செய்தி: நகர மாணவரணி, இளைஞரணி கலைப்பு! இளைஞரணிக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு!! நகர முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கூட்டணி கட்சியின் சம்மதத்துடன் செய்திருந்தால் தவறில்லை. posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (சிங்கப்பூர் )[20 May 2014] IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 35029
நான் ஊரில் இல்லாததால், இந்த சம்பவத்தில் உண்மை நிலை தெரியாது. இருந்தாலும், வாக்குச்சாவடி முகவர் விஷயத்தில் உள்ள நடைமுறைகள் பற்றி சொல்கிறேன். இந்த நடைமுறையை இங்கே குற்றம் சாட்டப்பட்டிருக்கிறவர் மீறினாரா? என்பது ஊரில் இருந்தவர்களுக்கு , குறிப்பாக, திமுக பொறுப்பாளர்களுக்கு தெரியும்.
ஒவ்வொரு வேட்பாளருக்கும், ஒரு வாக்குச்சாவடி & வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அனுமதி உண்டு. அதனால் சில கட்சிகளே, ஓரிரு சுயேட்சை வேட்பாளரை நிறுத்தி, அவரின் முகவர்களாக தங்கள் ஆட்களை (அவரிடம் கையழுத்து வாங்கி) நியமிப்பது நடைமுறையில் உள்ளது. சில வேளைகளில், பொது எதிரியை வீழ்த்த, அரசியல் கட்சிகளே பேசி, முகவர்களை பகிர்ந்து கொள்வார்கள்.
இந்த தேர்தலில், காங்கிரஸ் ஒரு பொருட்டே இல்லை. காங்கிரஸ் கட்சியில் முகவராக இருப்பதற்கு ஆட்கள் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதனால், அதிமுக & மதிமுக வேட்பாளரை எதிர்க்க, காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் முகவராக, திமுகவினரே, சகோதரர் சலாஹுத்தீன் அவர்களை நியமித்து இருக்கலாம். திமுகவினரின் ஒப்புதலோடு செய்திருந்தால், கூட்டணி தர்மத்தை மீறியது ஆகாது.
கூட்டணி கட்சிக்கு துரோகம் செய்யும் வகையில், வாக்குச்சாவடியில் அவரின் நடவடிக்கை இருந்ததா? அல்லது தேர்தல் சமயத்தில், அவரின் செயல்பாடுகள் கூட்டணிக்கு துரோகம் செய்யும் வகையில் இருந்ததா? அப்படி நடந்திருந்தால், சகோதரர் சலாஹுத்தீன் மீது அவரின் கட்சி (முஸ்லிம் லீக்) எடுக்க வேண்டும்.
இவரின் செயலுக்கும், வேலூர் தொகுதியில், முஸ்லிம் லீக் வேட்பாளரை தோற்கடிக்க, திமுகவின் முன்னணியினரின் (துரைமுருகன் & கோ) துரோக செயலுக்கும் ஒப்பீடு செய்வது எந்த வகையிலும் சரியில்லை.
குறிப்பு. நானும் ஒரு சுயேட்சை வேட்பாளரின் வாக்குச்சாவடி முகவராக (கட்சியினர் தந்த படிவம்) இருந்தவன் என்ற முறையில் இதை தெரிவிக்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross