நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது.
இதனை முன்னிட்டு, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், அதன் கேந்திர பொறுப்பாளர் பண்டாரம் தலைமையில், திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் சிவசெந்தில், காயல்பட்டினம் நகர செயலாளர் செபஸ்தியான், 12ஆவது வார்டு செயல் தலைவர் காளிமுத்து, 15ஆவது வார்டு செயல் தலைவர் டி.குமரன், அதன் முன்னாள் செயல் தலைவர் சின்னத்துரை, நகர முன்னாள் தலைவர் எஸ்.மகேஷ், 12ஆவது வார்டு செயலாளர் பாலமுருகன், மாரி, ஆறுமுகம், மூர்த்தி உள்ளிட்ட கட்சியினர், தேர்தல் முடிவுகள் வெளியான நேற்று (மே 16) 18.00 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நகர பாஜக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |