சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலீ - நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக, நாளை (மே 31) காயல்பட்டினம் வருகை தருகிறார்.
அவரது வருகையையொட்டி, காயல்பட்டினம் துளிர் காணொளி கூடத்தில், அன்று 16.30 மணிக்கு, சட்டம் - நீதி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், முஸ்லிம் தனியார் சட்ட நடைமுறைகள், கட்டாய திருமணப் பதிவுச் சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், பொதுநல வழக்குகளும் - தீர்ப்புகளும், உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி நடைபெறவிருக்கும் இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வருமாறு, துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் நிறுவனர் வழக்குரைஞர் எச்.எம்.அஹ்மத் கேட்டுக்கொண்டுள்ளார்.
துளிர் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |