வெற்றி பெற்ற திரு.நட்டர்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்ஷா அல்லாஹ், இன்னும் 5 வருடங்களுக்கு இவர் தான் நமது பிரதிநிதி. நம்முடைய கோரிக்கைகளை இவர் மூலம் நிறைவேற்ற, நமதூர் அதிமுக பொறுப்பாளர்கள் மூலம் முயற்சி எடுக்க வேண்டும்.
குறிப்பாக, நமதூர் ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை நீட்டுதல் & அடிப்படை வசதிகளை, இவர் மூலம் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே ஒப்புதல் கொடுத்தது, இந்த இரு பணிகளுக்கு மட்டும் தான். ஆனால், அதை விட, முக்கியமானது, நடைமேடையின் உயரத்தை, உயர்த்துதல்.
நமதூர் வருமானத்தின் அடிப்படையில், ரயில்வே போர்ட் உயர்த்த முடியாது. ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் 'தொகுதி மேம்பாட்டு நிதி' மூலமாக இதை செய்ய முடியும். அப்படி தான், நாசெரத் ஸ்டேஷன் நடைமேடையை, அந்த ஊரை சார்ந்த ஜெயசீலன், தனது நிதி மூலமாக செய்தார். (நமதூர் & நாசரேத் ஆகியவை வருமானத்தின் அடிப்படையில் சம அந்தஸ்து உள்ளவை)
கடந்த 15 ஆண்டுகளாக, திமுகவுக்கு வாக்களித்து, நாம் அடைந்த பலன் பூஜ்யம் தான். இவர் நமதூருக்கு நலத்திட்டங்கள் கொண்டு வந்தால், ஆட்டுமந்தை போல், திமுகவுக்கு வாக்களிக்காமல், வரும் தேர்தல்களில் அதிமுகவுக்கு வாக்களிப்போம். நல்லதை நாடுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross