள் விழிப்புணவு கொள்ளாதவரை..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [20 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34484

எந்த தேர்தல் வந்தாலும் நம்மவங்க கிட்ட இந்த 'ஒற்றுமை' ஓலங்கள் வந்துவிடுகிறது - அது நாடாளுமன்ற தேர்தலா இருந்தாலும் சரி - நம்ம நகர் மன்ற தேர்தலா இருந்தாலும் சரி.

அதாவது ஓட்டு பிரிஞ்சு போகும் - எதிரி வந்துருவான் என்ற விஞ்சான காரணங்களும் சேர்ந்து வந்துவிடுகிறது.

இதுல விசேசம் என்னன்னா, நம்ம நகராட்சி தேர்தல்ல புத்தகத்திற்கு வாக்களிக்காதீர்கள் மாற்று மத சகோதரி 'ரூத்தம்மாள்" அவர்கள் வந்து விடுவார்' ஆகையால் பேருந்துக்கு வாக்களியுங்கள்.. என்ற கதை சொன்னவங்களுக்கு இப்போது கையில் எடுத்திருப்பது மோடி (பி ஜ பி) யை முன்னிறுத்தி கதை சொல்லி வாக்குகள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.. இப்போ மோடி மஸ்தான் வித்தை காட்டுறாங்க.

நாம் நமது மனசாட்சி படி நல்லவர்களுக்கு வாக்கு அளிப்போமாக..

வெற்றி தோல்வியை ஏற்படுத்துபவன் இறைவன் மட்டுமே.

இறைவன் ஒருவனை தவிர - நம்மை பாதுகாக்க நேர்வழி படுத்த எந்த திராவிட கட்சியும் மற்றும் அதன் தலைவரும் முஸ்லீம்களின் பாதுகாவலன் அல்ல..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. அரசியல் புரட்சி
posted by S.A.Muhammad Ali Velli (Dubai) [20 April 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34485

"மதுவால் நாட்டிற்கு வருமானம் வருமாயின் அது அவமானம்" என்று கூறிய அண்ணாவின் பெயரை சொல்லி கட்சி நடத்தும் கயவாளிகள் இனியும் காயல்பட்டினத்தை சொந்தம் கொண்டாட முடியாது.

ஜனநாயகத்தின் உண்மையான புரட்சி வரும் 24ம் தேதி வாக்குபெட்டிகளில் நடைபெற உள்ளது. வெறும் வார்த்தை ஜாலங்களால் மக்களை மாறி மாறி ஏமாற்றிய இனதுரோகிகளை மக்கள் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். பணத்தை பெற்று கொண்டு வீடு வீடாக சென்று பணம் கொடுக்கும் கட்சிகளின் மத்தியில் தங்களது சொந்த காசை போட்டு மக்களை விழிப்புணர்வு அடைய செய்யும் ஆம் ஆத்மி சகோதரர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இந்தியாவில் மோடி அலை அடிக்கிறதோ இல்லையோ காயலில் ஆம் ஆத்மி அலை அடிக்கிறது. இது வரும் 24ம் தேதி அடை மழையாக பெய்து கலைஞர் பட்டினம் கரைய இருக்கிறது. மறவாதீர் நமது சின்னம் "துடைப்பம்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. என் அப்பன் குதிருக்குள்ளே..... இல்லை.
posted by s.s.md meerasahib (TVM) [20 April 2014]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 34486

அன்பு நண்பர்களே............... தி ஹிந்து நாளிதழ் முதலில் இந்த செய்தியை வெளியிடுவதே............ 30,000 வாக்காளர்கள் இருக்கும் காயல் பட்டினம் அப்படியே............ தி.மு.க வோட்டு வங்கி என்பதை நினைத்து தூக்கம் வராமல் ஆடி போயி இந்த செய்தியை வெளியிட்டு....... இருக்கிறது. இதை புரியாத நம் மாங்கொட்டைகள் அதற்க்கு ஆதரவா கமாண்டுகள் கூட அடிக்கிறது. பாவம்.

இப்படி எழுதியாவது தி ஹிந்துவும், ஹிந்துத்துவா கட்சிகளும், அந்த கச்சிகளுக்கு புறம் வாதில் மூலமா ஒரு கையில் குடையும், மறுகையில் துடைப்பத்தையும் ஏந்தி நிற்கும் நம் ஊர் முஸ்லிம் நண்பர்களும் தங்களது நப்பாசையை தீர்த்து கொள்ளட்டும்.

காயல்பட்டினம் தி.மு.க. கோட்டை என்பதை இந்த முறைதான் நிரூபிக்க போகிறது. இந்த காயல்பட்டின ஓட்டின் மூலம் தான் ஜெகன் அவர்களின் வெற்றி நிர்ணயிக்க போகிறது என்பதை உணர்ந்த நமது மூத்த பத்திரிகை தி ஹிந்து நாளிதலுக்கு நன்றிகள் பல.

நீங்கள் கணிச்சா....... கணக்கு கரக்ட்டா இருக்கும். எப்படி எனில் நாய் காலை தூக்கினால் என்ன செய்ய போகிறது என்பதும், மாடு வாலை தூக்கினால் என்ன செய்ய போகிறது என்பதும், பாசிச உங்களை போன்ற ஊடகம்கள், பத்திரம்கள் ஒரு தலைப்பை போட்டால் என்ன நடக்க போகிறது என்பதும், எங்கள் ஊரில் இருக்கும் ஒரு சில முட்டாள்களுக்கு தெரியவில்லை என்றாலும், நாங்கள் நன்கு அறிவோம்.

ஆகையால் இப்படி எழுதி காயல் ஓட்டை பிரிக்கலாம் என்ற குருட்டு புத்தி பலிக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Rilwan (TX) [20 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34490

இந்த தேர்தலில் மத்தியில் யார் என்பதற்கான ஓட்டுக்கள் அல்ல ..உங்கள் தொகுதி பிரதிநிதியை தேர்ந்து எடுக்கும் தேர்தல் that's why this is parliamentary form of democracy - not direct presidential form of democracy.

நீங்கள் யாருக்கு ஒட்டு போட்டாலும் டெல்ல்ஹியில் உங்களுக்காக கூச்ச்சளிடவாவது செய்ய வேண்டும் .

தேசிய அளவில் போராட வேண்டுமாயின் நீங்கள் காங்கிரசை கூட ஆதரித்திருக்கலாம் ...

ஜோயலின் கட்சி தலைவர் sterlite க்கு எதிராக போராட்டம் என ஒரு புறம் என போராடிக்கொண்டு மறுபுறம் அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டார் என ஒரு குற்றச்சாட்டு உண்டு .. எனக்கு அதை கூறியவர் அந்த தலைவரின் குடும்ப உறுப்பினர். அதனால் மாதிமுகவை நாங்கள் நம்பவில்லை .. வைகோவும் அரசியல் வியாபாரம் செய்கிறார் என ஆகி ரெம்ப வருஷம் ஆகி விட்டது ..

தமிழ் இயக்கங்களோடு ஒரு மேடையில் இருந்தவர ..திடீர் என ஓடிப்போய் அம்மையார் காலில் விழுந்தார் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Seyed Mohamed (Chennai) [20 April 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34493

காயல்பட்டினம் யாரின் கோட்டை என்பது ஒட்டு எண்ணியபின் தெரிந்து விடும் , துடைப்பம் ஒரு மாயை என்று இப்போது சொன்னால் புரியாது , பொறுத்திருந்து பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. காயல்பட்டினம் யாருடைய கோட்டையும் அல்ல.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [20 April 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34494

தம்பி கவிமகனார், சரியாக கருத்து பதித்துள்ளார். 'The Hindu' பத்திரிகை சரியாக கணித்துள்ளது. காயல்பட்டினம் என்றும் காயல்பட்டினம் தான்.

நமதூரை பொறுத்த வரை அனிதா அண்ணாச்சி, அதிமுகவில் இருந்த போதே, கலைஞர்பட்டணம் என்று சொல்லி வந்த 'மாயை'-யை துரத்திவிட்டார் என்பது உண்மை. அழகிரி செல்வாக்கும் ஒரு மாயை தான்.

DCW தான் இந்த தேர்தலில், நமதூரில் முக்கிய பிரச்சனை என்றால், நான் இந்த இணையத்தில் முன்பு கருத்து பதிந்தது போல், கவிமகனாரின், கருத்து போல், நாம் வாக்களிக்க வேண்டியவர், மதிமுக -வின் வேட்பாளர் ஜோயல் அவர்களுக்கு. அவர் அந்த ஆலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நடத்தி வருகிறார்.

1999 & 2001 தேர்தல்களில் பாஜக உடன் திமுக உறவு வைத்த பின்னர் நடந்த 2004 & 2009 நாடாளுமன்றம் மற்றும் 2006 & 2011 சட்டமன்ற தேர்தல்களில், திமுகவை ஆதரித்தவர்கள், அதே காரணத்தை சொல்லி இப்போது எதிர்ப்பது விந்தையாக, கேலியாக இருக்கிறது.

அனிதா அன்னாச்சியை ஓரம்கட்டி வைப்பது, ஜெகனின் வெற்றியை பாதிக்கும். கடந்த 3 நாடாளுமன்ற தேர்தல்களில் நாம், அபரிமிதமான வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்த 3 MP -கள் செய்த சாதனை தான் என்ன? அந்த காலகட்டத்தில், திமுக மாவட்ட செயலாளராக இருந்த ஜெகனின், தகப்பனார் பெரியசாமி செய்த உதவி தான் என்ன?

குறிப்பாக, 169 சுனாமி தொகுப்பு வீடு விஷயத்தில், பெரியசாமியின் நடவடிக்கை தான் என்ன? அவர் யாருக்கு சாதகமாக நடந்தார்? என்று விபரம் தெரிந்தவர்கள் கருத்து பதிந்தால் நன்று.

நமதூரில் (மொத்த வாக்குளில்) ஆம் ஆத்மி கட்சிக்கு சுமார் 1250 ஓட்டுக்கள் வரை கிடைக்கலாம். அந்த கட்சி வெற்றி பெற முடியாவிட்டாலும் டெபாசிட் தொகையாவது கிடைக்கும்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Rilwan (TX) [20 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34495

காயல்பட்டினம் யாரின் கோட்டையும் அல்ல .. தொடைப்பத்தின் கோட்டை கூட அல்ல .. இன்று துடைப்பத்திற்கு ஒட்டு கேட்கும் நாம் தொடைப்பத்தயும் தூக்கி எரிய தயங்க மாட்டோம் - நேர்மையான பாதையில் இருந்து தவறினால் தொடைப்பட்டை எதிர்ப்பதில் நாம் முதலில் நிற்போம் .

நாம் அறிவை அடகு வைத்து விட்டு தொடைப்பத்திர்க்கு ஒட்டு போட சொல்ல வில்லை .

ஒரு திர்டனுக்கு பதில் இன்னொரு திருடன் அல்ல என்பது தான் எங்கள் நிலை ..

நாங்கள் திமுக மீது கூறும் தவறு என்பதை திமுக நிரூபிக்கட்டும் .. அப்பொழுது எங்கள் தவறை வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறோம் .

ஆனால் - குறைந்த பட்சம் தாங்கள் இதுவரை செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டு தார்மீக மன்னிப்பு கேட்க்கும் பெருந்தன்மை இந்த திமுக தளமயிடமோ வேட்பாலரிடமோ இல்லையே ..

இன்னும் எந்த மூஞ்சியை வைத்து ஒட்டு கேட்கிறார்கள் ?

கனிமொழியை காப்பாற்ற டெல்லி சென்றவருக்கு முச்ளிமக்ளுக்காகவோ தமிலர்களுக்காகவோ டெல்லி செல்ல தோணவில்லையே ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...UNITY IN DIVERSITY வேற்றுமையில் ஒற்றுமை
posted by J.A.S.M.JALEEL (HONGKONG) [21 April 2014]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 34500

இலங்கையில் இந்துக்கள் இனப்படுகொலை குஜராத்தில் முஸ்லிம்கள் இனப்படுகொலை குரல் கொடுத்த தலைவர்கள் எத்தனை பேர்?அங்கு ஒரு ராஜபக்சே இங்கு ஒரு நரபலி மோடி.அதிலும் பிரதம வேட்பாளர்.

இந்தியா என்னவாகும் புதிய தலைமுறை வாக்காளர்களே சிந்தியுங்கள்.நடுநிலை இந்துக்கள் என்றும் நமக்காக ஆதரவு தருவதினாலையே BJP இன்று வரை மெஜாரிட்டியுடன் அரங்கேற முடியவில்லை.அவர்களிடம் குஜராத் இனப்படுகொலை பற்றி செய்தி பரிமாறுங்கள் நீங்கள் எந்த கட்சியிலும் இருங்கள் இது தேசத்தின் பிரதமரை நிர்ணயிக்க கூடிய தேர்தல் யார் வரவேண்டும் என்பதை விட மதசார்பின்மைக்கு எதிராக யார் வரகூடாது என்பதை இந்த சமுதாயம் தீர்கமாக தீர்மானிக்க வேண்டிய தேர்தல்.

நம் குரலை ஓங்கி ஒலிக்கும் கலைஞரின் கரத்தை நம்பிக்கையுடன் வலுப்படுத்துவோம் உதய சூரியனுக்கு வாக்களிப்போம் DMK தவிர்த்து ஏனைய கட்சிகளுக்கு போடப்படும் வாக்குகள் (NOTA உட்பட)செல்லாத வோட்டுகளுக்கு சமம்.எனவே நம் சமுதாயமே சிந்திப்பீர் செயல்படுவீர்.இதற்கு மேல் எல்லாம் வல்ல இறைவனே நமக்கு பாதுகாப்பு துவாசெய்வீர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [21 April 2014]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 34503

எந்தவூர், யாருடைய கோட்டை என்பது அல்ல இப்போதைய முக்கிய பிரச்சனை. இந்து நாளிதழில் வந்த செய்திகளைவைத்து நம் மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டாம்.

தொழிற்சாலை விஷயமும் இப்போதைய பிரச்சனை இல்லை. தொழிற்சாலை மாநில அரசு விவகாரம் அல்லது நீதிமன்ற விவகாரம். மாநிலம் அல்லது நீதிமன்றத்திற்குள் இந்த பிரச்னையை தீர்த்துக்கொள்ள முடியும்.

இப்போது நடைபெறுவது மத்திய அரசிற்கான தேர்தல்.சூழ்நிலையோ மிகமோசமான சூழ்நிலை. யார் வரவேண்டும் என்பதைவிட "யார் வரக்கூடாது" என்பதே நம் முன் உள்ள தலையாய பிரச்சனை. பொதுவாகவே உலகளாவிய முஸ்லிம்களிடையே ஒற்றுமை என்பதே அறவே இல்லை. தற்போதுதான் நம் தமிழ்நாட்டில் அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தங்கள் வேற்றுமையை களைந்து ஒரே அணிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இத்தேர்தலில் வெற்றியை நிர்ணயிப்பதில் முஸ்லிம்களின் வாக்குகள் முக்கிய பங்குவகிக்கும் .

எனவே அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஆதரிக்கும் திமுக கூட்டணிக்கு நாம் வாக்களித்து அதனை 40 தொகுதிகளிலும் வெற்றிபெறவைப்பதுதான் புத்திசாலித்தனம். புரிந்தால் சரி. இல்லையெனில் இன்னும் 5 வருடம் வருத்தப்படவேண்டியதிருக்கும். முஸ்லிம்களின் வாக்குகளை வீணாக பிரித்து, முஸ்லிம்களின் எதிரியினர் ஆட்சியை பிடிக்க நீங்கள் காரணமாக இருந்துவிடவேண்டாம்.

எனவே நாம் ஆதரிப்போம் திமுக அணியை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Syed Ismail (Chennai) [21 April 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 34506

தங்கள் கருத்துக்களை தெரிவித்தவர்களில் எத்துனை நபர்கள் ஒட்டு போட போகிறார்களோ...????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. அல்லாஹ்வின் உதவியால் வெற்றி நம்மின பக்கமே!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [21 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34509

DCW யை எதிர்ப்பதாக உறுதிமொழி தந்திருப்பது ஆம் ஆத்மி கட்சி ஆகவே அவர்களை ஆதரித்து அவர்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்பவர்களுக்கு நான் சொல்லவருவது,

DCW யை மட்டும் மையமாககொண்டு நீங்கள் முடிவெடுக்க முன் வருவீர்களேயானால்,அவர் வெறும் வாக்குறுதியை மட்டுமே தந்திருக்கிறார்,எந்த எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் இதுவரை ஈடுபடவில்லை.இவர்களைவிட மேலாக மோடியை பிரதமராக ஆக்கவேண்டும் என்ற கொள்கையோடு வாக்கு கேட்கும் வேட்பாளர் ஜோயல் அவர்கள் பல ஆண்டுகள் DCW எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கி நீதிமன்றம் வரை சென்று போரடிக்கொண்டிருக்கிறார்,

அதோடு மட்டுமல்ல, காயலின் ஒவ்வொரு குடிமகனும் கண்ணீரும் கம்பளையுமாக அந்த நச்சுஆலையை எதிர்த்து அவரவர் தகுதிக்கேற்ப எதிர்ப்பு நடவடிக்கை காரியங்களை பல வடிவங்களில் எதிர்த்துக்கொண்டுதான் வருகிறார்கள்,அவர்கள் அனைவரும் பலதரப்பட்ட கட்சியை சேர்த்தவர்கள்,அவரவர் விரும்பும் வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு வேட்டையையும் நடத்துகின்றனர்!

ஆகவே,DCW யை ஆம் ஆத்மி எதிர்கின்றதுதான் தலையாய நோக்கம் அந்த முக்கிய நோக்கம் ஒன்ற்றுக்காக மட்டுமே ஆம் ஆத்மியை கட்டாயம் ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோளிடும் சகோதரர்களுக்கு என்னுடைய இந்த விளக்கம் போதுமென எண்ணுகிறேன்!

அனைத்து இஸ்லாமிய குடிமக்களும் ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து ஒர் அணியாம் ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரிக்கவேண்டும் என்ற முடிவின்படி நம் வாக்கை உதயசூரியன் சின்னத்திற்கும்,மற்றைய இடத்தில நிற்கும் இந்த கூட்டணி வேட்பளருக்குறிய சின்னத்திற்கும் நம் வாக்கை அளித்து நம் இஸ்லாமிய இன மக்களின் ஒற்றுமையை இப்பாரதம் புகழும்படி வாழ்ந்திடுவோமாக! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் வெற்றி நம்மின பக்கமே!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Rilwan (TX) [21 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34510

எனக்கு திமுக தொண்டர்களிடம் இருக்கும் கேள்வி ஒன்று தான் -

உங்களை பிரதிநிதித்துவப்படுத்த திமுகாவிற்கு ஏன் நல்ல மனிதர் வேட்பாளராக கிடைக்க வில்லை ?

அப்படி கிடைத்திருந்தால் என் போன்றோரின் ஆதரவும் கட்சிக்கு கிடைத்திருக்குமே ?

திரும்ப திரும்ப ஊரை அடித்து உலையில் வைத்து சாப்பிடும் ஒரூ குடும்பத்தில் இருந்து ஒருவரை தேர்ந்து எடுக்க வேண்டும்?

திமுகவில் வேறு நல்லவரே இல்லையா ?

இல்லை இனம் இனத்தோடு சேருகிறதா ? அதாவது ஊழல் தலைமை ஊழல் பிரதிநிதிகளை கொடுக்கிறதா ?

இல்லை - நம் தொண்டர்களுக்கு தலையில் எதுவும் இல்லை என்று திமுக வியாபார தலைமையகம் நினைக்கிறதா ?

இல்லை - இதயெல்லாம் தலைமையிடம் கேட்க்க திமுக தொண்டரக்ளுக்கு தோணவில்லையா ? ஒரு குடும்பத்த்டம் மண்டியிட்டு கிடக்க அசிங்கமாக இல்லையா ?

திமுக காரர்களுக்கு ஜெகனுடைய தந்தை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. அனுமானங்கள்
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [21 April 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 34518

அனுமானம் 1. DCW விற்க்காக மட்டுமே ஆம் ஆத்மியை ஆதரிக்க வேண்டும்.

உண்மை: அவர்கள் மதவாதம், ஊழல் மற்றும் Crony Capitalism (corporatism) ஆகிய அனைத்திற்கும் எதிரானவர்கள். Crony Capitalism உதாரணம்: DCWவை ஆதரிக்கும், அவர்களிடம் காசு பார்க்கும் கட்சிகள்

அனுமானம் 2: ஜெயா மோடியை ஆதரிப்பார்

அனுமானம் 3: கருணா மோடியை ஆதரிக்கவே மாட்டார்

எனது அனுமானம்: 15+ சீட் வந்தால், கர கர குரலில் / முரசொலியில் "நாட்டின் இறையாண்மையை காக்க, மக்கள் வரிப்பணம் வீணாகாமல் இருக்க, தி.மு.க. மோடி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க செயற்குழுவில் முடிவு செய்துள்ளது"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. ஆம் அத்மி நாடகம் போதும்.....
posted by Mms Hameed (Kayalpatnam) [22 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34520

இத்தனை ஆண்டுகள் கூடங்குளம் பிரச்சனைக்கு போராட்டம் நடத்திய உதயகுமார் & கோ விற்கு பணம் எங்கு இருந்து வந்தது..... ( தினமும் ருபாய் 200, சாப்பாடு, பஸ் காசு)

Dcw பிரச்னையில் எந்த கட்சி கயல்பட்டினதிக்கு நன்மை செய்து இருக்கிறது....?

ஆம் ஆத்மி பிரச்சனைனை ஏன் தேர்தலுக்கு முன்பு வரை கையில் எடுக்கவில்லை......

காயல் மக்களில் வாக்குகளை வாங்குவதற்காக நடத்தும் நாடகமா.....

இஸ்லாமியர்களின் காவலாக என்றும் விளங்கும் தி மு க விற்கு நாம் ஓட்டளித்தால் நமது சமுதாய பிரச்சனைகளை , நமது ஊர் பிரச்சனைகளை எளிதாக சரி படுத்த முடியும்..... என்பது வரலாறு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Go with AAP !!
posted by salai.Mohamed Mohideen (Philly) [22 April 2014]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 34524

சிந்திப்பவர்களில் சிலர் கூட… மத வாத சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் தி.மு.க. வுக்கு வாக்களிக்க வேண்டும் என்கின்றார்கள். அடுத்த தேர்தலில் அ தி.மு.க. என்று இதே காரணத்தை தான் கூறுவார்கள். . மத வாத சக்திகளையும் ஊழல் (திராவிட காங்கிரஸ்) பெருச்சாளிகளையும் .. இவ்விரண்டையும் ஒரேயடியாக 'துடைப்பத்தால்' அடித்து விரட்ட வேண்டும் என்று ஏன் சிந்திப்பதில்லை?

" முஸ்லிம்களுக்கு தடை விதிக்கும் தொகாடியாவை சிறையில் அடைக்க வேண்டும்: ஆம் ஆத்மி"

" மத வாத சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும்" என்ற ஒற்றை சித்தாந்த்தை மட்டுமே நம் சிறுபான்மை கொண்டுள்ள அச்சத்தினால், சமுதாயம் அதனை கையில் ஏந்தி அலைவதினால் … நம் சமுதாயத்தை ஒற்றை சீட்டுக்காக அடகு வைத்தே பழகிப்போன சமுதாய கட்சிகள் ஒரு புறம், இவர்களை வைத்து நம்மை சிந்திக்க விடாமல் திராவிட மோகத்தை கெட்டியாக நம் முதுகில் ஏற்றி விட்ட திராவிட கட்சிகள் மறுபுறம்.

மிக ஆழமான, சிந்திக்கதக்க, கவனத்தில் கொள்ள வேண்டிய, தொலை நோக்கு வகையிலான கருத்துக்களை பதிந்துள்ளார்…. சகோ. ரிலுவான். அவருடைய கருத்தை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

" இன்று துடைப்பத்திற்கு ஒட்டு கேட்கும் நாம் துடைப்பத்தையும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம் - நேர்மையான பாதையில் இருந்து தவறினால், துடைப்பத்தை எதிர்ப்பதில் நாம் தாம்முதலில் நிற்போம் . நம் அறிவை அடகு வைத்து விட்டு துடைப்பத்திற்கு ஒட்டு போட சொல்ல வில்லை .

ஒரு திருடனுக்கு பதில் இன்னொரு திருடன் அல்ல என்பது தான் எங்கள் நிலை .. "


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Rilwan (TX) [22 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34529

சகோதரர் ஹமீது . எனக்கு உதயகுமாரின் தேர்தல் செலவு பற்றி தெரிந்ததால் எழுதுகிறேன் . உதயகுமார் சொந்த பணத்தை அவருடைய பிரச்சாரத்துக்கு செலவு செய்கிறார் . ஆம் ஆத்மி தேர்தல் செலவுக்கு பணம் குடுப்பதில்லை . நான் முன்பு சொன்ன மாதிரி உதயகுமார் சொந்தமாக சம்பாதித்து வைத்துள்ளார் .. அமெரிக்காவில் பேராசிரியராக இருந்தவர் ... புத்தகங்கள் எழுதி உள்ளார் ராயல்டி வருகிறது . மேலும் குடும்ப சொத்து உள்ளது .

நீங்கள் கேட்கும் இந்த கேள்வியை மன்மோகன் சிங்குக்கும் கேட்டார்கள் ..எங்கெங்கிருந்தோ வருகிறதை சொன்னார் .. உதயகுமார் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி நிரூபிக்க சொன்னார் ... அதன் பிறங்கு மன்மோகன் சிங் வாயை மூடிக்கொண்டார் .

நீங்கள் ஒன்று செய்யலாம் . புஷ்பராயனிடமே இந்த கேள்வியை கேட்கலாம் . கண்டிப்பாக பதில் கிடைக்கும் ..

புஷ்பராயன் வீட்டில் செல்லப்பிள்ளையாய் அப்பாவுடைய ரவுடித்தனத்தில் குளிர்காய்ந்து விட்டு தேர்தல் என்றதும் அக்காவையும் அப்பாவையும் கூட்டி ஒட்டு கேட்டு வரவில்லை .

புஷ்பராயன் இங்கு வஅரும் முன் இடிந்தகரையில் போலீசிடம் அடிவாங்கிக்கொண்டிருந்தார் --- தன மக்களுக்காக .... நான் சொல்வது இன்னும் புரியவில்லை என்றால் இன்னும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved