இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக ஏ.பி.சி.வி.சண்முகம் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு கோரும் முகமாக காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இன்று 19.30 மணியளவில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஞானதேசிகள் சிறப்புரையாற்றுகிறார்.
கூட்ட ஏற்பாடுகளை, எம்.எம்.கமால், காயல் முத்துவாப்பா உள்ளிட்ட கட்சியினர் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |