“கருத்து வேறுபாடுகள் அருளா, சாபமா?” எனும் தலைப்பின் கீழ், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இன்று 27ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 20.00 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அமைப்பின் காயல்பட்டினம் கிளை தலைவர் கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் எம்.ஏ.இஸ்ஸுத்தீன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், “கருத்து வேறுபாடுகள் அருளா, சாபமா?” எனும் தலைப்பில், குளச்சல் நூஹ் மஹ்ழரீ உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, “கலாச்சாரமே நமது அடையாளம்” எனும் தலைப்பில், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் (IFT) துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் உரையாற்றினார்.
நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இக்கூட்டத்தில் கேட்போராகக் கலந்துகொண்டனர். பெண்களுக்குத் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
கூட்ட ஏற்பாடுகளை எஸ்.எச்.லுத்ஃபீ தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் காயல்பட்டினம் நகர கிளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |