Re:...என்னா ஊரிலேயே இருக்கிறாய், புறப்படு! posted bymackie noohuthambi (chennai)[11 May 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 34923
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். என் பால் மிகவும் அன்பும் அக்கறையும் பிரியமும் உள்ளவர்கள்.நான் ஊரில் 2 மாதத்துக்கு மேல் இருந்தால், அவர்கள் கண்களுக்கு தப்பாமல் இருக்க முடியாது.
நூஹுத்தம்பி என்னா ஊரிலேயே இருக்கிறாய் புறப்படு என்று என்னை உசுப்பி விடுவார்கள். சில சமயங்களில் எனக்கு அது ஊக்க மருந்தாக இருந்தது. என்னையே நான் நொந்து கொண்டு புறப்பட்டு விடுவேன்.
நம்மை பற்றி நம் பெற்றோர்தான் இப்படி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இவன் ஊரிலிருந்தால் நமக்கென்ன என்று யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் 1969இல் இருந்தே இவர்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்.
இப்படி சோம்பி இருக்க மாட்டானே, என்ன பிரச்சினையோ தெரியவில்லையே என்று யோசித்து, தக்க சமயத்தில் எனக்கு உற்சாகமூட்டி என்னை தொழிலுக்கு புறப்பட செய்து விடுவார்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்ட போதும் மொகுதூம் பள்ளிக்கு 5 வேளையும் தொழுக வந்து விடுவார்கள். எப்போது கண்டாலும் நலம் விசாரிப்பார்கள்.
அல்லாஹ் மர்ஹூம் அவர்கள் பிழைகளை பொறுத்து, நல் அமல்களை பொருந்திக் கொண்டு மேலான சொர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக. அவர்கள் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக. அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross