16வது இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் - ஏப்ரல் 7 முதல் மே 12 வரை - 9 கட்டங்களாக -
நடைபெற்றன. சுமார் 55 கோடி மக்கள் கலந்துக்கொண்ட (வாக்குப்பதிவு சதவீதம்: 66.38) இத்தேர்தலின்
முடிவுகள் இன்று காலை முதல் வெளிவர துவங்கின.
இத்தேர்தல்களில் பெருவாரியான இடங்களை வென்று பாரதிய ஜனதா கட்சி, ஆட்சி அமைக்கிறது.
தமிழகத்தில் உள்ள 39 இடங்களில் - இத்தேர்தலில் தனியாக போட்டியிட்ட அ.தி.மு.க., 37 இடங்களை வென்றுள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் - அ.தி.மு.க. வேட்பாளர் ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி - 1,24,002 வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
ஏப்ரல் 24 அன்று நடந்த தேர்தலில் காயல்பட்டினத்தில் மொத்த வாக்காளர்கள் 31,886 பேரில் 19,983 பேர் வாக்களித்தனர். வாக்கு பதிவு சதவீதம்: 62.48.
இன்று வெளியான முடிவுகள்படி - காயல்பட்டினம் பகுதியில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு:
(1) எஸ். அய்யாதுரை (பஹுஜன் சமாஜ்) - 42
(2) ஏ.பி.சி.வி. சண்முகம் (காங்கிரஸ்) - 1,477
(3) ஏ. மோகன்ராஜ் (கம்யூனிஸ்ட்) - 144
(4) பி.ஜெகன் (தி.மு.க.) - 10,290
(5) ஜே. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (அ.தி.மு.க.) - 5,234
(6) எம்.புஸ்பராயன் (ஆம் ஆத்மி) - 1,175
(7) எஸ்.ஜோயல் (ம.தி.மு.க.) - 1,356
(8) ஆல்வார்சாமி கார்த்திகேயன் (சுயேட்சை) - 29
(9) எம். ஆனந்தராஜ் (சுயேட்சை) - 5
(10) சாந்தா தேவி (சுயேட்சை) - 5
(11) ஏ.எஸ். சாமுவேல் (சுயேட்சை) - 10
(12) சி. பன்னீர்செல்வம் (சுயேட்சை) - 7
(13) வி. ராம்குமார் (சுயேட்சை) - 4
(14) எஸ். வின்ஸ்டன் அந்தோ (சுயேட்சை) - 10
(15) NOTA - 195
மொத்தம் - 19,983
|