குழந்தை பருவம் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[21 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3444
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சகோதரர் ஜியாவுதீன் சொல்வது போல் குழந்தைகள் மாறு வேடம் போட்டிருந்தாலும் அவர்கள் "குட்டு " வாங்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் குழந்தைகள் அதுவும் சிறு குழந்தைகள்.
மாறு உடையணிதல் என்றாலே ஆண், பெண் உடையும் - பெண், ஆண் உடையும் அணிதல்தான் அது மட்டுமல்ல சென்ற வருடம் இந்த பள்ளியில் சுதந்திர தின விழாவில் மாறு வேடமிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனால் இதுவும் மாறு வேடமாகத்தான் இருக்கக்கூடும்.
----------------------------------------
எல்லா குழந்தைகளும் பிறக்கும்போது பாவமற்றவர்களாகவே (இஸ்லாமாக) பிறக்கிறார்கள். பின்னர் அவர்களின் பெற்றோர்தான் அவர்களை, " யூதராகவோ " , " கிறிஸ்தவராகவோ" அல்லது "நெருப்பை " வணங்குகிறவர்களாகவோ மாற்றுகின்றனர் என்று, மார்க்கம் தெளிவாக கூறுகிறது.
ஆகையால் பெற்றோர்கள், தம் பிள்ளைகளுக்கு மார்க்கம் அனுமதிக்கின்ற வரைமுறைகளுக்கு உட்பட்டு கல்வியை புகட்ட வேண்டும்.
----------------------------------------
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள் :
" தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப்
பயிற்சியுமேயாகும் ". ( மிஷ்காத் )
" பெண், தன் கணவனின் வீடு, அவனுடைய குழந்தைகளுக்குப் பொறுப்பாளியாவாள் " என்பது புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீத் கிரந்தங்களில் வரும் ஒரு ஹதீதின் சுருக்கம்.
குழந்தைகளைக் கண்காணித்து வளர்ப்பதும், அவர்களுக்கு கல்வியும் ஒழுக்கப்பயிற்சியும் அளிப்பதுமான இரட்டைப் பொறுப்பு தாயைச்
சார்கின்றது.
இந்த பொறுப்பை பற்றி மறுமை நாளில் அல்லாஹ்! விசாரிப்பான் என்பதை பெற்றோர்களே! மறந்திட வேண்டாம்.
----------------------------------------
மழலையர் பள்ளி:
இந்த பள்ளியை பற்றி கேள்வி பட்டவரை மக்களிடம் நல்ல மதிப்புகள் உண்டு.
இருந்தாலும் பள்ளியின் நிர்வாகம் மார்க்க வரம்பை மீறாது கல்வியையும், நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
மழலை பருவம், குழந்தை பருவம் என்கின்ற 1 முதல் 5 வயது வரை உள்ள வளர்ச்சிதான், மிகவும் முக்கியமானது. இந்த வயதிலேதான் மார்க்க
சம்பந்தமான போதனைகளை தொடங்கிட வேண்டும்.
எனவே இதை மனதில் நிலை நிறுத்தி பள்ளி நிர்வாகம் செயல்பட்டால் பள்ளியும் சிறந்து விளங்கி, நல்ல மாணவ மணிகளை உருவாக்கிட முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross