சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 41ஆவது செயற்குழுக் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூபாய் 3,08,475 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 41ஆவது செயற்குழுக் கூட்டம், 23.05.2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், எமது மன்றத்தின் தலைவர் ஹாஃபிழ்.M.A. ஷெய்கு தாவூத் இத்ரீஸ் அவர்களின் இல்லத்தில் செயற்குழு உறுப்பினர் M.S. நயீமுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
செயற்குழு உறுப்பினர்கள் ஹாபிழ்.S.A.C. அஹ்மது ஸாலிஹ் அவர்கள் இறைமறை ஓதி இக்கூட்டத்தை துவக்கி வைக்க, உமர் அப்துல் லத்தீப் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு:
கடந்த செயற்குழுவுக்கும் இந்த செயற்குழுவுக்கும் இடையில் கிட்டத்தட்ட 2 மாத இடைவெளியில் ஷிஃபா மூலம் பெறப்பட்ட 21 கடிதங்கள் சக உறுப்பினர்களின் முன்னிலையில் வாசித்து ரூ. 1,82,725/ மருத்துவ தேவைகளுக்கு வழங்கப்பட்டது. அதே போல் நேரடியாக பெறப்பட்ட கல்வி (பொறியியல் மற்றும் பி எட்.) வகைக்கு ரூ. 34,250/, அடுத்து இதர திட்ட தேவைகளுக்கு கிட்டத்தட்ட ரூ. 91,500, ஆக மொத்தம் ரூபாய் 3, 08,475/ ஒதுக்கீடு செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த வருடம் 2013 செப்டம்பர் திங்கள் ஷிஃபா அமைப்பு துவங்கிய நாள் முதற்கொண்டே RKWAவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்து வருகிறது, எல்லாம் வல்ல இறைவனனின் உதவி கொண்டும் மற்றும் மன்றத்தின் நாடி துடிப்பான எங்களது உறுப்பினர்களின் சந்தா மற்றும் நன்கொடைகளை கொண்டே இத்தகைய நற்காரியங்களை செய்ய சாத்தியம் என்று இந்த தருணத்தில் நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம்.
K.M.T. மருத்துவமனைக்கு நிதியுதவி:
அடுத்து நமதூர் கே.எம்.டி. மருத்துவமனையிலிருந்து மருத்துவ உபகரணங்கள் தேவைக்கு உதவி கேட்டு வந்த கடிதத்தை எம்மன்ற ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோதரர் நுஸ்கி அவர்கள் வாசித்து காட்ட, இன்ஷா அல்லாஹ் நம்மால் இயன்ற அளவு ஒத்துழைப்பு வழங்குவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறப்புத் தகுதி மதிப்பெண்: (கட்-ஆஃப்):
எம்மன்றம் முன்னர் அறிவித்தபடி cut off மதிப்பெண் விகிதாச்சார அடிப்படையில் தேர்ச்சி பெற்ற நமதூர் பள்ளியில் பயின்ற கிட்டத்தட்ட 37 மாணவ-மாணவியருக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 41,500/ ஒதுக்கப்பட்டது. இப்பரிசைப் பெறக்கூடியவர்கள் பற்றிய விவரங்கள் அந்தந்தப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கப்பட்டது. இத்தொகையை இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் உடன் இணைந்து நடத்தும் மாநிலத்தின் “சந்தியுங்கள் முதல் மாணவரை - 2014” நிகழ்ச்சி மேடையில் வழமை போல் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனைத்து மாணவ-மாணவியரின் மதிப்பெண் பட்டியலை ஊரிலிருந்து அனுப்பி தந்த எம்மன்ற துணைப்பொருளாளர் வெள்ளி சித்திக் அவர்களை இக்கூட்டம் மனதாரப் பாராட்டுகிறது.
ரமழான் உணவுத் திட்டம்:
கடந்த வருடங்களைப் போல் இவ்வருடமும் ரமழான் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது என்றும் அதற்கு FM ஸ்டோர்ஸ்-இல் இவ்வருடம் பொருட்களை வாங்குவதென்று தீர்மானிக்கப்பட்டு, எங்கள் காயல் பிரதிநிதி சகோதரர் தர்வேஷ் முகம்மதுவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
மேற்படி இப்பணி துரிதப்படுத்தும் விதமாக அனைத்து RKWA உறுப்பினர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்பட்டு, அதற்குண்டான உறுப்பினர்களின் பங்களிப்பைப் பெறுவதற்கு மன்ற துணைசெயலாளர் சகோதரர் முஹ்சின் முனைப்புடன் கேட்டு கொண்டார்.
இமாம், முஅத்தீன் நலத்திட்டம்:
பாங்காக் (தக்வா) மன்றம் மூலம் பெறப்பட்ட மின்னஞ்சலை அனைத்து உறுப்பினர்களின் முன்னிலையில் மன்ற செயலாளர் ஸூஃபி இப்ராஹிம் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டு இவ்வருடம் இமாம் மற்றும் முஅத்தின் ஒரு மாத ஊக்கத்தொகை திட்டத்தில் இணைவதென்று தீர்மானிக்கப்பட்டு அதற்கு ரூபாய் 25,000/ ஒதுக்கீடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருமண வாழ்த்து:
எம்மன்ற செயற்குழு உறுப்பினர் A.R. இப்ராஹிம் ஃபைசலின் சகோதரர் மன்ற உறுப்பினர் A.R புகாரி ஷரிப் அவர்களின் திருமண வாழ்வுக்காக துஆ செய்து வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
பார்வையாளர்கள் கருத்து:
சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர் ஆதில் அவர்கள் தம்மை இக்கூட்டம் மிகவும் கவர்ந்ததாகவும், அனைத்து கடிதங்களும் மிக நேர்த்தியாக கையாளப்பட்டு அனைத்திற்கும் சிறப்பாக பண ஒதுக்கீடு செய்வதை பாராட்டினார், அதோடு வருடத்திருக்கு 3 பொதுக்குழு வைத்து குறிப்பாக மே மாதம் நடத்தி ஒரு நாள் ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று ஆலோசனை கூறினார். (குறிப்பு: வருடத்திற்கு 2 பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, அதோடு ஒரு நாள் ஊதிய திட்டம் ரமலானில் நடக்கும் கூட்டத்தில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது). அவருடைய கருத்தை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இச்செயற்குழு கூட்ட ஒருங்கினைப்பாளர்களான சகோதரர்கள் ஹாஃபிழ்.M.A. ஷெய்கு தாவூத் இத்ரீஸ், M.N.முஹம்மது ஹசன், வாவு கிதர் முஹம்மது, உமர் அப்துல் லத்தீப் மற்றும் I.இஸ்மத் நவ்ஃபல் அவர்களின் அனுசரணையோடு நடாத்தப்பட்டது
நன்றி உரை:
செயற்குழு உறுப்பினர் I. இஸ்மத் நவ்ஃபல் அவர்களால் நன்றி உரை நிகழ்த்தப்பட்டு, இறுதியாக தலைவர் ஹாஃபிழ்.M.A. ஷெய்கு தாவூத் இத்ரீஸ் அவர்கள் துஆ ஓதி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓத, கூட்டம் நிறைவுபெற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.M.செய்யது இஸ்மாயில்
ஹாபிழ்.S.A.C. அஹ்மது ஸாலிஹ்
ஊடகக் குழு
ரியாத் காயல் நல மன்றம்
ரியாத் - சஊதி அரபிய்யா.
ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் முந்தைய (40ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |