16வது இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. ஏப்ரல் 7 முதல் மே 12
வரை 9 கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தல்களில் 66.38 சதவீத வாக்குகள் (55 கோடி) பதிவானது. மொத்தம்
543 தொகுதிகளில் 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணியளவில் துவங்கும். முதல் 30 நிமிடங்கள் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
அதனை தொடர்ந்து 8:30 மணி முதல் வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியை உட்படுத்திய 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகளும் ஒரே சமயத்தில்
எண்ணப்படும்.
ஒவ்வொரு அறையிலும் 14 மேசைகளில் வாக்குகள் எண்ணப்பட்டு, ஒவ்வொரு சுற்றின் முடிவுகள் - தேர்தல்
அதிகாரியான மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்றப்பின் வெளியிடப்படும்.
காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் - தூத்துக்குடி தொகுதி முடிவுகளை உடனுக்குடன் வெளியிட, வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக அறை
இன்று காலை 7 மணியளவில்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross