செய்தி: “கருத்து வேறுபாடுகள் அருளா, சாபமா?” ஜமாஅத்தே இஸ்லாமி நடத்திய பொதுக்கூட்டம்! நூஹ் மஹ்ழரீ, டாக்டர் கே.வி.எஸ். சிறப்புரையாற்றினர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...அரசியல் கூட்டங்களுக்கு சேரும் கூட்டம் ஆன்மீக கூட்டங்களுக்கு இல்லையே... posted bymackie noohuthambi (chennai)[28 May 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35117
கடந்த மாதம் நடந்த தேர்தல் திருவிழாவுக்கு எதனை கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு நமதூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். எல்லாக் கட்சி கூட்டங்களுக்கும் நிறையபேர் வந்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கவாவது கூட்டமாக கூடி இருந்ததை இதே இணையத்தளத்தில் நிழல் படங்களாக பார்த்தேன். நூறு ஆண்டுகளைக் கடந்த காங்கிரஸ் கட்சி முதல் நூறு வாரங்களுக்கு முன் முளைத்த சாதாரண மக்கள் கட்சி வரை இங்கே தடம் பதிக்க ஆசைப்பட்டு கூட்டம் நடத்தினார்கள்.
ஆனால் ஒரு ஆன்மீக கூட்டம் - நல்ல பேச்சாற்றல் மிக்க தலைவர் - உலக நாடுகள் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இஸ்லாமியத்தின் விழுமியங்களை மாற்று மத சகோதரர்களுக்கும் தெளிவாக விளக்கி கூறும் மானுட வசந்தம் என்று தொலைக் காட்சி நிகழ்ச்சியில் முத்திரை பதித்தவர் - காய்தல் உவத்தல் இல்லாமல் - கொள்கை முரண்பாடுகளுக்கு வித்திட்டு சமுதாயத்தை கூறு போட்டுக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் தெளிவான செய்திகளை மட்டுமே மக்கள் முன் எடுத்து வைக்கும் ஒரு மருத்துவ அறிஞர் ஹபீப் முஹம்மது அவர்களின் கூட்டத்துக்கு போடப்பட்டிருக்கும் சொற்ப நாற்காலிகளில் கூட அமர ஆட்கள் இல்லாத சூழல். நிழல் படம் சொல்லும் செய்தி.
இந்த நிலை இருக்கும் நமது ஊரில் நேர்ச்சை விநியோக்கிக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியதின் தாத்பரியம் புரிகிறது. நமது அரசுகள் கூட விலையில்லா பொருட்கள் மக்களுக்கு வழங்குவதாலேயே அவைகள் வெற்றி பெறுகின்றன. தேர்தலில் பணம் கொடுப்பவர்களுக்கு வாக்கு அளிக்கும் எண்ணம் பெருகி இருக்கும் நிலைதான் இங்கு உள்ளது. எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த நிலையை மாற்ற இயலாது போல் தெரிகிறது.
வெளியில் ஒரு பொதுக் கூட்டம்போட்டு உங்கள் கருத்துக்களை சொல்லாமல் இப்படி கடைப் பள்ளிக்கு எதிரில் ஒரு சிறிய இடத்தில கூட்டம் நடத்துகிறீர்களே என்று நான் ஹபீப் முஹம்மத் அவர்களை கடிந்து கொள்வேன். மருத்துவர் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும், இப்போது புரிகிறது. இந்த மேடைக்கும் ஒலி ஒளிக்கும் நீங்கள் செலவழிக்கும் பணம் வெறும் வேஸ்ட்.இந்த பணத்தை ஏழை எளியவர்களுக்கு தர்மமாக கொடுத்தால் அல்லாஹ்வுடைய அனுக்கிரகம் உங்களுக்கு உண்டாகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross