16வது இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் - ஏப்ரல் 7 முதல் மே 12 வரை - 9 கட்டங்களாக -
நடைபெற்றன. சுமார் 55 கோடி மக்கள் கலந்துக்கொண்ட (வாக்குப்பதிவு சதவீதம்: 66.38) இத்தேர்தலின்
முடிவுகள் இன்று காலை முதல் வெளிவர துவங்கின.
இந்திய பாராளுமன்றத்தில் உள்ள மொத்தம் 543 இடங்களில் - பாரதிய ஜனதா கூட்டணி - ஏறத்தாழ 338
இடங்கள் (பா.ஜ.க. தனியாக 284 இடங்கள்) பெறும் நிலையில் உள்ளது. இதன் மூலம் தனிப்பெருபான்மையுடன்
அக்கட்சி ஆட்சியை பிடிக்கிறது.
தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தியாவின்
அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார்.
காங்கிரஸ் கூட்டணி - ஏறத்தாழ 58 இடங்கள் (காங்கிரஸ் தனியாக 44 இடங்கள்) பெறும் நிலையில் உள்ளது.
இவர்களை தவிர - அ.தி.மு.க, 37 இடங்களும், திரிணமூல் காங்கிரஸ் 34 இடங்களும், பிஜு ஜனதா தள் 18
இடங்களும், தெலங்கானா ராஸ்ட்ரிய சமிடி 11 இடங்களும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 9 இடங்களும், சி.பி.எம். 8
இடங்களும், சமாஜ்வாதி கட்சி 5 இடங்களும், ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களும் பெற்றுள்ளன.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 16.05.2014 / 9:00 pm]
|