செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: DCW ஆலைக்கெதிரான நடவடிக்கைகள் குறித்து KEPA அமைப்புக்கு ஆம் ஆத்மி வேட்பாளர் கையெழுத்திட்டு வாக்குறுதிக் கடிதம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சிந்தித்து வாக்களிப்போம் !! posted bysalai.Mohamed Mohideen (Philly)[22 April 2014] IP: 69.*.*.* United States | Comment Reference Number: 34525
" புனித மார்க்க பற்றுள்ள அனைத்து இஸ்லாமியர்களும் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கே வாக்களிக்க முடிவெடுத்து விட்டார்கள்" - இது நமக்கு புதிதல்ல. ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு (அதான் திமுகவுக்கு) ஒட்டு போடுவதை இஸ்லாத்தின் 'ஆறாவது' கடமையாக நம்மை காலம் காலமாக நம்ப வைத்து விட்ட முரட்டு (பகுத்தறிவு???) பக்தர்களின் வெளிப்பாடு… அது இன்று வரை தொடர்கின்றது என்று நினைக்கின்றேன்.
நாம் இப்படியே 'ஞான சூனியமாகி' போனதன் விளைவு… காயல்பட்டினத்தை கலைஞர் பட்டணம் என்று கூறி வருபவர்கள் பலர். மாற்றத்தை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டார்கள் நம் இளைய தலைமுறையினர். மார்க்கத்தையும் ஓட்டு போடுவதையும் தொடர்பு படுத்துவதில் எவ்வித பலனும் இல்லை. மாற்றம் ஒன்று தான் மாறாதது!!
செம்மறி ஆட்டு கூட்டமாக திராவிட கட்சிகளுக்கு வாக்களித்தே பழகிப்போன நாம்… வாழ்வில் ஒருமுறையாவது சுய அறிவுடன் சிந்தித்து வாக்களிப்போம் !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross