செய்தி: ஐக்கிய விளையாட்டு சங்க கைப்பந்து வீரரது ஜனாஸா இலங்கை கல்முனையில் நல்லடக்கம்! காயலர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி... posted bySalai.Mohamed Mohideen (Philly)[14 May 2014] IP: 67.*.*.* United States | Comment Reference Number: 34965
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!! இச்செய்தியை படித்தவுடன் மனதில் சற்று அதிர்வை ஏற்படுத்தியது. சகோதரர் அவர்களை அஷர் தொழுகையில் அருஸியா பள்ளியில் காணலாம். அநேகமாக அவரை எனது பள்ளி/கல்லூரி நாட்கள் முதல் அருசியாவில் அஷர் ஜமாத்தில் பலமுறை சந்தித்துள்ளேன். அஷர் தொழுகை முடிந்தவுடன் தஃலீம் (அமல்களின் சிறப்புகள்) வாசிப்பார். அவர் தஃலீம் வாசிப்பதை கேட்பதற்கென அவரை சுற்றி நாங்கள் அமர்ந்திருப்போம். அவருடைய தப்லீக் ஜமாஅத்தின் செயல்பாடுகளை பலமுறை எண்ணி வியந்துள்ளேன்.
வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை வழங்கிடுவானாக ஆமீன் ! அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் சபூரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையினை தந்தருள்வானாக ஆமீன் !
மரணத்தை நினைவு கூறும் இத்தருணத்தில், நம் அனைவருக்கும் இறை அச்சத்தை தந்து தினந்தோறும் நல்ல பல அமல்களை செய்யும் பாக்கியத்தை வல்ல இறைவன் தருவானாக!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross