செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: பாஜக ஆட்சிக்கு வந்தால் தேசிய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும்! பரப்புரை பொதுக்கூட்டத்தில், முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இஸ்லாத்தின் வெற்றிக்கு உறுதுணையாவோமாக! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! . (yanbu)[14 April 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34341
காயல் மகபூப் அவர்கள் புனித கஃபத்துல்லாஹ்வில் கையேந்தி கேட்ட துவாவை வல்ல அல்லாஹ் கபூல் செய்வானாக ஆமீன்!
அன்பு இஸ்லாமிய சகோதரர்களே,அன்றைய இக்கட்டான சூழ்நிலையில் பல நிபந்தனையுடன் ப.ஜ.க விற்கு தி.மு.க ஆதரவு அளித்தது உண்மைதான்.ஆனால் அந்த பெரிய தவறு தெரிந்தோ,தெரியாமலோ நடந்து விட்டது. அதற்காக இன்றுமுதல் மனம் வருந்துகிறேன் என்று கலைஞர் பலதடவை அறிவித்தும் விட்டார்!ஏன் நமூரில் நடந்த கூட்டத்தில் கூட பகிரங்கமாக தன் தவறை ஒப்புக்கொண்டு மனம் வருந்தி பேசினார் அல்லவா?அன்று முதல் இன்றுவரை அந்த பாசிசி கட்சியுடன் எந்த நிலையிலாவது கை கோர்த்தாரா? இல்லையே!
காங்கரஸ் கூட்டணியில் கசப்புடன் இருந்தாலும் அரசுக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்காததற்கு காரணம்,இதன் மூலமாக மதவாத சத்தி ஆட்சிக்கு வந்து விடக் கூடாதே என்ற ஒரு சிறுபான்மையரின் பாதுகாப்பு கேடையமாக விளங்கிய இத் தலைவனை இன்னும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கலாமா?
மத்தியில் மோடியின் ஆட்சியமைந்தால்,ஒரு பாபர் மசூதியை இடித்தவர்கள்,இன்னும் ஓராயிரம் மசூதியை இடித்து இந்த நாட்டில் மிகப்பெரிய இனக்கலவரத்தை ஏற்படுத்தி ரதக்களரியுடைய கொடூர காட்சியாகத்தான் இந்த நாட்டைப் பார்க்க முடியும் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் கலைஞரும்,ஸ்டாலினும் திரும்ப,திரும்ப உள்ளப்பூர்வமாக சொல்லிவரும் இவர்களா வருங்காலத்தில் மோடியுடன் கை
கோர்ப்பார்கள்!
சிந்திக்கவேண்டும்,தி.மு.க அணியைதவிர்த்து மற்றைய அணியின் தலைவனோ,தலைவியோ(கம்னிஸ்ட் நீங்கலாக)
ப ஜ காவிற்கோ,மோடிக்கோ எதிராக ஒரு வார்த்தை சொல்கிறார்களா? அல்லது நம் முஸ்லிம் சமுதாய பாதுகாப்பிற்காக எந்த ஒரு வாககுறுதியாவது அவர்கள் வாயிலிருந்து வெளி வருகிறதா?அத்தனை பேர்களுக்கும் அதிகார வெறி,பதவிப்பித்து,எந்த இழிநிலைக்கு சென்றாலும் எனக்கு,பெட்டியும்,தொகுதியும் தந்தாலே போதும் என்று பறந்தலையும் பச்சோந்தி கூட்டம் தானே தற்போது வலம் வருகிறது!
கடைசிவரை தி.மு.க வா? பா ஜா க வா? என்று பெட்டியும்,தொகுதியும் பேரம்பேசப்பட்டு,முடிவில் எங்கே "கனம்" கூடுதலோ அங்கே சென்ற ஒரு நடிகனுக்கு தற்போது தி.மு க. கசக்கிறது. ஊழல நிறைந்த கட்சியாக தெரிகிறது. மோடிதான் மனித புனிதன் என்று இரவில் ஒருவார்த்தையும் விடிந்தபின் தெளிந்தபின் ஒரு வார்த்தையுமாக உளறுகிறார். நான் என்ன பேசினேன் என்று எனக்கே மறந்து விட்டது என்று பலகூட்டங்களில் சொல்லியும் வருகிறார்!
இன்றைக்கு தோன்றிய ஒரு சில புதிய கட்சியின் வேட்பாளர் கள் சுமார் 13 இலட்சம் வாக்காளர்களடங்கிய ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடுகிறார்கள் யார் இவர்களுக்கு ஓட்டு போடுவார்கள்? நல்லவனாக இருந்தால்
மட்டும் போதுமா,வல்லவனாகவும் திறமையான் ஆளுமை ஆற்றல் நிறைதவனாக இருக்கிறானா என்பதை அறிய வேண்டுமே. அவருக்கு அந்த அனுபவம் வந்த பிறகே அவரை ஆதரிப்பதற்கு இந்த நாட்டின் சிறுபான்மையர் முதல் அனைவரும் முன்வருவார்கள்.என்னுடைய இந்த உதாரணம் ஆம் ஆத்மி கட்சிக்குதான் 100% சதவீதம் பொருந்தும்!
முதலில் பெரும்பான்மை இனத்தவர்களின் ஓட்டைப்பெற்று திறம்பட ஆட்சி செய்து,சிறுபான்மையரின் பாதுகாப்பை உறுதி செய்யட்டும்.அதன் பிறகு அவர்களை ஆதரிப்பதற்கு பரிசீலிக்கலாம்!அதை விட்டு விட்டு ஏதோ அவசர கோலத்தில்,ஆராயாமல் முடிவெடுத்து நம் வாக்கை அளிப்போமேயானால் தற்போதுள்ள நிலையில்,நம் வாக்கு வீணாகி,அவர் வெற்றியும் பறிபோகும்!
சிறுபான்மையர்களாகிய நாம் தற்போது நம்மை பயமுறுத்தும் ஒரு பூதத்தின் முன்னால் நிற்கிறோம் எந்த நேரத்திலும் நம்மை விழுங்கி விடுமோ என்ற அச்சத்தில் அல்லாஹ்விடம் அஞ்சி நடுங்கி துவா கேட்கிறோம் ,அவன் நினைத்தால் அரை நொடிகூட ஆகாது பெரிய பூததைக்கூட புஸ்வானமாக ஆக்கி விடுவான்!
ஆகவே அன்பு இஸ்லாமிய சமுதாயமே இன்று நமக்கு ஆதரவளிக்கும் ஒரே அணி ஜனநாயக முற்போக்கு கூட்டணியாகும்,வேறெந்த கட்சியும் முஸ்லிம்களுக்கு கொடுக்காத மரியாதையை,நான்கு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி அழகு பார்க்கிறது இந்த ஜனநாயக் முற்போக்கு முற்போக்கு கூட்டணி. மதவாதத்தை முறியடிப்போம் என்று சபதம் ஏற்கும் அணி எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பாக முஸ்லிம் வாழ்வுரிமைக்குறிய 3.5.சதவீத இடஒதிக்கீட்டை கொடுத்தது இந்த அணியின் தலையான கட்சி தி.மு.க. தான்!
முஸ்லிம்களுக்கு இந்த இடஒதிக்கீடு தேவையில்லை என்று அம்மையார் பகிங்கரமாக எதிர்த்தும் நம் இன மக்களுக்காக கொடுத்த அந்த நன்றிக்கடனுக்காகவாவது நாம்அனைவரும் நன்றிமறவா உண்மையான முஸ்லிம் மாந்தர்கள் என்பதற்க்கடையாளமாக நம் வாக்கை ஜனநாயக் முற்போக்கு கூட்டணிக்கு செலுத்துவோமாக!எங்கு திரும்பினும் அந்த அணிக்கு ஆதரவு அல்லாஹ்வின் உதவியால்பெருகிக்கொண்டே போகிறது அந்த முன்னோன் நாம் மகிழும் வெற்றியைத் தந்தருள்வானாக ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross