செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: DCW ஆலைக்கெதிரான நடவடிக்கைகள் குறித்து KEPA அமைப்புக்கு ஆம் ஆத்மி வேட்பாளர் கையெழுத்திட்டு வாக்குறுதிக் கடிதம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வெற்றிக்கனி கனிந்து கரங்களில் தவழ துடித்துக் கொண்டிருக்கிறது,.. posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[19 April 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34455
இந்த நச்சு ஆலைக்கெதிராக ஆர்ப்பரித்தபோதும் சரி,முழு கதவடைப்பு போராட்டத்திலும் சரி எல்லா அரசியல் கட்சிகளும் அந்த ஆலைக்கெதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். அவ்வாலை எதிர்ப்பறிவிப்பு பிரசுரத்தில்கூட எல்லா அரசியல்கட்சி களின் பெயர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது!
தற்போதுபோல் அப்போதும் இதே "KEPA" அமைப்பு அத்துனை அரசியல் கட்சிகளிடமும் எதிர்ப்பு நிலை கடிதம் கேட்டிருந்தால் தந்துதான் இருப்பார்கள்.
ஆகவே,ஆம் ஆத்மி கட்சியின் எதிர்ப்பு நிலை கடிதம்
வரவேற்க்கதக்கதுதான் அதே நேரத்தில் வானலாவிய முக்கியத்துவம் அடைந்துவிட்ட தகுதிக்கு சென்றுவிட்டதாக நினைத்து விடவும் கூடாது!
தற்போது நம் முன்னே இருப்பது நம் சமுதாயத்தின் வாழ்வாதாரத்திற்குறிய உத்தரவாதம் தரும் அணிக்கு, சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு கல்வி,தொழில் வாய்ப்புக்கு வழிகோலும் இடஒதிக்கீட்டைத்தர உத்தரவாதமளிக்கும் அணிக்கு,மதவாதத்தை தூக்கியெறிந்து,நம் இனம் சுதந்திரமாக வாழ நம் மார்க்க கடமையை நிறைவேற்ற,நம் புனித பள்ளி வாசல்கள் பாதுகாக்கப்பட,அயோத்தியில் அயோக்கியர்களால் கட்ட நினைக்கும் கட்டடத்தை கட்ட தடைவிதிக்கும் சட்டத்தை இயற்றுவோம் என்று உறுதிமொழி அளிக்கும் அணிக்கு,பொது சிவில் சட்டம் கிஞ்சித்தும் தலைதூக்கவிடமட்டோம் என்று உறுதிபூணும் அணிக்கு, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள சிறுபான்மை முஸ்லிகளின் பாதுகாப்பு அரணாகவும் ,அவர்களின் கலாச்சாரம், வாழ்க்கைமுறை, இறையாண்மை அனைத்திற்கும் அணுவளவும் பங்கம் வராமல் பாதுகாப்போம் என்று அறைகூவலிடும் அணிக்குத்தான் ஒவ்வொரு உண்மையான முஸ்லிமும் வாக்களிக்க வேண்டும்!
மேலே சொன்ன அத்துனை உறுதிமொழியையும் ஜனநாயக முற்போக்கு கூட்டணித்தலைவர்கள் திரும்பத் திரும்ப நாம் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு தந்து கொண்டிடுக்கிரார்கள்!
வேறு எந்த அணித்தலைவர்களும் இவ்வளவு வெளிப்படையாக நாங்கள் சிறுபான்மைச்சமுதாய மக்களாகிய முஸ்லிம்களின் பக்கம்தான் என்று பட்டவர்த்தனமாக பறைசாற்ற முன்வரவில்லை!
ஆகவே நம் புனித மார்க்க பற்றுள்ள அனைத்து இஸ்லாமியர்களும் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கே வாக்களிக்க முடிவெடுத்து விட்டார்கள்.வல்லோன் உதவியால் வெற்றிக்கனி கனிந்து கரங்களில் தவழ துடித்துக் கொண்டிருக்கிறது,சுவைசுகம் காண கனபொழுது காத்திருங்கள் காயல் கண்மணிகளே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross