செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: முஸ்லிம்கள் ஓரணியில் திமுகவுக்கு வாக்களிப்பது மட்டுமே மதவாத சக்திகளைத் தடுக்கும்! திமுக வேட்பாளர் ஜெகனுக்கு ஆதரவாக மவ்லவீ ஹாமித் பக்ரீ பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஹஸ்பியல்லாஹ் நியமுல் வக்கீல்! .. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[23 April 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34570
ப.ஜ. க மதவாத சக்தி,மசூதியை இடிக்கும் சக்தி,முஸ்லிம்களை ஒடுக்கும் பொது சிவில் சட்டம் கொண்டுவரும் கட்சி ஆகவே அதை அணுவளவும் ஆட்சி பீடத்தில் ஏற்ற அனுமதிக்கக்கூடாது என்பதுதான் எங்கள் தலையாய இலட்சியம் என்று தகப்பனும் மகனும் மாறி மாறி வாக்குறுதியை வழங்குவது மட்டுமல்ல, இதேபோல் ஜெயலலிதா உட்பட மற்றைய (ப ஜ க.வுடனுள்ள) அணிகள் வாக்குறுதி தர தைரியமும் திராணியும் இருக்கிறதா? என்று சவால் விடுபவர்களைப்பார்த்து,
தேர்தலுக்குப்பின் ப.ஜ.க வை பற்றிக்கொள்பவர் கருணாநிதி என்று திருவிழாவில் தின்பண்டம் கேட்டு அடம்பிடித்து அழும் குழந்தைப்போல் ஓயாது ஒப்பாரிவைப்பவர்களை எப்படித்தான் நம்ப வைப்பது.
கலைஞரும்,ஸ்டாலினும் நெருப்புக்குண்டத்தில் இறங்கி சத்திய சோதனை செய்து காட்ட வேண்டியதுதான் பாக்கி.
அன்பு இஸ்லாமிய சகோதரர்களே,நம் இனம் காக்கப்பட வேண்டும் என்ற உண்மையான உள்ளச்சம் உள்ளவர்களே,
இமையமலை வீரியத்தைப்போல் எழுந்துநின்று நம்மை பயமுறுத்திக்கொண்டிருக்கும் எதிரியை வீழ்த்தவேண்டும் என்ற வைராக்கியத்தில் உள்ளவர்களே,நம் இஸ்லாமிய அனைத்து அமைப்புகளும் ஓரணியில் திரண்டுவிட்டோம் என்ற வல்லமைமீது நம்பிக்கை கொண்டவர்களே,
நீங்கள் எந்தவித் புதுக்கவர்சிக்கும்,பளபளப்பு பசப்பு வார்த்தைக்கும் மயங்கி விடாமல்,அவர்கள் வார்த்தைகள் மேலோட்டமாக உண்மைபோல் தெரிந்தாலும்,அவர்களின் வைப்புத்தொகையைக்கூட காப்பாற்ற முடியாத வாக்குகளைப் பெறக்கூடியவர்களுக்காக வலம் வரும் விட்டில் பூசிகளின் மின்மினிப்பில் மதியிழந்திட வேண்டாம்!
அன்பு இஸ்லாமிய இனிய நெஞ்சங்களே,நம் இனம் காக்கப்பட வேண்டுமென்றால்,நாம் ஒன்றிணைந்த இஸ்லாமிய அமைப்புகள் ஆதரிக்கும் அணியுடைய உதய சூரியன் சின்னத் திற்க்கே உங்கள் வாக்கையளித்து உண்மையான முஸ்லிம் கடமையாற்றிய மன நிம்மதியை அடைவீர்களாக!
மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள், முஸ்லிம்கள் இங்கு எந்த சொத்தும் வாங்கக்கூடாது என்று மதவெறியர்களின் ஆட்டம் இப்பொழுதே ஆரம்பமாகிவிட்டது. அந்த ஓநாய்கள் கூட ஓரணியில் நிற்கிறது,அவர்களிடமிருந்து தப்பிப்பிழைக்க நினைக்கும் நாமனைவர்களும் குறைந்தபட்சம் இந்த அபாய கால கட்டத்திலாவது ஒன்றுபடுவோமாக!
இதற்க்கு மேலும் எப்படிக்கெஞ்சிக் கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை,ஒவ்வொருவரின் பாதங்களைப்பிடித்து,நம் இனத்திற்கு வந்திருக்கும் பேராபத்தைக்காப்பாற்றுங்கள் என்றுகூட கேட்க தயார்தான் ஆனால் நம் மார்க்கத்தில் அதற்க்கு அனுமதி இல்லையே!
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அச்சத்தை நீக்கி,நாம் மகிழும் வெற்றியையும்,பாதுகாப்பையும் தந்தருள்வானாக ஆமீன்!
பின் குறிப்பு: என்னுடைய இந்த உள்ளச்சுத்தியான விளக்கத்திற்கு பிறகும் ,இதற்க்கு உள்நோக்கம் கற்பித்து இதையும் எதிர்த்து விமர்சனம் செய்பவர்களை கிஞ்சித்தும் கண்டுகொள்ளவேண்டாம்.வல்ல அல்லாஹ் உண்மையான வர்களின் உள்ளதை உண்ணிப்பாக கவனிக்க வல்லவன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross