இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கீழ், திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
நேற்று (ஏப்ரல் 20) 19.00 மணியளவில் காயல்பட்டினம் வருகை தந்த அவர், நகரின் அனைத்து வீதிகளுக்கும் வாகனங்களில் சென்றவாறு வாக்கு சேகரித்தார். திமுக அங்கத்தினர் ஆங்காங்கே அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
வேட்பாளருடன், அவரது சகோதரியும் - தமிழக முன்னாள் அமைச்சருமான பெ.கீதா ஜீவனும் இணைந்து வாக்கு சேகரித்தார்.
திமுக காயல்பட்டினம் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.காதர், நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் மற்றும் கட்சியின் நகர நிர்வாகிகள் இதன்போது உடன் சென்றனர்.
படங்களுள் உதவி:
A.R.ஷேக் முஹம்மத்
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |