நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 37 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.
இதனை முன்னிட்டு, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், தேர்தல் முடிவுகள் வெளியான நேற்று (மே 16) 17.30 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தன் கணவர் ஷேக்குடன் பங்கேற்ற ஒன்றுகூடலில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
கட்சியின் நகர நிர்வாகிகளான எஸ்.ஏ.முகைதீன், புரட்சி சங்கர், சுயம்பு, சுல்தான், நகர்மன்ற உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கும்பாரி புகாரீ உள்ளிட்டோர் இதன்போது உடனிருந்தனர்.
படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
நகர அதிமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |