செய்தி: ஜித்தா கா.ந.மன்றத்தின் “புற்றுக்கு வைப்போம் முற்று” குறுந்தகடு விற்பனை வருமானம் புற்று நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பண உதவி posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[21 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3441
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பத்து புற்றுநோயாளிகளின் மருத்துவ செலவினங்களுக்காக தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் வழங்குவதென தீர்மானித்து அதன் அடிப்படையில் முதல் கட்டமாக ஏழு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ். அதுவும் மறைமுகமாக வழங்கியிருப்பது மிகவும் சிறந்த செயல்.
இது போன்ற மிக,மிக நல்ல உதவிகளை / பணிகளை செய்து வரும் ஜித்தா காயல் நற்பணி மன்றத்திற்கும் அதற்காக அதிக அக்கறை எடுத்து செயல்படுத்தும் அனைத்து சகோதரர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்! அவனது கருணையை இம்மையிலும், மறுமையிலும் பொழிவானாக ஆமீன்.
----------------------------------------
புற்று நோயால் பாதிக்கப்பட்டு உடலாலும், உள்ளத்தாலும் வேதனைப்பட்டு கொண்டிருக்கும் நோயாளிக்கும், அவர்கள் உறவினருக்கும் இந்த சிறிய பண உதவியானது அவர்களுக்கு பெறும் ஆறுதலை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
எல்லாம் வல்ல அல்லாஹ்! அந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவரையும் விரைவில் குணமடைய கிருபை செய்வான், எல்லோரும் அவர்களுக்காக "துஆ" செய்ய வேண்டியது.
----------------------------------------
மக்களே!
இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதாரம் இல்லாத காரணத்தால் அதற்கு சிகிச்சை எடுக்க முடியாமல் அல்லது சிகிச்சையை தொடரமுடியாமல் அரைகுறையாக சிகிச்சையை விட்டு, நோய் முற்றிப்போய் மரணத்தை தழுவுகிறார்கள்.
இதை நாம் அனைவரும் அறிவோம், எனவே மக்களே! ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற அளவு இந்த வகைக்காக பண உதவி செய்து அவர்கள் சிகிச்சையை முறையாக, முழுமையாக எடுத்து குணம் அடைந்திட உதவி செய்வோமாக. வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross