Re:...திமுகவோ அதிமுகவோ பீஜெபிக்கு ஆதரவு கொடுத்தால்... posted bymackie noohuthambi (chennai)[13 May 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 34947
தம்பி ஷுஐப் அவர்களின் ஆதங்கம் புரிகிறது. ஆனால் நீங்கள் சூளுரைத்து இருக்கிறீர்களே , "திமுகவோ அதிமுக.வோ பீஜெபிக்கு ஆதரவளித்தால்...எழுதிவைத்துக் கொள்ளுங்கள்"...
ஒன்றும் நடந்து விடாது.
ஒரு சினிமா வசனம். வடிவேலுவின் ஆளை எதிரியின் ஆள் அடித்து காயப் படுத்தி விட்டான். வண்டியை பூட்டிக் கொண்டு வடிவேலு கிளம்பிய வேகத்தைப் பார்த்தால் - ஒரு கொலை விழும் என்று நினைத்துக் கொண்டிருக்க, அவர் வந்த வேகத்தில், "எனது ஆளை அடித்தவன் ஒரு தாய் தகப்பனுக்கு பிறந்திருந்தால் இந்த கோட்டை தாண்டி வா பார்க்கலாம்" என்பார். உடனே ஒருவன் வருவான். இப்போது வடிவேலு சொல்வார் "நான் ஒத்துக் கொள்கிறேன், நீ ஒரு தாய் தகப்பனுக்கு பிறந்தவன்தான்".
தேர்தலில் என்ன நடந்தது. திமுக கூட்டணியில் இணைந்த இஸ்லாமிய கட்சிகள் யாரும் இந்த உறுதிமொழியை கலைஞரிடமிருந்து பெறவில்லை, கடைசியாக அவர்களை ஆதரித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உள்பட. அதிமுகவில் இருக்கும் அல்லது அவர்களை ஆதரிக்கும் எந்த இஸ்லாமிய கட்சிகளும் அம்மா அவர்களிடமிருந்து இந்த உறுதிமொழியை பெறவில்லை. பீஜெபியுடன் கூட்டு சேர்ந்துள்ள மதிமுக,தேமுதிக ,பாமக இதிலுள்ள எந்த முஸ்லிம்களும் அந்த தலைவர்களிடம் இந்த உறுதிமொழியை கேட்கவே முடியாது.
அடுத்து, எல்லா கட்சிகளிலும் முஸ்லிம்கள் அங்கம் வகிக்கிறார்கள், பிஜேபி உள்பட. முஸ்லிம்கள் ஒரு தனி இயக்கமாக செயல்பட்டால் நீங்கள் சொல்லும்...எழுதிவைத்துக் கொள்ளுங்கள்...சாத்தியமாகலாம்.
தெரு, முஹல்லா, சுன்னத ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் என்று அகீதவாரியாகவும் பிரிந்து நின்று, எனக்கு இரண்டு கண்கள்போனாலும் பரவா இல்லை - எதிர்க்கும் ஜமாஅத் ஆளுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்று வெறி பிடித்து அலையும் நமக்கு நீங்கள் சொல்லும் சூளுரை சாத்தியமா? தன் மடியில் வளர்ந்த பிள்ளை மனித நேய மக்கள் கட்சி - அதன் வேட்பாளரை மயிலாடுதுறையில் ஆதரிக்க மனம் வராத தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம்கள் இந்த சமுதாயத்துக்கு என்ன செய்தியை சொல்லியிருக்கிறார்கள், கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். பதவி மோகம் பிடித்தவர்கள் மத்தியில் ஜமாஅத் வெறிகள் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் இந்த "புண்ணிய" பூமியில் -
நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் -
ஒன்றுமே புதிதாக நடந்து விடாது. உணர்ச்சி வேறு உணர்வு வேறு. நீங்கள் இஸ்லாமிய உணர்வுகளைப் பற்றி பேசுகிறீர்கள் - நான் உணர்சிகளைப் பற்றிப் பேசுகிறேன். உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையும் செய்வார்கள். உணர்வு வசப்பட்டவர்கள் சிந்தித்து செயலாற்றுவார்கள். நம்மிடையே உணர்ச்சி வசப்பட்டவர்கள் நிறைய இருக்கிறார்கள் அவர்கள் பின் விளைவுகளை பற்றி யோசிக்க மாட்டார்கள். உணர்வுபூர்வமாக சிந்திப்பவர்கள் குறையவே இருக்கிறார்கள்.அவர்கள் சொல்வதை யாரும் கணக்கெடுக்க மாட்டார்கள்
இந்த இக்கட்டான வேளையில் நாம் அல்லாஹ்விடமே கை ஏந்தி கேட்போம்.
ALLAAHUMMA LAA THUSALLITH ALAINAA MANN LAA YAKHAAFUKA VALAA YARHAMANAA..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross