இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு கோரி, ஆம் ஆத்மி கட்சியின் காயல்பட்டினம் நகர தேர்தல் பணிக்குழு சார்பில் பின்வருமாறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது:-
இப்பிரசுரம், நேற்று (ஏப்ரல் 18) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் காயல்பட்டினம் நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் வினியோகிக்கப்பட்டது.
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |