Re:...இனிப்பும் கசப்பும் posted bymackie noohuthambi (chennai)[02 May 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 34693
இனிப்பான செய்தி. வாழ்த்துக்கள். ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்.
சிலருக்கு இது கசப்பான செய்தி. இரத்தக் கறை படிந்த மகிந்தவின் கரங்களால் சரித்திர புகழ் பெற்ற காயல் மண்ணின் மைந்தனுக்கு விருதா?
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று தனக்கு சரி என்று பட்டதை செய்துமுடித்து 30 ஆண்டுகாலம் இரத்தக் காடாக மாறியிருந்த நாட்டை பூக்காடாக மாற்றிய பெருமை ராஜபக்சே அவர்களுக்கு உண்டு என்ற உண்மை, நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று நிறம் மாறிக் கொண்டிருக்கும் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு எப்படி தெரியும். ராஜ பக்சே எதிர்ப்பு சுலோங்களின் பின்னால் குளிர்காயும் அவர்களுக்கு இந்த செய்தி கசப்பாகத்தான் இருக்கும்.
வந்தாரை வாழ வைக்கும் வளமிக்க நாட்டை ஒரு கூட்டம் சிதைத்து சின்னாபின்னமாக்கி கொண்டிருந்தது. தன் தமிழின தலைவர்களை கொன்று குவித்தார்கள். பள்ளிவாசல்கள் உள்ளே சென்று அல்லாஹ்வை தொழுது கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்தார்கள். கோடீஸ்வர முஸ்லிம்களை 24 மணி நேரத்தில் உடுத்த வேட்டியோடு விரட்டி அடித்து பிச்சைக்காரர்களாக அனாதைகளாக அகதிகளாக தெருவில் அலையவிட்டார்கள் என்ற உண்மை, இங்குள்ள தமிழர்களுக்கு எப்படி தெரியும். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று சொல்பவர்கள் அங்கு சென்று பார்த்தால் உண்மை புரியும்.
SUNDARA SIRI BARANEE SURANDHI ATHI SOBAMAANA LANKA - DHAANA DHANAYA NEKA MAL PALATHURU PIRI JAYA BHOOMIYA LANKA என்ற அந்த நாட்டு தேசிய கீத வரிகளை பாடினாலே நாவில் தேனூறும். அந்த சுந்தர தீவை துண்டாட நினைத்தவர்களை அந்த நாட்டு வரைபடத்தை சுருக்கிவிட நினைத்தவர்களை பந்தாடியவர் என்று அந்த நாட்டு மக்கள் மஹிந்த ராஜபக்சேவை போற்றுகிறார்கள்.
இருட்டினில் வாழும் மனிதர்களே கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள். நல்லவர் உலகம் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross