செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனுக்கு ஆதரவு கோரி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன் பரப்புரை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு! posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் (சிங்கப்பூர் )[21 April 2014] IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34502
1999 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின் 5 ஆண்டுகள் தொகுதி பக்கமே வராதவர். குறிப்பாக நமதூருக்கு ஏதும் செய்யாதவர். அவரின் சொந்த ஊரான நாசெரத் ரயில் நிலையத்தை பாருங்கள். வருவாய் ரீதியாக நமதூரை விட பின்தங்கியுள்ள நாசரேத் ரயில்வே ஸ்டேஷனையும் நமதூர் ரயில்வே ஸ்டேஷனையும் ஒப்பிட்டு பாருங்கள். இவரின் சாதனையை விளக்க.
2006 சட்டமன்ற தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்டார். அதிமுக சார்பில் அனிதா அண்ணாச்சி இரண்டாவது முறையாக (2001-ல் வெற்றி பெற்ற பின்) அப்போது, ஒரு தேர்தல் சுவரொட்டி பார்த்தேன். இன்றும் பசுமையாக இருக்கிறது. வாசகம் இது தான். அவரின் புகைப்படத்துடன், " நான் தான் உங்கள் முன்னாள் MP . தேர்தலில் நேரத்தில் பார்த்து இருப்பீர்கள். இப்போது மீண்டும் தேர்தலில் நிற்க வாக்கு கேட்டு வந்துள்ளேன். எனக்கு வாக்களிப்பீர்களா?"
இந்த திமுகவினர், அவரை ஏன் வாக்களிக்க அழைக்கின்றனர்? அவர் நமதூருக்கு செய்த நலத்திட்டங்களை சொல்லி வாக்கு கேட்கவா? 22-ம் தேதி வரை, இவர், ராதிகா செல்வி மற்றும் 'சித்த வைத்தியர்' ஜெயதுரை ஆகியோரை வாக்கு சேகரிக்க நமதூருக்கு கொண்டு வராதீர்கள். ஏனென்றால், இந்த மூவரும் நமதூருக்கு செய்த துரோகங்கள் அப்படி பட்டது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross