காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், யு.கே.ஜி. பயின்று முடித்து, முதல் வகுப்பில் நுழையும் மழலை மாணவ-மாணவியரை ஊக்கப்படுத்தும் நோக்குடன் அவர்களுக்கு பட்டமளிப்பு விழா இம்மாதம் 10ஆம் நாள் 15.30 மணியளவில், பள்ளி வளாகத்தில், பள்ளி தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி தலைமையில் நடைபெற்றது. பள்ளி ஆசிரியை அமலா ராணி அனைவரையும் வரவேற்றார்.
பள்ளியின் முன்னாள் மாணவியரான எம்.ஆர்.நஃபீஸத் தாஹிரா, எம்.ஏ.கே.ஃபாத்தமா ஸில்மியா, எம்.ஏ.மைமூன் முபஷ்ஷரா ஆகியோர் இவ்விழாவில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, மழலை மாணவ-மாணவியரை வாழ்த்தி, பட்டச் சான்றிதழ்களை வழங்கினர்.
கோடை விடுமுறையின்போது குழந்தைகளைக் கவனிக்கும் முறைகள், அவர்களுக்குப் பிடித்தமான பயனுள்ள பொழுதுபோக்குகளை வழங்கல் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி பள்ளி முதல்வர் உரையாற்றினார்.
பள்ளி ஆசிரியை கார்த்திகா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
பட்டம் பெற்ற மழலை மாணவ-மாணவியரை, பள்ளி தாளாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், தலைமையாசிரியை, ஆசிரியையர் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.
கடந்த ஆண்டு பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட மழலையர் பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |