Re:...திக்கு தெரியாத காட்டில்... posted bymackie noohuthambi (chennai)[11 May 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 34885
அன்புள்ளம் கொண்ட ஜலீல் அவர்களின் வபாத் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. நேற்று முன்தினம் வரை அவரது விமர்சனங்கள் இந்த இணையத்தளத்தில் வெளிவந்து கொண்டிருந்தன.
1983ம் ஆண்டு. எனது சவூதி பயணத்தின் ஆரம்ப காலம். திக்கு தெரியாத காட்டில் திசை தெரியாமல் நின்றபோது என் தோளில் கைபோட்டது ஒரு உருவம். அது வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகை நாள்தான் ஆனால் எனக்கு இங்கு யாராவது நமதூர் பிள்ளைகள் வந்திருக்க மாட்டார்களா என்ற ஏக்கப் பெருமூச்சு நாள். என் தோள் பற்றிப் பிடித்தது நண்பர் ஜலீல் அவர்கள்தான்.
நான் சவூதியில் தம்மாமில் காலெடுத்து வைத்த நாளில் முதலாவது சந்தித்தது அவரைத்தான். எங்கள் நட்பு அன்று முதல் தொடர்ந்தது. எங்கு கண்டாலும் என்னுடன் ஒரு உரையாடல். அது ஊர் நலம் பற்றி அல்லது காயல் நல மன்றம் பற்றி அல்லது என்னுடைய இணையதள கருத்துக்கள் பற்றிய பாராட்டுக்கள்.
நீதி கேட்டு நெடிய பயணம் வந்த கலைஞரின் காயல்பட்டின வருகையின்போது "என் தந்தை கலைஞருக்கு கைத்தடி கொடுக்க முயற்சி செய்தவன் நான்" என்ற செய்தி எனக்கு எப்போதோ மறந்து விட்டது. இதே இணைய தளத்தில் அந்த ரகசியத்தை நினைவு கூர்ந்து தேர்தல் கால நினைவலைகளில் என்னை ரகசிய கண்காணிப்பு கேமரா மூலம் உன்னிப்பாக கவனித்தவர்.
பேசுவதும் மென்மை - பேச்சிலும் மென்மை -கனிவு -இவற்றைக் குழைத்து எனக்கு ஊட்டிய நண்பர். புளியங் கொட்டையார் குடும்ப பெரியவர்கள் நமதூருக்கு செய்துள்ள சேவைகளை - வாரி வாரி வழங்கிய வளமிக்க நிலங்களைப் பற்றி அவர் என்னிடம் நிறையவே சொல்லி அதிசயிக்க வைத்தவர். எங்கள் வாப்பா மக்கி ஆலிம் அவர்களுக்கும் இந்த குடும்பத்துக்கும் இருந்த நெருக்கம் நான் கண்டியில் படித்தபோது HUSSAINIYA JEWELLERY போகும்போதெல்லாம் வெளிப்படும்.
வேறு எதுவும் எழுத தோன்றவில்லை.
மர்ஹூம் அவர்களின் பிழைகளை அல்லாஹ் பொறுத்து அருள்வானாக. அவர்களின் நற்செயல்களை பொருந்திக் கொள்வானாக. அவரது மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக. மேலான சுவன பதியில் வாழ செய்வானாக. இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross