எனது அன்பின் ராத்தா அல்ஹாஜ்ஜாஹ் தாஹா மர்யம் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
அவர்களின் இழப்பு நம் குடும்பத்தில் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும் .
அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க நாம் அனைவரும் பொறுமை செய்துக்கொள்வது நம் அனைவரின் மீதும் கடமையாகும் .
எனது சார்பிலும் , எனது குடும்பத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை குடும்பத்தினர்கள் , உற்றார் , உறவினர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்
.
அருமை மச்சான் அல்ஹாஜ் அஹ்மத் முஹ்யித்தீன் , அருமை மருமக்கள் மௌலவி நஹ்வி முஹம்மத் இப்ராஹீம் , அல்ஹாஜ் நஹ்வி ஈசா ஜக்கரியா , நஹ்வி செய்கு அலி ராசிக் , நஹ்வி மௌலவி ஹாபில் முஹ்யித்தீன் லெப்பை மற்றும் யாவருக்கும் எனது நற் சலாமினையும் , ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்
. சப்ர் எனும் பொறுமையை கடைபிடிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் .
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகள் , குற்றங்கள் , குறைகள் யாவற்றையும் மன்னித்து , மண்ணறையை வெளிச்சமாக்கி , விசாலமாக்கி , கேள்விகணக்கை இலேசாக்கி சுவன சோலைவனமாக்கி , நாளை மறுமையில் அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம் ) அவர்களின் மேலான
சபாஅத்தை பெற்று ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தில் அண்ணல் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம் ) அவர்களின் அசல் பாகத்தில் குடியமர எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ! ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross