இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன் ஓரம்சமாக, தேர்தலுக்கு முன் செய்யப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் உள்ளிட்ட - அரசியல் கட்சிகளின் அடையாளங்களை வெளிப்படுத்தும் அனைத்தையும் தேர்தல் நிர்வாகம் அகற்றியுள்ளது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் அம்பல மரைக்காயர் தெரு - சதுக்கைத் தெரு இடைச்சாலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் - அதன் தேசிய - மாநில நிர்வாகிகளின் படங்கள் ஒரு சுவற்றில் வரையப்பட்டிருந்தது. அவற்றின் முகங்கள் மட்டும் பழைய செய்தித் தாள்களைக் கொண்டு மறைக்கப்பட்டுள்ள காட்சிகள்தான் இவை!
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|