இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கீழ், திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு கோரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், காயல்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட - தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இம்மாதம் 19ஆம் நாளன்று நடைபெற்ற பரப்புரை நிகழ்வுகளில், அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் உள்ளிட்டோர் பரப்புரையாற்றினர்.
முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், பாங்காக் காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், காயல்பட்டினம் நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகளான என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஏ.கே.மஹ்மூத் சுலைமான், பெத்தப்பா சுல்தான், எம்.எச்.அப்துல் வாஹித், எம்.இசட்.சித்தீக் உட்பட பலர் இதன்போது உடனிருந்தனர்.
திமுக தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |