எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் என்.பி.ஜெகனுக்கு ஆதரவு கோரி திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளாகச் சென்று, பிரசுரங்களை வினியோகித்து வாக்கு சேகரித்துள்ளனர். விபரம் வருமாறு:-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கீழ், திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு கோரும் வகையில், இம்மாதம் 17ஆம் நாள் வியாழக்கிழமையன்று 17.30 மணியளவில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினர் திரளாகச் சென்று, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து வாக்கு சேகரித்தனர்.
திமுக காயல்பட்டினம் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், அவைத்தலைவர் கிதுரு முஹம்மத், நிர்வாகிகளான ஆர்.எஸ்.கோபால், யு.நவ்ஃபல், கல்ஃப் செய்யித் உள்ளிட்ட கட்சியினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோரும் இதன்போது உடனிருந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |