சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றம், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து - பள்ளி மாணவ-மாணவியருக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் அதன் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.செய்யித் இஸ்மாஈல் வெளியிட்டுள்ள அறிக்கை:-
கோடை கால விடுமுறையில் ஆங்கிலம் பேசும் பயிற்சி!
தம்மாம் காயல் நற்பணி மன்றம், இக்ராஃ ஏற்பாடு!
தற்போதைய கால கட்டத்தில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆங்கிலம் பேசக்கற்றுக் கொள்வதென்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆங்கிலம் பேசத் தெரியாததால் கடந்த தலைமுறையினர் படும் பாட்டையும்,இன்றைய தலைமுறையினர் படும் பாட்டையும் நாமறிவோம்..இந்த அவல நிலை வருங்கால சமுதாயத்திற்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதிற்கொண்டு தம்மாம் காயல் நற்பணி மன்றம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் 2014 SUMMER SPOKEN ENGLISH COACHING PROGRAM (மாணவ- மாணவியர்களுக்கு தனித்தனியாக பயிற்சி வகுப்புகள்) ஏற்பாடு செய்துள்ளது.இது குறித்து கடந்த மூன்று வாரத்திற்கு முன்பாக இவ்வமைப்புகளின் நிர்வாகிகள் நகரின் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று அதன் தலைமையாசிரியர்களை சந்தித்து இந்த ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் சம்பந்தமாக விளக்கி மாணவர்களை ஊக்கப்படுத்துமாறு கூறி ,மாணவர்களுக்கான விளக்க பிரசுரத்தையும்,அதற்கான விண்ணப்ப படிவத்தையும் வழங்கினர்.
எனினும், தரமான ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியில் அதிகமான மாணவ- மாணவியர்களை பயன் பெறச்செய்ய வேண்டும் என்பதற்காக இது குறித்த விளக்கப்பிரசுரத்தை நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் இன்று விநியோகிக்கப்பட்டது.
எனினும் இதனைக் காணும் கல்வி ஆர்வலர்கள் தங்களுக்கு அறிமுகமானவர்களிடமும், உறவினர்களிடமும் இதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறி 8,9,10,11 ஆம் வகுப்புகளில் படித்து முடித்திருக்கும் மாணவ-மாணவியர்களை இந்த ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி வகுப்பில் கலந்து பயன் பெறச்செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
ஆர்வமுள்ள மாணவ-மாணவியர் இதன்கீழ் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பிரதி எடுத்து பூர்த்தி செய்தும் இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் வழங்கலாம்:-
விண்ணப்பப் படிவத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்மாம் காயல் நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |