ஹஸ்பின் அலாஹ் நியமுல் வக்கீல்.அல்லாஹ்அனைத்தையும் அறிந்தவன்.
ஆட்சி அதிகாரத்தை அளிப்பதும் நான்தான்,அந்த அதிகாரத்தை தவிர்ப்பதும் நான்தான்.(இறைமறை:அத்தியாயம்:30 வசனம்:4)
சகோதரர் MAC .முஜாஹித்.அவர்கள் மிக அழகாக, இல்லை இல்லை அவர் மனம் நொந்து நாமினி நேர் கொள்ளவேண்டிய நிலைமையை விளக்கி இருக்கிறார்!
முடிவு வெளிவரும் இரவு ஒரு நிமிடம் தூங்க வில்லை வேறொரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவு 3 மணிக்கு வீடு வந்த நான் (இந்திய நேரம் காலை 5.30 மணி) அந்த நிமிடத்திலிருந்து ஒவ்வொரு நொடியையும் ஒவ்வொரு யுகமாக கழித்தேன்.
பஜ்ரு தொழுத இடத்திலிருந்தே தேர்தல் முடிவுகளை தொலைகாட்சி யில் கண்ட எனக்கு கண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டே இருந்தது,என்னோடு இருந்தவர்களிடம் காட்டிகொள்ளாமல் பொய் புண்முறுவளோடு பாத்ரூம் சென்று என்னை நான் சமாளித்துக்கொண்டேன்!
நான் இருக்கும் இடத்திலிருந்து புனிதமக்கா ஐந்துமணி நேர வாகன பயண தூரமாகும்,வந்துகொண்டிருக்கின்ற தீய முடிவு களை மேலும் கேட்க மனமில்லாமல், உடனே அந்த அல்லாஹ் வின் வீட்டில் சென்று முறையிட்டு அழுது புரளலாமே என்ற உணர்வே மேலோங்கியது .இரவு முழுவதும் தூக்கம் இல்லாததால் தனியே ஓட்டிசெல்ல துணிவின்றி அந்த எண்ணத்தை கைவிட்டு நான் இருக்கும் இடத்திலிருந்தே வல்ல இறைவனிடம் உள்ளம் உருக கண்ணீர்மல்க கையேந்தி
யா அல்லாஹ் சிறுபான்யராகிய எங்களுக்கு எத்திசையிலும் எதிரிகள் சூழ்ந்திருப்பதுபோல் உள்ள ஒரு அபாய நிலைக்கு தள்ளப்பட்டது போன்ற ஒரு பதட்டத்துடன் இருக்கிறோம்,
எங்களை காப்பாற்றி எங்களின் வாழ்வில் அச்சமற்ற அமைதியை தந்திடு யா அல்லாஹ் என்று துவா கேட்டேன்
என்னுடைய,மற்றும் என்னைப்போல் மனமுருகி மன்றாடிய மற்றைய அனைத்து சகோதரர்களின் துவாவும் கபூலாக
அன்பு இஸ்லாமிய சகோதர்களே நீங்களும் அவனிடமே முறையிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross