மாணவர்களின் பல்சுவைப் போட்டிகள், நிகழ்ச்சிகளுடன் - தஃவா சென்டரின் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நிறைவுற்றுள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
நமது தஃவா சென்டரில் நடைபெற்று வந்த கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாம் நிறைவு விழா இம்மாதம் 20ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று சிறப்புற நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்...
தஃவா சென்டர் சார்பாக கடந்த ஏப்ரல் 28 முதல் 20 வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு உள்ளூர் மற்றும் வெளியூர் மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்பில் வெளியூர்களிலிருந்து 43 மாணவர்களும், உள்ளூரிலிருந்து 20 மாணவர்களும் கல்வி பயின்றனர். மாணவர்களை உற்சாகப்படுத்திடும் நோக்குடன், வகுப்பின் இறுதி நாளான மே 20 வியாழக்கிழமையன்று சிறப்புப் போட்டிகள் மற்றும் நிகழ்சிகள் நடத்தப்பட்டன.
முதலாம் அமர்வு 10.00 மணி முதல் 13.00 மணி வரை தஃவா சென்டர் வளாகத்தில் நடைபெற்றது. இவ்வமர்வில் கிராஅத், பாங்கு, வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன.
இரண்டாம் அமர்வு 17.00 மணி முதல் 18.00 மணி வரை குட்டியாபள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம் சாதிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி கிராஅத்துடன் துவங்கியது. கோடைகால பயிற்சி முகாமில் தாம் பெற்ற அனுபவங்களை மாணவர்கள் உரையாக அளித்ததுடன், குறுநாடகங்களும் நடத்தினர்.
தொடர்ந்து நிகழ்ச்சித் தலைவர் ராமநாதபுரம் ஸாதிக், தஃவா சென்டரின் புனித குர்ஆன் கல்லூரி முதல்வர் மவ்லவீ ஷேக் அலீ ஃபிர்தவ்ஸீ உள்ளிட்டோர் - போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளித்து, அறிவுரைகளை வழங்கினர். பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இவ்வாறு, தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஃவா சென்டர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |