எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் விரும்பும்,வெற்றியை தந்தருள்வானாக! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[26 April 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34627
kayalpatnam .com கணிப்பு கிட்டத்தட்ட சரியாக வரலாம்,ஆனால் வாகளிதவர்களின் மனநிலையை அந்த முன்னோனைத் தவிர வேறு எவரும் துல்லியமாக அல்ல முடியாது.தற்போது வாக்கு சதவீதம் கூடியிருப்பது மக்களுக்கு நம் ஜனநாயக அரசாட்சி யின் நம்பிக்கையையே காட்டுகிறது!
வாக்களிக்குமுன் நம்முடைய கடமை நாம் யாருக்கு வாக்களிக்கவேண்டுமென்பதை வலியுறுத்திவந்தோம்!வாக்களித்து விட்டார்கள் அவர்களின் உரிமையை அவர்களுக்கு சரியானதொரு தேர்வென முடிவெடுத் திருக்கிறார்கள்! தேர்வு முடிவு எப்படிவந்தாலும் ஏற்றுக்கொள்வதோடு வாக்களித்த வர்கள் அதன் பயனையும் அனுபவித்தாக வேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை!
அனிதா அண்ணாச்சியின் ஆதரவாளர்கள் தி.மு.க விற்கு எதிராக வாக்களிக்க பணிக்கப்பட்டார்கள் என்ற கருத்தாளம்போல் கோடிட்டிருக்கிறீர்கள்.அது உண்மையாக இருக்குமேயானால் இதைவிட ஒரு துரோகம் வேறு எதுவும் இல்லை.
எந்த கட்சியானாலும் கட்சிக்குள்ளிருந்து குரல் கொடுக்கலாம் ஆனால் (உள்குத்து என்ற )துரோகத்தில் ஈடுபடுவதென்பது,சாதம் தின்ற தட்டிலேயே சாக்கடையை நிரப்புவதற்கு சமம் உங்களுக்கு கருத்து வேறுபாடிருந்தால் ஒதிங்கி இருப்பதுதான் உத்தமம்,
அதற்கும் மேலே பிரச்னை போனால் கட்சியை விட்டு விலகுவது தான் பெருந்தன்மை.
நம் வீட்டிற்குள் ஒரு பிரச்னை வந்து நம்மை தனிமைபடுத்த முயன்றால் ஒரு நாளில் நம்மை புரிந்து கொள்வார்கள் என்று அமைதி காப்பதுதான் கண்ணியம்,அதை விட்டுவிட்டு நம் எதரியிடமே நம் வீட்டையழிக்கும் வேளையில் ஈடுபட்டால், அவரை அடுத்தவீட்டுக்காரன் கூட மதிக்க மாட்டான்!
இப்பேற்பட்ட குணமுள்ளவரைத்தான் நான் விமர்சிக்கிறேன் யாரும் தவறுதலாக அனிதா அண்ணாச்சியை குறிப்பிடுவதாக கற்பனையிடவேண்டாம் அனிதாஅண்ணாச்சியைப்பொருத்த வரை அவர்மீது எனக்கு மரியாதையுண்டு.என் மகள் கல்யாண மேடையில்வந்து முன்னிலைவகுத்து சிறப்பித்து தந்தவர்களில் அவரும் ஒருவர்.அவரின் நேரான, மறைவான கொடைத்தன்மை யை பல இடங்களிலும் புகழாரமாக பேசியும் இருக்கிறேன்!
அண்ணன் அழகிரியைபபொறுத்தவரை அவர் தி.மு.கவிலிருந்து தூக்கி எறியப்பட்டவர்அவரின் தற்போதைய நிலையைப் பொருத்தவரை அவர் கண்ணோட்டத்தில் அது சரியே!
அடுத்து,ஊழலுக்கு எதிராக வாக்களிக்கவேண்டும், வாக்களித்தும் இருக்கிறார்கள் என்றும் பேசப்படுகிறது! நான் கேட்கிறேன் ஊழல் இல்லாத கட்சி எது? தயவு செய்து சொல்லுங்கள்.
அண்மையில் முளைத்த ஆம் ஆத்மி கட்சியிலிருந்து டெல்லி சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களில் ஒரு உறுப்பினர், ஆம் ஆத்மி தலைமை பற்றியும்,அங்குள்ள ஊழல் பற்றியும், நேர்மையற்ற நடுநிலையற்ற நிர்வாகம் பற்றியும் எல்லா நிருபர்களுக்கு மத்தயில் பேட்டியளித்ததை நாம் அனைவரும் கேட்டோம் ஆட்சிக்கு வந்து ஒரு சில நாட்களுக்குள்ளேயே இந்த குழாயடி குழப்பம் ஆரம்பமாகியது.உண்மையை இறைவன்தான் அறிவான்!
இதையடுத்து வேறு எந்த கட்சியில் ஊழல் இல்லை ஒரு கட்சியையாவது கை காட்ட முடியுமா?100 ரூபாய் ஊழல் செய்தாலும்,100 கோடி ஊழல் செய்தாலும் திருடன் திருடன்டதானே!
10 ரூபாய்திருடியவனை பெற்றோர்கள் அடித்து புத்திமதி சொல்லி திருத்துவார்கள்.10 கோடி திருடியவனை அரசு சிறையில் தள்ளி திருத்துவார்கள்.ஆக இருவரும் திருடர்கள் தானே.
ஏன் நம்மில் 99%சதவீதம் பேர் அவன் திருடன்,இவன் ஊழல் பேர்வழி, இலஞ்சம் வாங்குபவன் என்ற பெயரை சூட்டுகிறோம், நம் வாழ்கையை நினைத்துப்பார்த்தோமா, நாம் மனிதரில் புனிதர் என்று சொல்லிகொண்டால் மட்டும் போதாது வாழ்ந்தும் காட்டவேண்டும்! ஒரு சாதாரண பேருந்து இருக்கை முன்பதிவு முதல் பிள்ளைகள் படிக்க அனுப்பும் பள்ளிகள்வரை நம்மில் 99% சதவீத மக்களில எந்த கையூட்டும் இல்லாமல் காரியமாற்றி இருக்கிறோமா?
ஒரு செண்டு நிலத்திற்க்கு கூட பத்திர பதிவு கட்டணத்தை செலுத்தும் பொழுது ஒரு பைசாகூட பிசிறில்லாமல் செலுத்தியவர்களை இந்த 99%சதவீத மக்களில் ஒருவரைக் கூடகாட்ட முடியுமா?அடுத்தவர்களை அயோக்கியர்கள் ஊழல் பேர்வழிகள் என்றழைக்க நம்மில் பெரும்பான்மையான மக்களுக்கு எந்த யோக்கியதையும், அருகதையும் இல்லை!இல்லை!!இல்லை!!! நம் மனசாட்சியை தொட்டு நாமே கேட்டுக்கொள்வோம் நாம் 100% சதவீதம் சுத்தமானவர்கள் தானாவென்று!.
எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் விரும்பும்,வெற்றியை முஸ்லிகளுக்கு சாதகமான,பாதுகாப்பான வெற்றியை தந்தருள்வானாக ஆமீன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross