16வது இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் - ஏப்ரல் 7 முதல் மே 12 வரை - 9 கட்டங்களாக -
நடைபெற்றன. சுமார் 55 கோடி மக்கள் கலந்துக்கொண்ட (வாக்குப்பதிவு சதவீதம்: 66.38) இத்தேர்தலின்
முடிவுகள் இன்று காலை முதல் வெளிவர துவங்கின.
இத்தேர்தல்களில் பெருவாரியான இடங்களை வென்று பாரதிய ஜனதா கட்சி, ஆட்சி அமைக்கிறது.
தமிழகத்தில் உள்ள 39 இடங்களில் - இத்தேர்தலில் தனியாக போட்டியிட்ட அ.தி.மு.க., 37 இடங்களை வென்றுள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் - அ.தி.மு.க. வேட்பாளர் ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி - 1,24,002 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 3,205
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 63,080
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 14,993
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 2,42,050
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 3,66,052
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 26,476
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 1,82,191
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 1,727
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 739
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 765
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 1,157
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 1,129
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 784
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 983
NOTA - 11,447
மொத்தம் - 9,16,778
முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன:
அ.தி.மு.க. - 670, தி.மு.க. - 415, ம.தி.மு.க. - 620, காங்கிரஸ் - 143, கம்யூனிஸ்ட் - 17, ஆம் ஆத்மி கட்சி - 33, NOTA - 34, நிராகரிப்பு - 135
தூத்துக்குடியில் மொத்தம் தபால் வாக்குகள் : 2102 (காவல்துறை - 1624; இதர - 478)
|