இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணியுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், வழக்குரைஞர் அ.மோகன்ராஜ் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு திரட்டுமுகமாக, காயல்பட்டினத்தில் இன்று பரப்புரை நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி பரப்புரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வி.நடேச ஆதித்தன், காயல்பட்டினம் நகர செயலாளர் பி.ஹஸன், திருச்செந்தூர் நகர துணைச் செயலாளர் பி.ஆண்டி, இளைஞரணி நகர செயலாளர் மணிகண்டன், சங்கர் கணேசன், தேவராஜ், எம்.பரமசிவன் உள்ளிட்ட அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பணிக்குழுவினர் இதன்போது உடனிருந்தனர்.
இப்பரப்புரையின்போது, கதிர் அரிவாள் சின்னத்திற்கு ஆதரவு கோரும் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
நடப்பு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |