p .j .அவர்களுக்கு மனம் திறந்த மடல்:.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[16 April 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34406
p .j .அவர்களுக்கு மனம் திறந்த மடல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் சகோதரர்
P.ஜைனுலாப்தீன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்! நீங்கள் நலமுடனும் நீடித்த ஆயுளுடனும் வாழ்ந்துயர வல்ல அல்லாஹ்வை வேண்டியவனாக,
என்னுடைய இந்த சிறிய மடலை எழுதுகிறேன்.இமியளவு நேரங்க்கூட ஓய்வில்லாமல் தேர்தல் பணியில் பம்பரம் போல் சுழன்றுகொண்டிருக்கும் தங்களுக்கு சாதாரண சாமானிய ஆதம் சுல்தானின் இந்த அன்பு வேண்டுகோள் மடலுக்கு ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்குமாறு வேண்டுகிறேன்!
இந்த தேர்தலில் உங்கள் இயக்கமான TNTJ ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரிப்பதென்ற முடிவுக்கு மிக்க மகிழ்ச்சியையும், முஸ்லிம் மானிடன் என்ற அடிப்படையில் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்!
தங்கள் அமைப்பின் நிலைப்பாட்டில் மூன்று தொகுதிகளில் காங்கரசை ஆதரிப்பதென்று முடிவு எடுத்திருக்கிறீர்கள் ,
காங்கரசை ஆதரிப்பததென்பது உங்கள் உரிமை ஆனால் அதே நேரத்தில் மயிலாடுதுறையில் நம் சமுதாய சகோதரரை எதிர்த்து களம் இறங்குவோம் என்ற நிலைப்பாடுதான் எந்த ஒரு உண்மையான,மார்க்க உணர்வோடு ஒன்றன கலந்த முஸ்லிமும் ஏற்க முடியாத ஒன்றாகும்.எந்த சூழ்நிலையிலும் சமுதாய ஒற்றுமையை விரும்பும் என்போன்றவர்களின் மனதில் ஏதோ ஒரு கவலைக்கோடு கிழித்து போன்ற உணர்வே மேலோங்குகிறது!
தா மு மு கவிற்கும் உங்கள் இயக்கத்திற்கும் உள்ள கருத்து வேற்பாட்டை ஆராய நான் முன் வரவில்லை.அதே நேரத்தில் நாம் மிகவும் சிரமப்பட்டு நான்கு முஸ்லிம் வேட்பாளர்களடங்கிய தொகுதிகளைப்பெற்று அதுவும் வெற்றிவிளிம்பிக்கு சென்றுகொண்டிருக்கிறது என்ற சந்தோஷ செய்திகள் இறைவன் உதவியால் இன்றுவரை வந்துகொண்டிருகின்ற இந்த வேளையில்,அந்த நான்கு வைரங்களில் ஒரு வைரத்தை தாங்கள் பட்டைதீட்ட மறுப்பதோடு ,அது வைரமல்ல வெறும் கண்ணாடிக்கல் தான் என்று நம் எதிரியும் எள்ளி நகையாடும் வாய்ப்புக்கு உங்களின் முடிவு வழிகோளாக அமைந்துவிடுமோ என்பதை என்னும்பொழுது உள்ளபடியே உள்ளம்வேதனை அடைகிறது!
அன்பின் P .J.அவர்களே தற்போது நம்முன் இருக்கும்
பொதுஎதிரியை வீழ்த்த எந்தெந்த வியூகத்தை வகுக்க வேண்டுமென்பதை தாங்கள் அறியாதவர் அல்ல.இந்த நேரத்தில் நமக்குள் இருக்கும் கருத்து மாச்சிரியத்தையும், கருத்து வேறுபாடுகளையும் களைந்தெறிய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் அல்லவா இருக்கிறோம்!
முஸ்லிம்களுக்கு இடஒதிக்கீடு வேண்டுமென்று மிகப்பெரிய சிறை நிரப்பும் போராட்டதை TNTJ அறிவித்தது அப்போரட்டத்திற்கு நம் இன மக்களுக்கு நன்மை கிடைக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு எந்தவித பகைமை உணர்வையும் பாரட்டாது எல்லா முஸ்லிம் அமைப்பும் குறிப்பாக தாமு மு க முதல் அனைத்து சுன்னத்துல் ஜமாத் அமைப்பு சகோதரர்களும் குடும்பத்தோடு வந்து உங்களோடு ஒன்றன கலந்து துணை நின்று ஒத்துழைத்த அந்த நிகழ்ச்சியை மனசாட்சியுடன் சற்று உங்கள் மனக்கண் முன்னே நிறுத்திப்பாருங்கள்!
ஆகவே அன்பு சகோதரர் P J அவர்களே நன்மையையும், பெருந்தன்மையையும் முன்னிறுத்தி நம் சமுதாய மக்களுக்காக உங்களின் முடிவை மறுபரிசீலனை செய்து,
நம் நான்கு இஸ்லாமிய வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைக்க முன்வருமாறு அன்புடன் வேண்டுகிறேன்!
நன்மையையும்,உண்மையும் உள்ள கருத்தை மறுபரிசீலனை செய்ய என்றும் தயங்காதவர்தான் நீங்கள் என்ற புண்ணியப்பெயரை பெற்றவர் என்பதாலும், உங்களுக்கு நான் புதியவன் அல்ல, தவ்ஹீத் இயக்கம் தளிர்விட்ட காலத்திலிருந்தே காயலில் உங்களோடு சேர்ந்து பணியாற்றி பல இன்னல்களையும் சொல்லடியும், கல்லடியும் பெற்றவர்களில் இந்த முஹம்மது ஆதம் சுல்தானும் ஒருவன் தான் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னாலுள்ள நினைவுகளை அசைபடுத்தினாலே புரிந்துகொள்வீர்கள் என்ற அந்தகால நிகழ்வு சாட்சியத்தினாலும், அந்த நெருக்கதின் உரிமையினாலும் என் இந்த வேண்டுகோளை வைத்திருக்கிறேன்! நல்ல மறுபரிசீலனை முடிவிற்காக காத்திருக்கிறோம்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross