மத்ரஸத்துல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவின் சார்பில் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் 9 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது - பட்டம் பெற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில், மத்ரஸத்துல் அஸ்ஹர் லி தஹ்ஃபீழில் குர்ஆனில் கரீம் எனும் பெயரில் திருக்குர்ஆன் மனனப் பிரிவு - பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவிலும், வெளியூர்களைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளூரில் தங்கியவாறும் இப்பிரிவில் பயின்று வருகின்றனர்.
இந்த மத்ரஸாவின் 13ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமளிப்பு விழா ஆகியன, 04.05.2014 ஞாயிற்றுக்கிழமையன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ விழாவிற்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் மேலாளர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா, தம்மாம் இஸ்மாஈல் ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர்.
பட்டம் பெறும் மாணவர்கள் பங்கேற்பில் பின்வருமாறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன:-
ஏ.எஸ்.சுவைலிம் திருக்குர்ஆன் வசனங்களை கிராஅத்தாக ஓதி துவக்கி வைக்க, எம்.என்.அஸ்லம் அதற்கான தமிழாக்கத்தை வாசித்தார். எம்.ஏ.முஹம்மத் நூஹ் ஆங்கிலத்திலும், கே.ஃபாரூக் அப்துல்லாஹ் தமிழிலும் உரை நிகழ்த்தினர். மத்ரஸாவில் கற்ற அனுபவங்கள் குறித்து எஸ்.எச்.ஜியாஉல் அமீன் உரையாற்றினார்.
தொடர்ந்து, திருமறை குர்ஆன் மனனத்தைப் பாதுகாப்பதன் அவசியம் - அதன் முறைமைகள் குறித்து, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ அறிவுரையாற்றினார்.
மத்ரஸாவின் பாடத்திட்டங்கள், வகுப்புகள் நடைபெறும் முறை, மாணவர்கள் பயிற்றுவிக்கப்படும் முறைகள் குறித்து, மத்ரஸா முதல்வரும் – அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் நூஹ் அல்தாஃபீ விளக்கவுரையாற்றினார்.
பின்னர், இந்த மத்ரஸாவில் பயின்று - திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள
(1) ஹாஃபிழ் ஏ.எஸ்.கவ்து சுவைலிம்
த.பெ. அப்துல் ஸமத்
பெரிய நெசவுத் தெரு, காயல்பட்டினம்
(2) ஹாஃபிழ் கே.ஃபாரூக் அப்துல்லாஹ்
த.பெ. காதர் முஹ்யித்தீன்
திருநெல்வேலி
(3) ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் நூஹ்
த.பெ. ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் அலீ (48)
மகுதூம் தெரு, காயல்பட்டினம்
(4) எஸ்.ஐ.ஆர்.அஹ்மத் பஷீர்
த.பெ. செய்யித் இஸ்மாஈல் ரியாஸ்
தைக்கா தெரு, காயல்பட்டினம்
(5) ஹாஃபிழ் எஸ்.எச்.ஜியாவுல் அமீன்
த.பெ. ஷாஹுல் ஹமீத்
அலியார் தெரு, காயல்பட்டினம்
(6) ஹாஃபிழ் ஆர்.எஸ்.முஹம்மத் இஸ்மாஈல்
த.பெ. ரஜப் ஸிராஜுத்தீன்
அலியார் தெரு, காயல்பட்டினம்
(7) ஹாஃபிழ் கே.எஸ்.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ் மக்கீ
த.பெ. செய்யித் முஹம்மத் அஜ்வாத்
குத்துக்கல் தெரு, காயல்பட்டினம்
(8) ஹாஃபிழ் எம்.என்.அஸ்லம்
த.பெ. முஹம்மத் நூஹ்
தீவுத்தெரு, காயல்பட்டினம்
(9) ஹாஃபிழ் எம்.என்.ஸதக்கத்துல்லாஹ் முஹாஜிர்
த.பெ. முஹம்மத் நூஹ்
மகுதூம் தெரு, காயல்பட்டினம்
ஆகிய 9 மாணவர்களுக்கு, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது - பட்டம் வழங்கப்பட்டது. பள்ளி மற்றும் மத்ரஸா நிர்வாகிகள், ஆசிரியர்கள் பட்டச் சான்றிதழ்களை வழங்க, மாணவர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - நாகர்கோயில் அல்ஜாமிஅத்துல் ஃபிர்தவ்ஸிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.செய்யித் அலீ ஃபைஜீ வாழ்த்துரை வழங்கினார். மார்க்க அடிப்படைகள் மறைந்து வரும் இக்காலகட்டத்தில், மார்க்கக் கல்வியைக் கற்றல், அதன்படி செயலாற்றல், அதனைக் கற்றறிந்தவர்களுக்கு அளிக்க வேண்டிய கண்ணியம் உள்ளிட்டவை குறித்து விரிவாக உரையாற்றியதோடு, பட்டம் பெற்ற மாணவர்களையும் வாழ்த்திப் பேசினார்.
பின்னர் பரிசளிப்பு விழா துவங்கியது. மே மாதம் 03, 04 நாட்களில் நடைபெற்ற கிராஅத், பேச்சு, வினாடி-வினா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்ற மாணவர்களுக்கு - சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் ‘ஹாஃபிழ் மாணவ-மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் திட்ட’த்தின் கீழ் ஊக்கத்தொகையாக 2 ஆயிரத்து 500 ரூபாய் பரிசளிக்கப்பட்டது. அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் அவற்றை வழங்க, பட்டம் பெற்ற 9 மாணவர்களும் பெற்றுக்கொண்டனர்.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத்தினர், பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோர் உட்பட - நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும், மத்ரஸா ஆசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் இம்ரான் உமரீ, ஹாஃபிழ் எஸ்.எம்.பி.செய்யித் முஹம்மத், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத், அதன் முஅத்தின் ஏ.எச்.லுக்மான், ஒளிப்பதிவாளர் எம்.ஏ.அப்துல் ஜப்பார், எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் உள்ளிட்டோர் இணைந்து செய்திருந்தனர்.
படங்கள்:
மவ்லவீ S.I.தவ்ஹீத் ஜமாலீ மூலமாக,
ஹாஃபிழ் K.S.முஃபீஸுர்ரஹ்மான்
அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவின் சார்பில் கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கப்பூர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |