இணை வைக்காத இஸ்லாமியர்களுக்கு மட்டுமே இதன் தத்துவம் விளங்கும். posted byM.S.SAYYID MOHAMMED (BANGKOK)[16 April 2014] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 34387
ம.ம.க.வோ. ஹைதர் அலியோ அப்படியென்ன மன்னிப்பே இல்லாத குற்றத்தைச் செய்து விட்டனர்.
கோவை கலவரத்தின் போது நம் மக்கள் கொல்லப்பட்டதை விடவும், பொருட்கள் சூறையாட காவல்துறை பாதுகாப்பு அளித்ததை விடவும், இன்று வரை விசாரணைக் கைதிகளாக சிறையில் வாட வழிவகுத்ததை விடவும் கொடூரமான செயல்களை செய்துவிட்டனரா?
குஜராத் கலவரத்தின் போது பா.ஜ.க.வுடன் கொஞ்சி குலாவிய தி.மு.க , தான் உள்ளிருந்து அனுபவித்து வரும் பதவி சுகத்தை இழக்க விரும்பாத தி.மு.க , பா.ஜ.க.வின் அந்த பாசிச ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகள் ஆள உதவிய தி.மு.க, இந்த தேர்தல் முடிந்தவுடன் பா.ஜ.விற்கு ஒரு சில சீட்கள் தான் தேவை என வந்தால், அது தி.மு.க. அ.தி.மு.க. இருவரிடமும் இருந்தால் நான் தருகிறேன் என்று முண்டியடித்தக்கொண்டு ஆதரவு கொடுக்கும் தி.மு.க. என முந்தா நாள் வரை மூச்சிற்கு மூன்னூறு முறை முழங்கிக் கொண்டிருந்தார்களே, அந்த தி.மு.க.வை விடவுமா ம.ம.க.வினர் மோசமானவர்கள்.
ம.ம.க.விடம் ஒரே ஒரு சீட் தான் உள்ளது. அது பா.ஜ.க.விற்கு ஆட்சி அமைக்க தேவைப்படுகிறது, அந்த நேரத்தில் பா.ஜ.க.வும் அவர்களிடம் ஆதரவு கேட்டால் அப்போது ஆட்சி அமைக்க, ம.ம.க ஆதரவு கொடுத்து விடுவார்களோ என்ற அச்சமா?
தி.மு.க.வை மன்னித்து விடலாம் ஆனால் ம.ம.க.வை மன்னிக்கவே முடியாது என்றால் அப்படி என்ன தேவனே வந்தாலும் விடமாட்டேன் என்ற குற்றத்தை செய்து விட்டனர்.
அண்ணனிடம் மன்னிப்பு கேட்காதவரை அல்லது அண்ணன் மன்னிக்காதவரை யாருக்கும் விமோசனம் இல்லை என்பதே நிதர்சனம்.
ம.ம.கவிற்கு எதிரான நிலைப்பாடு என்ற அண்ணனின் கோட்பாடால் ஒவ்வொரு முறையும் ஆதரவு நிலைமை மாறிப் போகிறது. இந்த தடவை ம,ம,க, தி.மு.க.பக்கம் சென்று விட்டதால் மாற்றமான நிலை எடுக்க அண்ணன் விரும்பினார். ஒப்புக்கு சப்பாணியாய் செயற்குழுவைக் கூட்டி பில்டப் கொடுத்து அ.தி.மு.க. விற்கு ஆதரவாகப் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டார்.
ஆனால், இதற்கு மாவட்ட பொதுக் குழுவில் ஆதரவு இல்லை. கொடி பிடிக்க ஆள் இல்லை.அண்ணனுக்கு பிரஷர் கொடுத்தனர். அண்ணன், பா.ஜ.க.வை விமர்சித்து பேச ஜெயலலிதாவிற்கு பிரஷர் கொடுக்க முயன்றார். ஆனால், ஜெயலலிதாவோ, கட்சிக் காரர்களையும் பா.ஜ.க.வை விமர்சிக்கக் கூடாது என்று கட்டளைப் போட்டு விட்டார்.
மீண்டும் அண்ணன் ஜெயலலிதாவிற்கு பிரஷர் கொடுத்தார்.. போயா, உன் ஆதரவும் தேவையில்லை, கத்திரிக்காயும் தேவையில்லை. நிபந்தனை இல்லாத ஆதரவு தருவதாக இருந்தால் தா. இல்லையேல் நடையை கட்டு, உனக்காக என் கோட்பாடை எல்லாம் மாற்ற முடியாது என மறுத்துவிட்டார்.
வேறு வழியில்லை. ஜெயலலிதா, பா.ஜ.க.வை விமர்சித்து பேச மறுப்பதாலும், தி.மு.க.மற்ற கட்சியினர் பா.ஜ.க.வை கடும்ம்மையாக விமர்சிப்பதாலும் அ.தி.மு.க.விற்கு ஆதரவு வாபஸ் என பயமுறுத்தினர். (அப்போதும் தி.மு.க.விற்கு ஆதரவு என்று சொல்லவில்லை.) அதிலும் ஜெயலலிதா பணியவில்லை.
இப்போது செயற்குழுவைக் கூட்டினார். தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கவே அநேகர் விரும்பினர். அண்ணனுக்கு அது பிரச்னையில்லை. ஏனெனில், ம.ம.க.விற்கு எதிரான நிலைப்பாட்டால் ஏற்பட்டது தான் அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு தவிர, தி.மு,க, விற்கு எதிர் என்பதால் அல்ல.
அப்படியானால் ம.ம.க.வை ஆதரிப்பது இணை வைப்பாகிவிடுமே. அது தான் ‘ம.ம.க.வை ஆதரிக்க மாட்டோம்’ என்ற நிபந்தனையுடன் தி.மு.க.விற்கு ஆதரவு.
இணை வைக்காத இஸ்லாமியர்களுக்கு மட்டுமே இதன் தத்துவம் விளங்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross