CA படிப்பதற்கு பி.காம் தேவையில்லை posted byM.M. Seyed Ibrahim (Chennai)[10 May 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 34877
CA படிக்க ஆசைப்பட்டால் பத்தாவது முடித்த உடனேயே ICAI (http://www.icai.org/) அமைப்பில் பதிவு செய்யுங்கள். அவர்கள் தரும் கோர்ஸ் / பாட புத்தகங்களை படித்தாலே +2வில் 90% மேல் வாங்கலாம்.
12வது முடித்தவர்கள் உடனேயே பதிவு செய்து வரும் டிசம்பர் மாதம் CPT தேர்வு எழுதுங்கள். டிசம்பர் 2015-இல் IPCC (INTERMEDIATE) தேர்வு எழுதுங்கள்.
அதன் பின்னர் 3 வருடம் ஒரு ஆடிட்டரிடம் வேலை பார்த்துக்கொண்டே (5,000 முதல் 10,000 வரை மாதம் STIPEND கிடைக்கும்), FINAL EXAMS and IT COURSES படிக்க வேண்டும்.
12வது முடித்து, 1.5 வருடங்களில் ரூபாய் 5,000 முதல் 10,000 வரையும், 4.5 வருடங்களில் மிக எளிதாக ரூபாய் 25,000+ சம்பாதிக்கலாம். இதற்க்கு தேவை விடா முயற்சி. இதற்க்கு லட்ச ரூபாய் செலவு செய்ய தேவையில்லை.
பி.காம் படித்தால் என்ன ஆகும்?
1. மூன்று வருடங்கள் வீணாகும்
2. 12வது வரை நன்கு படித்தவர்கள், காலேஜ் வந்ததும் ரிலாக்ஸ் ஆவார்கள். ACCOUNTANCY, COMMERCE படிப்புகள் இவ்வளவு தானா என நினைக்கலாம். இதை முடித்தபின், CA படிப்பதற்கு மிக கஷ்டப்படலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross