சிந்திப்பீர் செயல்படுவீர் posted bySalai Sheikh Saleem (Dubai)[14 April 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34302
அன்பான சகோதரர் களே,
நான் ஒரு திமுக காரன் இருந்தாலும், இன்றைக்கும் கூட DCW விஷயமாக தேர்தல் புறக்கணிப்பு என்றால் முதல் ஆளாக நிர்ப்பது நான் தான். அனால் ஒரு தனி மனிதன் அதுவும் தேர்தலில் டெபாசிட் கிடைக்குமா இல்லையா என்னும் விளிம்பில் நிற்கும் ஒரு மனிதன் தனக்கு ஒட்டு விழ வேண்டும் என்பதற்காக எதையும் சொல்லுவார் (உண்மையில் அவர் ஒரு போராளி அது இது என்பதெல்லாம் இருக்கட்டும்) அவரால் அந்த தனி மனிதனால் என்ன செய்ய முடியும் ? அப்படியானால் இது TRIAL AND ERROR முறையில் இன்னுமொரு ஐந்து ஆண்டுகளை வீனடிக்கப்போகிரீர்களா ??? DCW மற்றும் கேன்சர் காரணிகள் அறிதல் போன்ற இயக்கங்களை நீங்கள் எல்லாரும் இணையதளைத்தில் எழுதிக்கொண்டும் பேசிகொண்டிருந்த சமயத்தில் ஊரில் என் பொன்னான நேரங்களை நமது சமுதாய நலன் கருதி செலவழித்தவன்.
ஊரில் சிலருக்கு தி மு க வெறுப்பு கண்களை திரை இடுகிறது ஊரில் எது நடந்தாலும் அதை தி மு க அனுதாபிகள் என்று ஏளனமாக எடுத்துக்கொள்ள தோனுகிறது. ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் தெளிவா அரசியல் தெரிஞ்சு இருக்காங்க. இணையதளத்தில் கருத்து பதிபவர்கள் அதிகம் பேர் வெளிநாடுகளில் வசிப்பதால் இங்கே உள்ள அரசியல் தகிடுதத்தம் தெரிய வாய்ப்பில்லை.
எல்லாவற்றையும் விட மேலாக, இந்த தேர்தல் மிக முக்கியமாக மத சார்பின்மையை நிலை நட்ட வேண்டிய ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. இதில் நமது ஓட்டுக்களை அவன் அதை சொல்லுகிறான் இவன் இதை சொல்லுகிறான் என்று வீணாக எதையும் நம்பி உங்கள் வாக்குகளை சீரழித்து விடாதீர்கள். உங்கள் ஓட்டுக்களை தி மு க தவிர மற்ற கட்சிகளுக்கு வாக்களித்து ஒரு பிணம் தின்னி பரதேசிக்கு மகுடம் சூட்டி நம்மை நாமே சீரழிக்க வேண்டாமே ???? கருணாநிதி கலிமா சொல்லிய இஸ்லாமியனும் இல்லை திமுக முஸ்லீம் லீக்கும் இல்லை, அவர்கள் எல்லா மதத்தினரையும் சமமாக மதிப்பவர்கள். சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தட்டிக்கேட்பவர்கள். இந்த அடிப்படையில் அவர்கள் நமக்கு கண்டிப்பாக தீங்கு விளைக்க மாட்டார்கள் என்றே நம்புவோம். அதுதான் உண்மையும் கூட.
தினத்தந்தி தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் மதுரை ஆதீனம் "அம்மா மத வாதத்தை முன் வைக்கும் பி ஜ பி யை ஏன் விமர்சிக்க வில்லை" என்று கேட்டதற்கு சூசகமாக ரோடு போட்டு விட்டார், தேர்தல் முடிவிர்க்குப்பின் உங்களுக்கே அது தெரிய வரும் என்று தீர்க்கமாக. எனவே அதிமுக விற்கு அளிக்கப்படும் ஒவ்வொரு இஸ்லாமியனின் வாக்கும் அது நேரடியாக பி ஜே பி க்கு தான் கண்டிப்பாக போய் சேருகிறது எனபதை தயவு செய்து உங்கள் உள் மனதில் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.
திரும்பவும் நீங்கள் கேட்பீர்கள் பி ஜே பி கூட்டணி என்று . அது வாஜ்பாய் இருந்த பி ஜ பி , தி மு க விற்கு தந்த வாக்குறுதிகளின் அடிப்படையில். அது தவறு என்று இவர்களின் நடத்தைகளால் என்று தெரிந்ததோ அன்றே தன தவறுக்கு "தங்க தாம்பாளத்தில் விழுந்த கீறல் " என்று நமது சமூகத்தை திருப்பியும் சேர்த்துகொண்ட பண்பு எந்த அரசியல் வாதியிடம் இருக்கிறது சொல்லுங்கள் ???
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross