Re:...சமரச சகோதரி posted bymackie noohuthambi (chennai)[05 May 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 34724
சகோதரி தாஹா அவர்களின் வபாத் செய்தி கேட்டு மனம் அதிர்ந்தது.
நீண்ட நாட்களாகவே சுகவீனமாக இருந்தாலும் அதை எல்லாம் வெளிக் காட்டிக் கொள்ளாமல் குடும்ப நிகழ்சிகளில் கலந்து கொண்டு முன்னின்று பேசுபவர். ஏதாவது சலசலப்பு ஏற்பட்டால் தைரியமாக முன்வந்து அதை இரு சாராரும் ஏற்றக் கொள்ளக்கூடிய ஒரு சமர தீர்வை முன்வைத்து அதில் வெற்றி காண்பவர். அதை நான் எங்கள் குடும்ப திருமணத்தில் நேரடியாக கண்டு அனுபவித்து உணர்ந்தவன்.
தன் எல்லா மக்களையும் ஹாபில்களாக ஆலிம்களாக உருவாக்க - ஒரு தனி ஆளாக நின்று அதை செய்யும் ஆற்றல் ஒரு பெண்மணிக்கு முடியுமா?
"முடியும்" என்று சாதித்துக் காட்டியுள்ள பெண்மணி தாஹா லாத்தா அவர்கள்.
அன்பு, அரவணைப்பு, கண்டிப்பு எல்லாம் ஒன்றாக சேர்ந்து இந்த குடும்பத்தை வழிநடத்தி வந்த அன்பு சகோதரி தாஹா அவர்களின் மண்ணறையை அல்லாஹ் சுவர்க்க பூங்காவாக ஆக்குவானாக. அவர்களின் பாவாங்களை மன்னித்து, அவர்கள் நல அமல்களை பொருந்திக் கொண்டு மேலான சுவர்க்க வாழ்வைக் கொடுத்தருள்வானாக.
சமரச சகோதரியை இழந்து வாடும் குடும்பத்தினர் எல்லோருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக.ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross