கட்-ஆஃப் - சிறப்புத் தகுதி மதிப்பெண் தொடர்பாக, காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருக்கும், அவர்கள்தம் பெற்றோருக்கும், சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பில் பின்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது:-
அன்பான மாணவ இளவல்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் ரியாத் காயல் நல மன்றத்தின் கனிவான வேண்டுகோள்.
இவ்வருடம் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் வெற்றிக்கு முயன்று தவறிய மாணவர்களுக்கு மீண்டும் முயற்சிக்க வாழ்த்துக்களோடு...
கடந்த 3 வருடங்களாகவே எம் மன்றத்தின் சார்பாக cut off மதிப்பெண் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் பணப்பரிசினை இக்ரா அமைப்பு நடத்திவரும் சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை என்ற விழாவின் மேடையில் வழங்கி வருகிறோம் என்பதை நம் காயல் நகர மக்கள், மற்றும் மாணவர்களாகிய நீங்களும் நன்கு அறிவீர்கள் என்று நம்புகிறோம். கடந்த 2012-13 ஆம் வருடம் +2 தேர்வெழுதிய நமதூர் மாணவகண்மணிகளில், ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் எழுபதுக்கும் அதிகமாக இருந்தும் மருத்துவராக ஒருவரும் மெரிட் மூலம் தேர்வு செய்யப்படவில்லை, அதே போல் இவ்வருடமும் (2013-14) கிட்டத்தட்ட 100 பேர் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்தும் ஒரு மாணவர் கூட மெரிட் மூலம் மருத்துவம் படிப்பதற்கு தேர்வு ஆகவில்லை என்பது கசப்பான வேதனையுடன் கூடிய உண்மை என்பதில் மாற்று கருத்து இல்லை.
இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு எம் ரியாத் காயல் நல மன்றம் கடந்த ஆண்டு ஒரு பிரசுரத்தை எல்லா பள்ளிகூடங்களுக்கும் மற்றும் ஜும்ஆ தினத்தன்றும் விழிப்புணர்வாக வெளியிட்டு இருந்தோம். ஆனால் இவ்வாண்டு தேர்வு முடிவுகள் இன்னும் மாணவர்கள் அதை வெறும் நோட்டிசாக மட்டுமே பார்த்தது போல் உள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.
இனி வரும் கல்வியாண்டில் பெற்றோர்களாகிய நாமும் இதன் முக்கியத்துவத்தை அறிந்து இதனால் வெகுவாக குறையும் செலவுகளை கருத்தில்கொண்டு நம் மாணவச் செல்வங்களின் கல்வியறிவு மேம்பட நாமும் உறுதுணை நின்றால் அவர்களுடைய வெற்றிப்பயணம் மிக இலகுவாக எட்டா கனியையும் கூட எட்டிப்பிடிக்க வழி செய்து விடலாமே.
இதே அணுகுமுறையை பள்ளி ஆசிரியர்களும் கடை பிடிக்க அவர்களுக்கு தூண்டு கோலாக அமைத்து கொடுக்க வேண்டும். பிரசுரத்தில் கோடிட்டு காட்டிய இலகுவான வழியை கடை பிடித்தாலே இன்ஷா அல்லாஹ் நம் ஆண் / பெண் மாணவச்செல்வங்கள் கூடுதல் கட்டணமின்றி மருத்துவ கல்லூரியில் சேர வழி வகுக்கும், அதே நேரத்தில் கல்லூரி வாயில்களும் நம்மை அழைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இத்துடன் 2014 இவ்வருடம் RKWA சார்பாக வழங்கப்படும் cut off விகிதாசாரத்தில் அடிப்படையின் கீழ் பரிசு பெறும் நமதூர் பள்ளியின் மாணவக் கண்மணிகளின் பெயர் மற்றும் பரிசுத்தொகை விவரம் வருமாறு:-
[படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
இப்பரிசினை எம்மன்ற காயல் பிரதிநிதி சகோதரர் தர்வேஷ் முஹம்மது அவர்களை இக்ரா அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பரிசளிப்பு விழா (சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை) தேதியை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.M.செய்யது இஸ்மாயில்
ஊடகக் குழு
ரியாத் காயல் நல மன்றம்
ரியாத் - சஊதி அரபிய்யா.
ரியாத் காயல் நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |